பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பெரிய புராண விளக்கம் நாயனாருடைய திருமேனியின் மேல். ப்:சந்தி. பாய்ந்து இழிய-பாய்ந்து தரையில் இறங்கி வழிய, த்:சந்தி. தலைதம்முடைய தலையின்மேல், க்:சந்தி. குவித்த-கூப்பிக்: கும்பிட்ட. கையினராய்-கைகளைப் பெற்றவராகி, ஒருமை: பன்மை மயக்கம். த்:சந்தி. தாழ்ந்து-மீண்டும் அந்த ஈசு வரரை அந்த நாயனார் தரையில் விழுந்து வணங்கிவிட்டு, புறம்-அந்தக் காளத்தி ஈசுவரருடைய திருக்கோயிலுக்கு: வெளியில், போந்து-எழுந்தருளி, அனைந்தார்-சேர்ந்தார். அடுத்து உள்ள 347-ஆம் கவியன் கருத்து வருமாறு: அந்த அறுபத்து நான்கு கலைகளில் உள்ள உண்மை களை அறிந்து கொண்ட அரசராகிய அந்தத் திருநாவுக்கரசு. நாயனார் ஆகாயத்தளவும் உயர்ந்து விளங்கும் அழகிய அந்தக் காளத்தி மலையில் அந்த நாயனார் தங்கிக் கொண் டிருந்து தமக்கு உரிய உழவாரத் திருப்பணியையும் வேறு பல திருப்பணிகளையும் புரிந்துகொண்டு வஜ்ரத் தம்பத்தைம்: போல விளங்கும் அந்தக் காளத்தி ஈசுவரரை அந்த மலை யின் மேல் திருநாவுக்கரசு நாயனார் ஏறி அந்த ஈசுவரரு. டைய திருவடிகளை வணங்கிய எண்ணத்தோடு பக்தர்கள் தரிசிக்க விரும்பும் அழகிய கயிலாய மலையின் மேல் அமர்ந்: திருந்த கைலாச பதியினுடைய பெருமையைப் பெற்று, விளங்கும் திருக்கோலத்தைத் தரிசிக்கும் அந்தச் செயலை: அந்த நாயனார் விரும்பினார் பாடல் வருமாறு: " சேண்கிலவு திருமலையில் திருப்பணியா யினசெய்து தானுவினை அம்மலைமேல் தாள் பணிந்த குறிப்பினால் பேணுதிருக் கயிலைமலை வீற்றிருந்த பெருங்கோலம் காணுமது காதலித்தார் கலைவாய்மைக் காவலனார்.’’ இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள்கோள் வந்தது. கலை-அறுபத்து நான்கு கலைகளில் உள்ள ஒருமை பன்மை மயக்கம். அந்தக் கலைகள் இன்ன என்பதை முன்பே ஓரிடத். தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. வாய்மை-உண்மை களை அறிந்து கொண்ட ஒருமை பன்மை மயக்கம், க்:சந்தி.