பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-94 பெரிய புராண விளக்கம் .பன்மை மயக்கம், யாவையும். ஆகிய எல்லாவற்றையும். பயில்-அப்பால் உள்ள. சேன்-ஆகாயத்தினளவும். நெடும்உயர்ந்து நிற்கும். கிரி-மலை உள்ள. வட்டையும்-வழிக ைள யும்; ஒருமை பன்மை மயக்கம். பெரு-பெருகியுள்ள. நலம்நன்மைகள்; ஒருமை பன்மை மயக்கம். கிளர்-கிளர்ச்சியைப் .ெ ற்று எழும். நாடும்-நாடுகளையும்; ஒருமை பன்மை மயக் கம்.என்.கணக்கு. இல-இல்லாதவையாகிய நாடுகள்;இடைக் குறை. பிற்பட-தமக்குப் பின்னால் இருக்க. ச்: சந்தி. செறி. மேலே எழுந்தருளும். பொற்பினால்-தோற்றப் பொலி வோடு, உருபு மயக்கம். வரு. ஆகாயத்தில் உதயமாகி வரும். நெடும்-நீளமாக இருக்கும். கதிர்-கிரணங்களைப் பெற்ற சூரியன்; ஆகு பெயர். கோலு. தலை மேலே தவழும். சோலை, .பூம்பொழில்களைப் பெற்ற; ஒருமை பன்மை மயக்கம். மாளவத்தினை-மாளவ நாட்டை. நண்ணினார்-அந்த நாய கனார் அடைந்தார். அடுத்து உள்ள 352-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அந்த மாளவதாடு முழுவதையும் கடந்து மேலே எழுந்தருளி கடப்பதற்கு அரு மையாக இருக்கும் பாலைவனங்களைத் தாண்டி மேலே எழுந்தருளி எல்லா ஊர்களிலும் மிகுதியாக உள்ள முப்பத் திரண்டு தருமங்களை மக்கள் நெடுங்காலமாகப் புரியும் இலாட மாநிலத்தைக் கடந்து மேலே எழுந்தருளி மேகங்கள் .சுற்றித் தவழ்ந்த மலையோடு, காடுகளையும், ஆறுகளை rயும் கடந்து மேலே எழுந்தருளிப் பக்கத்தில் உள்ள சேத் தாமரை மலர்கள் மலர்ந்து விளங்கும் வயல்களைப் பெற்ற :மத்திய மாநிலத்தை அந்த நாயனார் அடைந்தார். பாடல். வருமாறு: . - ' அங்கு முற்றி அகன்று போகி அருஞ்சு ரங்கள் கடந்துசென் றெங்கும் மிக்க அறங்கள் நீடும் இலாட பூமி இகக்துபோய்