பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் . 85 கையைப் பெற்ற கண்ணப்ப நாயனாருடைய திருவடிகளை அடைந்து அந்த நாயனாரை வணங்கிவிட்டு அலை அலை யாகப் பொங்கித் தரையில் விழும் கண்களிலிருந்து அருவி யைப் போல நீர் சொரிய அவருடைய திருமேனியின் மேல் பாய்ந்து தரையில் இறங்கி வழிய அந்த நாயனார் தம்மு டைய தலையின்மேல் கூப்பிக் கும்பிட்ட கைகளை உடைய வராய் மீண்டும் அந்த ஈசுவரரைத் தரையில் விழுந்து வணங்கிவிட்டு அந்தக் காளத்தி ஈசுவரருடைய திருக்கோயி லுக்கு வெளியே வந்து சேர்ந்தார். பாடல் வருமாறு : ' மலைச்சிகரச் சிகாமணியின் மருங்குறமுன் னேநிற்கும் சிலைத்தடக்கைக் கண்ணப்பர் திருப்பாதம் சேர்ந்திறைஞ்சி அலைத்துவிழும் கண்ணருவி ஆகத்துப் பாய்ந்திழியத் தலைக்குவித்த கையினராய்த் தாழ்ந்துபுறம் போந்தணைந்தார்.' மலை. அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அந்தக் காளத்தி மலையினுடைய. ச்:சந்தி. சிகர-சிகரத்தில் எழுந்தருளி அயிருக்கும். ச்:சந்தி, சிகாமணியின்-தலையில் அணியும் இரத்தினத்தைப் போன்ற காளத்தி ஈசுவரருடைய உவம ஆகு பெயர். மருங்கு-பக்கத்தில் உற-அடைந்து: எச்சத் திரிபு. முன்-அந்த ஈசுவரருடைய சந்நிதியில். ஏ:அசை நிலை, நிற்கும்-நின்று கொண்டிருக்கும். சிலை-வில்லை ஏந்திய, த்:சந்தி, தடவிசாலமாக உள்ள கி:சந்தி. கை.கையைப் பெற்ற. க்:சந்தி, கண்ணப்பர்-கண்ணப்ப நாய னாருடைய திரு.அழகிய, ப்:சந்தி. பாதம்-திருவடிகளை; ஒருமை பன்மை மயக்கம். சேர்ந்து-அடைந்து. இறைஞ்சி. அந்த நாயனாரைத் திருநாவுக்கரசு நாயனார் வணங்கி விட்டு, அலைத்து-அலை அலையாகப் பொங்கிக் கொண்டு. விழும்-தரையில் சிந்தும். கண்-அவருடைய கண்களிலிருந்து: ஒருமை பன்மை மயக்கம். அருவி-மலையிலிருந்து மீறிவரும் அருவியைப் போல நீர் உவம ஆகு பெயர். ஆகத்து-அந்த தி-6