பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் so திருப்பருப்பதம்: இது வட நாட்டில் உள்ள பூரீசைலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் பருப்பத நாதர். அம்பிகை பருப்பத நாயகி. மல்லிகார்ஜுனபுரம் எனவும் இந்தச் சிவத்தலம் வழங்கும். கர்னூல் மாவட்டத்தில் உள்ள நந்தியால் என்னும் ஊருக்கு வடகிழக்குத் திசையில் 60 மைல் தூரத்தில் இந்தத் தலம் இருக்கிறது. கச்சி தேவர் பர்வத வடிவமாக இருந்து பருப்பத நாதரைச் தாங்கிக் கொண்டிருக்கும் தலம் இது.

  • பருப்ப தப்பெயர்ச் சிவாதனம் பாலகன் பரமன்

இருப்ப வோர்வரை யாவனென் றருந்தவ மியற்றிப் பொருப்ப தாகியே ஈசனை முடியின்மேல் புனைந்த திருப்ப ருப்பதத் தற்புதம் யாவையும் தெரிந்தான்." என்ற கந்தபுராணத்தில் வருவதைக் காண்க. இந்தத் தலத்தைப் பற்றி வியாழக்குறிஞ்சிப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: சுடுமணி உமிழ்நாகம் சூழ்தர அரைக்கசைத்தான் இடுமணி எழிலானை ஏறவன் எருதேறி விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப் படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே." இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய ஒரு திருநேரிசை வருமாறு : அங்கன்மால் உடைய ராய ஐவரால் ஆட்டுணாதே உங்கள் மால் தீரவேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும் செங்கண் மால் பரவிஏத்திச் சிவனென நின்ற செல்வர் பைங்கண்வெள்ளேறதேறிப் பருப்பதம் நோக்கி னாரே,