பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்செ

அ1 பெ. 1. தமிழ் நெடுங்கணக்கின் முதல் உயி ரெழுத்து. எழுத்தெனப்படுப அகர முதல் (தொல். எழுத். 1 இளம்.).2. (ஒரு மாத்திரை அளவு ஒலிக்கும்) உயிர்க்குறில். அ உ எ ஒ ஓரள பிசைக்கும் குற் றெழுத்தென்ப (தொல். எழுத். 3 இளம்.). 3. தமிழில் மொழி முதலில் வாராத, ரகரத்தில் தொடங்குகிற பிற மொழிச் சொற்களைத் தமிழில் ஏற்பதற்கு அச்சொற் களின் முன்சேர்க்கப் பெறும் எழுத்து. அரம்பை (பெருங். 5,3,59). அரதன நாகரிற் சொரிதரு வெகுளி யர் (முன். 1,46,13). 4. வருணம், கதி, உண்டி, பால், தானம், கன்னல் (பொழுது), புள், நாள் ஆகிய செய்யுட் பொருத்தங்களுள் கூறப்படும் ஓர் எழுத்து. (பன்னிருபா. எழுத். 5, 52).

...

அ2 பெ. அழகு. பித்திகத்து அவ் விதழ் (நெடுநல். 40-41 பிச்சியினுடைய அரும்பினது அழகிய இதழ்கள் - நச்). அவ் விசும்பு (கலித். 92,16). அந்நுண் மருங் குல் (மணிமே. 3, 121). பத்தர் அன்ன மெத்தென் அவ்வயிற்று (பெருங். 1,40,270), அக் கோலங்காட்டி அளித்த என் ஆவியை (கலைசைக்: 37 உ. வே. சா. அடிக் குறிப்பு).

அ3 பெ. 1.சிவன். ஆரும் அறியார் அகாரம் அவன் என்று (திருமந். 1751). 2. திருமால். அக்கரங்களில் அகாரம் நான் (பகவற். 10,21). அவ் வான வருக்கு மவ் வானவ ரெல்லாம் உவ் வானவர் அடிமையென்று (பிரமேய. 1). 3. பிரமன். அ என்றது பிரமாவின் பெயருமாம் (தக்க. 65 ப. உரை).

...

அ பெ. 1. பஞ்சாக்கரப் பிரணவத்தின் முதல் எழுத்து. எண்ணில ஓங்காரத்து அகர உகரம் மகரத் தாம் (சி.போ.வெ.26). அகாரம் உகாரம் மகாரம் விந்து நாதம் என்கின்ற பஞ்சாக்கரமான பிரண வத்துக்கு (களிற்று. 25 உரை).2. சைவ சித்தாந்தப் பிராசாத நெறிக்குரிய பதினாறு கலைகளுள் முதற் கலை. அகர உகர மகரம் அவ்வடிவேயாகும். (பிராசாத. நான். சட்கம் 3).

...

அ பெ. 1.எட்டு என்னும்

எண்ணின் தமிழ்க்

ால்லகராதி

...

......

குறியீடு.அ உ அறியா அறிவுஇல் இடை மகனே (யாப். வி. 7 உரை). 2. (சமயம்) ஆகாயத்திற்கான குறியீடு. பார் புனல்... அனல்... கால் வான் எழுத்து லவர ய அ (உண்மை வி. 5). 3. (சோதிடம்) பஞ்சபட்சிகளுள் முதல் பறவையான வல்லூற்றைக் குறிக்கும் எழுத்து. (பெரியவரு. ப. 101) 4. (சித்த மருத்.) சுக்கு.(பரி. அக./செ. ப. அக. அனு.) 5. (சித்த மருத்.) திப்பிலி. (முன்.)

...

அ ' இ.சொ. 1. சேய்மைப் பொருள், இடம், காலம், முதலி யன உணர்த்தும் சுட்டு. அம் மலைகிழவோற்கு உரை மதி இம் மலை... மகள் ... காவல் ஆயினள் எனவே (நற். 102, 7-9). அந்நாளே அடியோங்கள் அடிக் குடில் வீடு பெற்றுய்ந்தது (பெரியாழ். திருப்பல்.10). அவ்வழி இமையவர் அறிந்து கூடினார் (கம்பரா. 2,13,130). அகரம் தூரப் பொருளையும் இகரம் சமீபப் பொருளையும் உகரம் எதிர்முகமின்றிப் பின்னிற்கும் பொருளையும் சுட்டும். (நன். 11 இராமானுச.). 1. சொல்லினகத்து முதனிலை யுறுப்பாய் அமைந்து நிற்கும் சுட்டு (அகச்சுட்டு). அவன் இவன் உவன் (தொல்.சொல். 159 இளம்.). அவனென்பதன்கண் அகரம் அறமென்பதன் கண் அகரம்போல...அகத்து வரும் (நன். 66 சங்கர நமச்.). 2. சொல்லின் புறம்பாய் அமைந்து நிற்கும் சுட்டு (புறச்சுட்டு). அப் பண்பினவே (தொல்.சொல். 245 இளம்.). அவ் வெண்ணிலவின் (புறநா. 112,1). அக் கொற்றன் (தொல். எழுத். 31 நச்.). மொழிக்குப் புறத்தும் அகத்தும்... சுட்டுப் பொருளுணர்த்தவரின் (அ) சுட்டெழுத்தாம் (நன். 66 சங்கரநமச்.). 3. முற்கூறிய பொருளை மீண்டும் உரைக்கப் பயனாகும் சுட்டு, அந்த. பீலிபெய்சாகாடும் அச்சிறும் அப் பண் டம்... (குறள். 475). 4. உலகத்தார் அறிந்த பொரு ளோடு வரும் சுட்டு(உலகறிசுட்டு).அத் தம் பெருமான் (சீவக. 221 அ உலகறி பொருண்மேற்று நச்) 5. பண்டு நிகழ்ந்ததனை இன்று அறிவிக்கும் சுட்டு (பண்டறி சுட்டு). அம் மணிவரை (சீவக. 1445 அகரம் பண்டறி சுட்டாக்கி - நச்.). நின்றான் அந் நாள் வீடணனார் சொல் நினைவுற்றான்(கம்பரா. 6,36,133).

-

அ7 இ. சொ. 1. ஆறாம் வேற்றுமைப்

பன்மை