பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

浔4 பெரிய புராண விளக்கம் காது-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் தன்னுடைய திருச்செவிகளில்; ஒருமை பன்மை மயக்கம். அணி-அணிந்து கொண்ட வெண்-வெண்மையாகிய, குழையானை. சங்கக் குழைகளைப் பெற்றவனை. குழை: ஒருமை பன்மை மயக் கம். க்:சந்தி. காளத்தி மலை-திருக்காளத்தி மலையில் எழுந்தருளியிருக்கும். க்:சந்தி. கொழுந்தை-கொழுந்தைப் போன்றவனை உவம ஆகுபெயர். வேதம்-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும்; ஒருமை பன்மை மயக்கம். மொழி. திருவாய் மலர்ந்தருளிச் செய்த மூலத்தை-மூலபுருடனை. விழுந்து-தரையில் விழுந்து. இறைஞ்சி-அந்த நாயனார் பணிந்து விட்டு. எழுந்து-பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு. பெரும்-பெரியதாக விளங்கும். காதல்விருப்பத்தை. புரி-செய்யும். மனம்-தம்முடைய திருவுள்ளம். களிப்ப-மகிழ்ச்சியை அடையவும். க்:சந்தி. கன்-தம்முடைய இரண்டு கண்களும்; ஒருமை பன்மை மயக்கம். களிப்ப-ஆனந் தித்தை அடையவும். ப்:சந்தி. பரவசமாய்-தன் வசத்தை இழந்து பரவசமாகி. நாதனை-தம்முடைய தலைவனாகிய அந்தக் காளத்தி ஈசுவரனை. என் கண்ணுளான்” எனும்"என் கண்ணுளான்' என்று வரும்; எனும்: இடைக்குறை. திருத்தாண்டகம்-ஒரு திருத்தாண்டகத்தை. நவின்றார்அந்த நாயனார் பாடியருளினார். காளத்தி மலைக் கொழுந்து: மாகமார் திருக்காளத்தி மலையெழு கொழுந்தாயுள்ள ஏகநாயகரைக் கண்டார்' என்று பெரிய புராணத்தில் வருவதைக் காண்க. பிறகு உள்ள 346-ஆம் கவியின் கருத்து வருமாறு : "அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அந்தக் காளத்தி மலையினுடைய சிகரத்தில் எழுந்தருளியிருக்கும் சிகா ரத்தினத்தைப் போன்ற காளத்தி ஈ. சு வர ரு ைட ய பக்கத்தில் அடைந்து அந்த ஈசுவரருடைய சந்நிதியில் நின்றுகொண்டிருக்கும் வில்லை ஏந்திய விசாலமாகிய