பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*16 பெரிய புராண விளக்கம் - 9

"அந்தத் திருநீலதக்க நாயனார், இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் என்னும் நான்கு வேதங்களுக்கு உள்ளே தங்கும் பரம் பொருள் ஆக விளங்குபவை பரவிய கங்கையாற்றின் நீரைத் தங்க வைத்த சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்ற தலைவராகிய அயவந்தீசுவரரையும் அந்த சசுவரருடைய அடியவர்களையும் விரும்பி அவர்களுடைய திருவடிகளுக்கு அருச்சனையைச் செய்வதும், அவர்களுடைய திருவடிகளில் விழுந்து வணங்குவதும் ஆகும்' என எண்ணி விருப்பத் தோடு அந்த அருச்சனையைச் செய்வதும், அந்த அடியவர் களை வணங்குவதும் ஆகிய செயல்களையுமே புரியும் சிகுவுள்ளத்தைப் பெற்றவர் அந்தத் திருநீல்நக்க தாயனார். பாடல் வருமாறு : . " வேத உள்ளுறை ஆவன

விரிபுனல் வேணி காதர் தம்மையும் அவரடி

யாரையும் கயத்து பாதம் அருச்சனை புரிவதும் பணிவதும்" என்றே காத லால்அவை இரண்டுமே

செய்கருத் துடையார்." . . வேத - அந்தத் திருநீலநக்க நாயனார், இருக்கு வேதம், யஜுர், வேதம், சாம வேதம், அதர்வன வேதம் என்னும் நான்கு வேதங்களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். உள்ளுறை - உள்ளே தங்கும் பரம் பொருள். ஆவன : ஆக விளங்குபவை. விரி - பரவிய, புனல் . கங்கையாற் டைய நீரை. வேணி - தங்க வைத்த சடாபார்: தைத் தம்முடைய தலையின் மேற் பெற்ற நாதர் தம்மையும். தலைவராகிய அயவந்தீசுவரரையும், தம் : அசை நிலை, அவர் - அந்த சசுவரருடைய அடியாரையும் - அடியவர் களையும்; ஒருமை பன்மை மயக்கம். நயந்து - விரும்பி, பாதம் - அவர்களுடைய திருவடிகளுக்கு: ஒருமை பன்மை