பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் g7 காவலனார்-அரசராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார். சேண்-ஆகாயத்தின் அளவும் உயர்ந்து. சிலவு-விளங்கும் திரு-அழகிய, மலையில்-அந்தக் காளத்தி மலையில். திருப் பணியாயின-தமக்கு உரிய உழவாரத் திருப்பணியையும் வேறு திருப்பணிகளும் ஆக உள்ள திருப்பணிகளை. பணி: ஒருமை பன்மை மயக்கம். செய்து.புரிந்து கொண்டு தானு: வினை-வஜ்ரத் தம்பத்தைப் போல விளங்கும் அந்தக் காளத்தி ஈசுவரரை: உவம ஆகு பெயர். அம்மலை மேல். அந்தக் காளத்தி மலையின் மேல் திருநாவுக்கரசு நாயனார் ஏறி. தாள். அந்த ஈசுவரருடைய திருவடிகளை; ஒருறை பன்மை மயக்கம். பணிந்த-வணங்கிய. குறிப்பினால். எண்ணத்தோடு; உருபு மயக்கம். பேணு-பக்தர்கள் தரிசிக்க விரும்பும். திரு-அழகிய க்:சந்தி. கயிலை மலை.கயிலாய மலையின் மேல். வீற்றிருந்த-அமர்ந்து கொண்டிருந்த, பெரும்-கைலாச பதியினுடைய பெருமையைப் பெற்று விளங்கும். கோலம்-திருக் கோலத்தை. காணும்.தரிசிக்கும். அத-அந்தச் செயலை, காதலித்தார்.அந்த நாயனார் விரும்பினார். - பிறகு உள்ள 348-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:"அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அழகிய கண்களைப் பெற்ற வரும், பெரிய காளத்தி மலையின் மேல் எழுந்தருளி யிருக்கும் மருந்தைப் போன்றவராகிய காளத்தி ஈசுவரரை அந்த நாய னார் பணிந்துவிட்டு அந்தக் காளத்தியீசுவரர் வழங்கிய நிரம்பிய திருவருளினால் மிகவும் தம்முடைய திரு வுள்ளத்தில் பொங்கி எழும் விருப்பத்தோடு வடக்குத் திசை யின் மேல் விருப்பத்தோடு எழுந்தருள்பவராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பரிசுத்தமாக விளங்கும் பெரிய மலையையும், காட்டாற்றையும், அவற்றோடு சேர்ந்து ள்ள வட நாட்டைத் தாண்டி எழுத்தருளிய பிறகு சிவப்பாக விளங்கும் கண்களைப் பெற்ற திருமாலாகிய இடப வாக னத்தை ஒட்டும் கலைவராகிய பருப்பத நாதர் விரும்பித்