பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 - பெரிய புராண விளக்கம் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் பூரீசைலத்தை அந்த நாயனார் அடைந்தார். பாடல் வருமாறு: அங்கண் மாமலை மேல்ம ருங்தை வணங்கி யாரருளால் மிகப் பொங்கு காதலின் உத்த ரத்திசை மேல்விருப்பொடு போது வார் துங்க மால்வரை காணி யாறு தொடர்ந்த நாடு கடந்தபின் செங்கண் மால்விடை அண்ணல் மேவு திருப்ப ருப்பதம் - எய்தினார்.’’ அம்-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அழகிய, கண்கண்களைப் பெற்றவரும்; ஒருமை பன்மை மயக்கம்: ஆகு பெயர். மா.பெரிய. மலைமேல்-காளத்தி மலையின் மேல். மருந்தை-எழுந்தருளியிருக்கும் மருந்தைப் போன்றவராகிய காளத்தி ஈசுவரரை; உவம ஆகு பெயர். வணங்கி-அந்த நாயனார் பணிந்து விட்டு. ஆர்-அந்தக் காளத்தியீசுவரர் வழங்கிய நிரம்பிய, அருளால்-திருவருளினால். மிக-மிகவும். ங்:சந்தி. பொங்கு-தம்முடைய திருவுள்ளத்தில் பொங்கி எழும். காதலின்-விருப்பத்தோடு. உத்தரத்திசை மேல்வடக்குத் திசையின் மேல். விருப்பொடு-விருப்பத்தோடு. போதுவார்-எழுந்தருளுபவராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார். துங்க-பரிசுத்தமாக விளங்கும். மால்-பெரிய, வரை-மலையையும். கானியாறு-காட்டாற்றையும். இ:குற். தறியலிகரம். தொடர்ந்த-அவற்றோடு சேர்ந்துள்ள. நாடு. வட நாட்டை, கடந்த-தாண்டி எழுந்தருளிய, பின்-பிறகு, செம்-சிவப்பாக விளங்கும். கண்-விழிகளைப் பெற்ற ;ஒருமை பன்மை மயக்கம். மால்-திருமாலாகிய, விடை-இடப வாக னத்தை ஒட்டும். அண்ணல்-தலைவராகிய பருப்பத நாதர். மேவு-விரும்பித் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக் கும். திருப்பருப்பதம்-பூரீசைலத்தை, எய்தினார்.அந்த நாயனார் அடைந்தார்.