பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பெரிய புராண விளக்கம்

  • பரிவின் தன்மை உருவுகொண் டனையவன்

போழ்வார் போர்த்த காழகச் செருப்பினன் குருதி புலராச் சுரிகை எஃகம் அரையிற் கட்டிய உடைதோற் கச்சையன் தோல்நெடும் பையிற் குறுமயிர் திணித்த வாரில் வீக்கிய வரிக்கைக் கட்டியன் உழுவைக் கூனுகிர் கேழல்வெண் மருப்பு மாறுபடத் தொடுத்த மாலை உத் தரியன் நீலப் பீலி நெற்றி சூழ்ந்த காணக் குஞ்சிக் கவடி புல்லினன் முடுகு நாறு குடிலை யாக்கையன் வேங்கை வென்று வாகை சூடிய சங்கரன் தன்னினத் தலைவன் ஓங்கிய வில்லும் அம்பும் நல்லன தாங்கி ஏற்றுக் கல்வனம் காற்றில் இயங்கிக் கணையில் வீழ்த்துக் கருமா அறுத்துக் கோலின் ஏற்றிக் கொழுந்திக் காய்ச்சி நாவில் வைத்த நாட்போ னகமும் தன்றலைச் சொருகிய தண்பள்ளித் தாமமும்: வாய்க்க லசத்து மஞ்சன நீரும் கொண்டு கானப் பேருறை கண்ணுதல் முடியிற் பூசை அடியால் நீக்கி நீங்காக் குணத்துக் கோசரிக் கன்றவன் நேசம் காட்ட முக்கண் அப்பனுக் கொருகனில் உதிரம் தக்கி ணத்திடை இழிதர அக்கணம் அழுது விழுந்து தொழுதெழுந் தாற்றிப் புன் மருந் தாற்றப் போகா தென்று தன்னை மருந்தென்று மலர்க்கண் அப்ப ஒழிந்தது மற்றை ஒண் திரு நயனம் பொழிந்த கண்ணிர்க் கலுழி பொங்க