பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 பெரிய புராண விளக்கம் - 9

களையும். தீ : ஒருமை பன்மை மயக்கம். வளர்த்துள்ளார் - வளர்த்துக் கொண்டு இருப்பவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். உளார் : இடைக்குறை, இருபிறப்பாளர் - பூனுசலை அணிவதற்கு முன்பு ஒரு பிறப்பையும் அதற்குப் பிறகு மற்றொரு பிறப்பையும் பெறும் துவிஜர்களாகிய அந்தணர்கள்: ஒருமை பன்மை மயக்கம். பிறப்பு: ஒருமை பன்மை மயக்கம். நீந்து நல்லறம் - நல்ல தருமங்களாகிய கடலில் நீத்திச் செல்கின்ற உரு வகம்- அ றம் , முப்பத்திரண்டு தருமங்கள்: ஒருமை பன்மை மயக்கம். அவை இன்ன என்பதை வேறோரிடத்தில் கூறினோம், ஆண்டுக் கண்டுணர்க. நீர்மையின் - பான்மையைப் போல. வளர்க்கும் - தாங்கள் வளர்த்து வரும். அத்தீயை - அத்த மூன்று நெருப்புக்களையும்; ஒருமை பன்மை மயக்கம். வாய்ந்த - வாய்ப்பாக அமைந்த. கற்புடன்-கற்பு என்னும் தீயோடு: 'அல்கியான் என்னை இவ்வன்னை நூற்பெறும், பொங்கு வெந்தீச்சுட." (மீனாட்சிப் படலம், 91) என்று கம்பராமாயணத்தில் வருவதைக் காண்க. மடவார் - மடப்பத்தை உடைய பெண்மணிகள்: ஒருமை பன்மை மயக்கம். வளர்ப்பர்கன் - வளர்த்து வருவார்கள்.

அடுத்து உள்ள 4 ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : .

  • நல்ல பண்புகனைப் பெற்றுத் தங்களு ைட ய வாழ்க்கையை நடத்தி வந்த அந்த அழகிய வேதியர்கள் வாழும் செல்வச் செழிப்பைப் பெற்ற பழைய ஊராகிய சாத்தமங்கலத்தில் இந்த மண்ணுலகத்தில் மிகுதியாக உள்ள இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களினுடைய அர்த்தத்தை விளக்கமாக எடுத்துக் கூறிய நன்மையைப் பெற்றவர், ஆலகால விடத்தை தங்க வைத்திருக்கும் திருக் கழுத்தைப் பெற்றவராகிய அயவந்தீசுவரருடைய திகுத் தொண்டராக விளங்கும் பக்தர் திருநீலநக்க நாயனார். என்னும் திருதாமத்தைப் பெற்றவர் அந்தச் சாத்த