பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 93. அணையும்-வந்து சேரும். தெலுங்கு-தெலுங்கு மொழியைப் பேசும் மக்கள் வாழும் ஆந்திர நாட்டை: ஆகு பெயர். கடந்து-அந்த நாயனார் தாண்டி எழுந்தருளி. கன்னடம்கன்னட மொழியைப் பேசும் மக்கள் வாழும் கன்னட நாட்டை; ஆகு பெயர். எய்தினார்-அடைந்தார். பிறகு வரும் 351-ஆம் பாடலின் கருத்து வருமாறு: "அந்தத் திருநாவுக்கரக நாயனார் கருநாடக நாடு: தமக்குப் பின்னால் இருக்குமாறு எழுந்தருளிய பிறகு அந்த நாட்டில் சேர்ந்திருக்கும் காடுகளையும், அழகிய ஆறுகளினு டைய துறைகள் ஆகிய எல்லாவற்றையும் அப்பால் உள்ள ஆகாயத்தளவும் உயரமாக நிற்கும் மலை உள்ள வழிகளை" யும் பெருகியுள்ள நன்மைகள் கிளர்ச்சி பெற்று எழும் நாடு களையும், கணக்கு இல்லாதனவாகிய நாடுகள் தமக்குப் பின் னால் இருக்க மேலே எழுந்தருளும் தோற்றப் பொலிவோடு ஆகாயத்தில் உதயமாகி வரும் நீளமாக இருக்கும் கிரணங் . களைப் பெற்ற சூரியன் மேலே தவழும் பூம்பொழில்களைப் பெற்ற மாளவ நாட்டை அந்த நாயனார் அடைந்தார்.” பாடல் வருமாறு:

  • கரு டம்கழிவாக ஏகிய பின்க லந்தவ னங்களும்

திருரு தித்துறை யாவையும் பயில்சேண்கெடுங் கிரி: வட் டையும் பெருங் லம்கிளர் நாடும் எண்ணில பிற்படச் செறி: பொற் பினால் வருநெ டுங்கதிர் கோலு சோலை மாள வத்தினை நண்ணினார்.' கருநடம்-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் கருநாடக நாடு. சழிவாக-தமக்குப் பின்னால் இருக்குமாறு; கழிந்து வோக எனலும் ஆம். ஏகிய-எழுந்தருளிய. பின்-பிறகு. கலந்த-அந்தக் கருநாடக நாட்டில் சேர்ந்துள்ள. வனங்களும். - காடுகளையும். திரு-அழகிய நதித்துறை-ஆறுகளினுடைய துறைகள். நதி: ஒருமை பன்மை மயக்கம். துறை: ஒருமை.