பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனார் புராணம் 1st

அவனுடைய திருமேனியில். விளங்கிய - விளக்கமாகத் தெரிந்த. குறியும் - ப ா ம் பி னு ைட ய ப ற் க ளி ன் அடையாளத்தையும். கண்டு - பார்த்து விட்டு. விடத்தி னால் . இவன் பாம்பு கடித்த நஞ்சினால், வீழ்ந்தான். இறந்து போனான். என்று - என எண்ணி, துளங்குதல் . சிறிதேனும் நடுக்கத்தை அடைதல். இன்றி - இல்லாமல். த் : சந்தி. தொண்டர் - திருவதிகை வீரட்டானேசுவர ருடைய திருத்தொண்டராகிய திருநாவுக்கரசு நாயனார். அமுது செய்வதற்கு - திருவமுது செய்வதற்காக. ச் : சந்தி. சூழ்வார் - திருநாவுக்கரசினுடைய அன்னையாரும் தகப்பனாரும் ஆலோசனை செய்பவர்கள் ஆனார்கள்; ஒருமை பன்மை மயக்கம். -

'பிறகு வரும் 29 - கவியின் உள்ளுறை வருமாறு : பெறுவதற்கு அ ரு ைம ய ா ன த ங் களு ைடய ஆமாரனாகிய திருநாவுக்கரசை ஒரு பாய்க்குள் வைத்து ஒரு போர்வையால் மூடி விட்டு, தங்களுடைய திருமாளிகை யினுடைய வெளியில் உள்ள முற்றத்தினுடைய பக்கத்தில் ஒரு பக்கத்தில் மறைத்து வைத்துவிட்டு, இது முற்றும் தெரிந்து கொள்ளாதவாறு அந்தத் திருநாவுக்காக நாயனாருக்குத் திருவமுது செய்விப்போம்' என்று எண்ணி விரத்தைப் பெற்ற திருவதிகை வீரட்டானேசுவரருடைய திருத்தொண்டராகிய திருநாவுக்கரசு நாயனாரிடத்திற்கு விருப்பத்தோடு அந்த இருவரும் வேகமாக வந்தார்கள்." பாடல் வருமாறு :

பெறலரும் புதல்வன் தன்னைப் பாயினுட் பெய்து மூடிப் புறமனை முன்றிற் பாங்கோர்

புடையினில் மறைத்து வைத்தே அறஇது தெரியா வண்ணம்

அமுதுசெய் விப்போம். என்று விறலுடைத் தொண்ட ணார்பால் -

விருப்பொடு விரைந்து வந்தார்.' பெ. புரா . 9 - 12 - - - - -