பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 8$总 அற்ற தென்று மற்றக் கண்ணையும் பகழித் தலையால் அகழ ஆண்டகை ஒருகை யாலும் இருகை பிடித்து ஒல்லை நம்புண் ஒழிந்தது பாராய் நல்லை நல்லை எனப் பெறும் திருவேட் டுவர்தம் திருவடி கைதொழக் கருவேட் டுழல்வினைக் காரியங் கெடுமே.” என்று கல்லாட தேவ நாயனார் பாடியருளிய திருக்க கண்ணப்ப தேவர் திருமறத்திலும் இந்தத் தலத்தைப் பற்றிய செய்திகள் வருவதைக் காண்க. பிறகு வரும் 345-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அந்தத் திருநாவுக்கரசு நாயனார் தன்னுடைய திருச்ா செவிகளில் அணிந்து கொண்ட வெண்மையாகிய சங்கக் குழைகளைப் பெற்றவனை, திருக்காளத்தி மலையில் எழுந் தருளியுள்ள கொழுந்து போன்றவனை, இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் திருவாய் மலர்ந்தருளிச் செய்த மூல புருடனைத் தரையில் விழுந்து அந்த நாயனார் பணிந்து விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு பெரியதாக விளங்கும் விருப்பத்தைச் செய்யும் தம்முடைய திருவுள்ளம் களிப்பை அடையவும் தம்முடைய கண்கள் களிப்பை அடையவும் பரவசமாகி அந்தத் தலைவனாகிய காளத்தி ஈசுவரனை, "என் கண்ணுளான் என்று வரும் ஒரு திருத்தாண்டகத்தை அந்த நாயனார் பாடியருளினார்." பாடல் வருமாறு: " காதணிவெண் குழையானைக் காளத்தி மலைக் கொழுந்தை வேதமொழி மூலத்தை விழுந்திறைஞ்சி எழுந்துபெருங் காதல்புரி மனம்களிப்பக் கண்களிப்பப் பரவசமாய் காதனை, என் கண்ணுளான்' எனுந்திருத்தாண் டகம் - நவின்றார்.’’