பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~78 பெரிய புராண விளக்கம்-சி " மனத்தகத்தான் தலைமேலான் வாக்கின் உள்ளான் வாயாரத் தன்னடியே பாடும் தொண்டர் இனத்தகத்தான் இமையவர்தம் சிரத்தின் மேலான் ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன் புணத்தகத்தான் நறுங்கொன்றைப் போதி னுள்ளான் பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றின் உள்ளான் கனத்தகத்தான் கயிலாயத் துச்சி உள்ளான் காளத்தி யானவனென் கண்ணு ளானே.” இந்தத் தலத்தைப் பற்றி நட்டராகப் பண்ணில் சுந்தர மூர்த்தி நாயனார் பாடி யருளிய ஒரு பாசுரம் வருமாறு: இமையோர் நாயகனே இறைவாவென் - - . இடர்த்துணையே கமையார் கருணையினாய் கருமாமுகில் " • போல்மிடற்றாய் உமையோர் கூறுடையாய் உருவே திருக் காளத்தியுள் அமைவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே." பிறகு வரும் 344-ஆம் கவியின் கருத்து வருமாறு : "இப் பொன்முகலி ஆற்றில் ஒடும் பரிசுத்தமாகிய ஆழ மான தீர்த்தத்தில் முன்னால் முழுகிவிட்டு அழகு பொருந்தி யிருக்கும் காளத்தி மலையினுடைய அடிவாரத்தில் அந்த நாயனார் சீகாளத்தி ஈசுவரரைத் தம்முடைய தலை தரை யில் படியுமாறு விழுந்து வணங்கிவிட்டுப் பிறகு தரையிலி ருந்து எழுந்து நின்று கொண்டு சிவந்த கண்களைப் பெற்ற இடப வாகனத்தை ஒட்டும் ஒப்பற்ற பாகராகிய அந்தச் "... 87656 ஈசுவரர் நிலைபெற்று எழுந்தருளி பிரு க்கும் அந்தக் காளத்தி மலையின்மேல் அந்த நாயனார் ஏறிச் சென்று அந்தக் காளத் தியீசுவரருடைய திருக் கோயிலை வலமாக வந்து அந்த ஈசுவரரைப் பணிபவரானார். பாடல் கவருமாறு: -