பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 7 இந்தத் தலத்தைப்பற்றி மேகராகக் குறிஞ்சிப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: வெந்த வெண்பொடிப் பூசும் மார் பின் விரிநூல் ஒருபாற் பொருந்தக் கந்தம் மல்கு குழலி யோடும் கடிபொழிற் கச்சி தன்னுள் அந்தமில் குணத் தாரவர் போற்ற அணங்கினோ டாடல் புரி எந்தை மேவிய ஏகம்பம் தொழு தேத்தஇடர் கெடுமே.”* அந்த நாயனார் இந்தளப் பண்ணில் பாடியகுளிய ஒரு பாசுரம் வருமாறு: மறையானை மாசிலா புன்சடை மல் குவெண் பிறையானைப் பெண்ணோ டாணாகிய பெம்மானை இறையானை ஏர்கொள் கச்சித் திருவேகம்பத் துறைவானை அல்லதுள் காதென துள்ளமே. ’’ அந்த நாயனார் கொல் லிப் பண்ணில் பாடியருளிய திருவிருக்குக்குறள் ஒன்று வருமாறு : - கருவார் கச்சித் திருவேகம்பத் தொருவா என்ன-மருவாவினையே. அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருவியமகப் பாசுரம்' வருமாறு: ஒருடம்பினை ஈருரு வாகவே உன்பொருட் டிறமீருரு வாகவே யாருமெய் தற்கரிது பெரிதுமே ஆற்றல் எய்தற்கரிது பெரிதுமே தேரரும் மறியாது திகைப்பரே சித்த மும்மறியாது திகைப்பரே கார் நிறத்த மணர்க்கொரு சம்பமே கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே."