பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனார் புராணம் ፲፪?”

சாத்த - அணிய. காட்டும் - எனக்குக் காட்டுவீர்களாக" என்றலும் . என்று அந்தத் திருநாவுக்கரசு நாயனார் திருவாய் மலர்த்தருளிச் செய்தவுடன். வி ைள ர் த தன்மை நடந்த பான்மையாகிய மூத்த திருநாவுக்கரக அாம்பு கடித்து இறந்து போய் விட்ட செய்தியை. யாதும் ஒன்று - எதை ஒன்றேனும். உ ைர யார் - தி ரு வா ய் மலர்ந்தருளிச் செய்யாதவர்களாகி; ஒருமை பன்மை மயக்கம். அவர்கள் திருநாவுக்கரசினுடைய அன்னை யாரும் தகப்பனாரும் ஆவர். இப்போது - இந்த நேரத்தில். இங்கு - இந்த இடத்தில். அவன் - அந்த மூத்த திருநாவுக் கரசு. உதவான் - உதவ மாட்டான். என்றார் - என்று அவனுடைய அன்னை யாரும் தகப்பனாரும் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்கள்: ஒருமை பன்மை மயக்கம்.

அடுத்து வரும் 33 - ஆம் கவியின் கருத்து வருமாறு:

அப்பூதியடிகள் நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்த அந்த வார்த்தைகளை அந்தத் திருநாவுக்காக நாயனார் கேட்ட சமயத்திலேயே அழகிய கண்களைப் பெற்றவராகிய சிவபெருமானார் வழ்ங்கிய திருவருளால் திருவதிகை விரட்டானேசுவரருடைய பக்தராகிய அந்தத் திருநாவுக்கரசு நாயனார் செம்மையாக உள்ள தம்முடைய திருவுள்ளத்தில் ஒரு தடுமாற்றம் உண்டாக அந்த அப்பூதி படிகள் நாயனாரைப் பார்த்து, நீர் கூறிய இந்த வார்த் தைகளை அடியேனுடைய உள்ளம் சகிக்காது. அவன் என்ன செய்தான்? இந்தச் சமயத்திற்கு ஏதோ ஒரு செயல் இருக்கிறது: உண்மையை எடுத்துக் கூறுவீராக." என்று திருநாவுக்கரசு நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்ய, அந்த அப்பூதியடிகள் நாயனார் நடுக்கத்தை அடைந்து பயப்பட்டுத் திருவாய் மலர்ந்தருணிச் செய்பவரானார். பாடல் வருமாறு : . .

8. அவ்வுரை கேட்ட போதே

அங்கணர் அருளால் அன்பர்