பக்கம்:பெரிய புராண விளக்கம்-8.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 95. மங்குல் சுற்றிய வெற்பி னோடு வனங்கள் ஆறு கடந்தயற் பங்க யப்பழ னத்து மத்திய பைதி ரத்தினை எய்தினார்." அங்கு-அந்தத் திருநாவுக்கரசு நாயனார் அந்த மாளவ தாடு. முற்றி-முழுவதையும். அகன்று-கடந்து. போகிமேலே எழுந்தருளி. அரும்-கடப்பதற்கு அருமையாக இருக்கும். சுரங்கள்-பாலைவனங்களை. கடந்து-தாண்டி. சென்று-அப்பால் எழுந்தருளி, எங்கும்-எல்லா ஊர்களிலும்: ஒருமை பன்மை மயக்கம், மிக்க-மிகுதியாக உள்ள. அறங்கள்-முப்பத்திரண்டு தருமங்களை; அவை இன்ன என்பதை வேறு ஓரிடத்தில் கூறினோம்; ஆங்குக் கண் இணர்க. நீடும்-மக்கள் நெடுங்காலமாகப் புரிந்து வரும்" இலாடபூமி-இலாட மாநிலத்தை. இகந்து-கடந்து. போய்அப்பால் எழுந்தருளி. மங்குல்-மேகங்கள்; ஒருமை பன்மை: மயக்கம். சுற்றிய-சுற்றித் தவழ்ந்த, வெற்பினோடு-மனை போடு. வனங்கள்-காடுகளையும். ஆறு-ஆறுகளையும். ஒருமை பன்மை மயக்கம். கடந்து-தாண்டி எழுந்தருளி. அயல்-பக்கத்தில் உள்ள. பங்கய-செந்தாமரை மலர்களும், வேண்டாமரை மலர்களும் மலர்ந்திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். ப்:சந்தி. பழனத்து-வயல்களைப் பெற்ற: ஒருமை பன்மை மயக்கம். மத்திய பைதிரத் தினை-மத்திய மாநிலத்தை. எய்தினார். அந்த நாயனார் அடைந்தார். பிறகு வரும் 353-ஆம் பாடலின் கருத்து வருமாறு : "அத்தகைய மத்திய மாநிலமாகிய நாட்டைத் தாண்டி அப்பால் எழுந்தருளிக் கங்கையாற்றை அடைந்து எழுந் தருளி பக்தர்கள் தம்முடைய திருக்கோயிலை வலமாக வரும் மின்னலைப் போல ஒளியை வீசும் சடாபாரத்தைத் தம்மு டைய தலையின் மேற் பெற்றவராகிய விசுவநாதர் திருக் "காயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் வாரணாசியாகிய காசிக்கு விருப்பத்தோடு எழுந்தருளி அநத விசுவநாதரை