பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பெரிய புராண விளக்கம்--இ. எழுந்தருளுவதற்கு எண்ணி எழுந்ததாகிய ஒப்பற்ற தம்மு. டைய திருவுள்ளத்தோடு எந்தப் பக்கங்களிலும் ஒரு விரும்: பம் இல்லாமல் இரண்டு பக்கங்களிலும் வியப்பை அடைந்த மக்கள் பக்கத்தில் வந்து சேரும் தெலுங்கு நாட்டைத் தான் டிக் கன்னட நாட்டை அந்த நாயனார் அடைந்தார்." பாடல் வருமாறு: - அம்ம ருங்கு கடந்து போம்அவர் ஆர்கொள் சூல அயிற்படைச் செம்மல் வெண்கயி லைப்பொருப்பை நினைந் தெழுந்ததொர் சிங்தையால் எம்ம ருங்குமொர் காதல் இன்றி இரண்டு பாலும் வியந்துளோர் கைம்ம ருங்கணை யும்தெ லுங்கு கடந்து கன்னடம் எய்தினார்.” t அம்மருங்கு-அந்த பூரீசைலத்தினுடைய பக்கத்தை. கடந்து-தாண்டி. போம்-எழுந்தருளும். அவர்-அந்தத் திரு நாவுக்கரசு நாயனார். ஆர்-அழகை. கொள்-கொண்ட சூல. -திரிசூலமாகிய, அயில்-கூர்மையைப் பெற்ற, படை-ஆயு. தத்தை ஏந்தியிருக்கும். ச்:சந்தி. செம்மல்-தலைவராகிய கயிலாச பதியார் எழுந்தருளியிருக்கும். வெண்-வெள்ளி மலையாகிய ஆகு பெயர். கயிலைப் பொருப்பை-கயிலாக மலைக்கு உருபு மயக்கம். நினைந்து-எழுத்தருளுவதற்கு எண்ணி, எழுந்தது-எழுந்ததாகிய, ஒர்-ஒப்பற்ற. சிந்தை யால். தம்முடைய திருவுள்ளத்தோடு; உருபு மயக்கம். எம்மருங்கும்-எந்தப் பக்கங்களிலும் : ஒருமை பன் மை மயக் கம், ஒர்-ஒரு. காதல்-விருப்பம், இன்றி.இல்லாமல். இரண்டு பாலும்-தம்முடைய இரண்டு பக்கங்களிலும், பாலும்: ஒருமை பன்மை மயக்கம். வியந்துளோர்.தம்மைப் பார்த்து வியப்பை அடைந்திருக்கும் மக்கள்: ஒருமை பன்மை. மயக்கம். உளோர்: இடைச் குறை, கைம்மருங்கு-தம்முடைய, கைகளின் பக்கத்தை. கை: ஒருமை பன்மை மயக்கம்.