பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$90 பெரிய புராண விளக்கம்-8 இந்தத் தலத்தைப்பற்றி நட்ட பாடைப் பண்ணில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வரு மாறு : ' மலைச்சாரலும் பொழிற்சாரலும் புறமேவரும் இனங்கள் மலைப்பாற்கொணர்ந் திடித்துாட்டிட மலங்கித்தன களிற்றை அழைத்தோடியும் பிளிறியவை அமைந்துவந் தெய்த்துத் திசைத்தோடித்தன் பிடிதேடிடும் சீர்ப்பத மலையே." பிறகு வரும் 349-ஆம் பாடலின் கருத்து வருமாறு : "அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பெருமையைப் பெற்ற வித்தியாதரர்களும், தேவலோகத்தில் வாழும் தேவர்களும், யட்சர்களும்,சித்தர்களும்,இனிய சங்கீதத்தைப் பாடும் கின்னரர்களும், நாக அரசர்களும், காம காரிகளே முதலாக உள்ள சிவஞானத்தைப்பெற்ற மெளனவிரதிகளும், ஒவ்வொரு நாளும் நம்பராகிய பருப்பத நாதரை அந்த பூர்சைலத்துக்கு எழுந்தருளி வந்து வணங்கிவிட்டு பல வகை யான நன்மைகளை அடையும் சிவத்தலமாகிய அந்த அழகிய துரிசைலத்தை அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அடைத்து பருப்பதநாதரைப் பணிந்துவிட்டு சொற்கவை, பொருட் சுவை என்னும் வளங்களைப் பெற்ற செந்தமிழ் மொழியில் அமைந்த ஒரு திருப்பதிகத்தை அந்த நாயனார் பாடியருளி னார். பாடல் வருமாறு : மான விஞ்சையர் வான காடர்கள் வான்இயக்கர்கள் х - சித்தர்கள் கான கின்னரர் பன்ன காதிபர் காம காரிக ளேமுதல் ஞான மோனிகள் நாளும் நம்பரை வந்தி றைஞ்சி' கலம்பெறும் தான மானதி ருச்சிலம்பை வணங்கி வண்டமிழ் ‘. . . . . . சாற்றினார்."