பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஃதை*

3

அஃதை (அஃதி, அக்காத்தி, அகதி, அகுதி) பெ. திக்கற்றவன். ஒவ்வொருவரும் தனித்தனி அஃதைக் குத் தந்தை போல்வர் (நன்.பொது. 29 இராமானுச.).

அஃபோதம் பெ. நிலாமுகிப்புள் என்னும் பறவை.(சங். அக.)

சகோரப்

அஃறிணை பெ. மக்கள் அல்லாத பிற உயிர்களும், உயிரற்ற பொருள்களும் அடங்கும் இலக்கணப் பகுப்பு. உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே சுட்டே அஃ றிணை என்மனார் அவரல பிறவே (தொல். சொல். 1 இளம்.). காதற் பரத்தை எல்லார்க்கும் உரியள் என்றாகாதே சூத்திரம் செய்தற்பாலது உரித்து என்று அஃறிணை வாய்பாட்டாற் சொல்லிற்று... (இறை. அக. 40 உரை). மக்கள் தேவர் நரகர் உயர் திணை மற்று உயிருள்ளவும் இல்லவும் அஃறிணை (நன். 261). தன்னுணர்ச்சி கெட்டு அஃறிணைகளின் உடற்றரிப்பார் (நல். பாரத. யயா.120).

அக்கக்காய் வி. அ. துண்டு துண்டாக. (வட். வ.)

அக்கக்கொடி

(சாம்ப. அக.)

(அக்கிக்கொடி)

பெ.

கொடிவகை.

அக்கச்சி

பெ. தமக்கை. அக்கச்சியைப் பட்டருக்குத் தாரைவார்த்துக் கொடுத்து (குருபரம். ஆறா.ப.236). அக்கச்சி உடைமை அரிசி தங்கச்சி உடைமை தவிடு (பழ. அக. 35). அக்கச்சி மயில் குயில் ஆச்சுதடி (திருவருட்பா 4947).

அக்கசாலை பெ.

1.

செய்யுமிடம்.

வேலை பொன் கோவலனுஞ் சென்று அக்கீழ்மகனிருப்பிடத்திற்கு அயலதோர் அக்கசாலைப் பள்ளியின் மதிலுக் குள்ளே புக்கபின் (சிலப். 16, 126 அடியார்க்.). போய் அக்க சாலை புகுந்தனள் பொய்ம்மகளே (பெருந். 416). 2. (அரசாணைப்படி) நாணயம் செய்யுமிடம். (வின்) 3. கொல்லர் பட்டறை. அக்கசாலையினிடத்து வந்து இருந்தனர் (சீறாப்பு. 1,20,1).

000

அக்கசாலையர் பெ. 1. பொற்கொல்லர். அக்கசாலை யர் சொன்னகாரரும் ஆகும் (பிங். 792). 2. கம்மியர். கம்மியர் அற்புதர் ... கொல்லர் அக்கசாலையர்

...

கண்ணாளர் நாமம் (சூடா.நி.2,28).

அக்கசூத்திரம் பெ. உருத்திராக்க மாலை. அக்கசூத் திரம் பவித்திரம் இவை தரித்துக்கொண்டு (சித்.சா.கிரியா. 88 தாத் /செ.ப. அக.).

அக்கட்டே (அக்கட2) சு. பெ. அவ்விடம். (கோவை வ.)

அக்கதம்

அக்கட1 இ. சொ. ஏளனக் குறிப்புடைய வியப்பிடைச் சொல். மக்களும் குரங்குமே வலியர் ஆம் எனின் அக்கட இராவணறகு அமைந்த ஆற்றலே (கம்பரா.

6, 2,32).

அக்கட' (அக்கட்டே) சு.பெ. அந்தப்பக்கம், அவ்வி டம். அக்கடபோ எனும் உலோபரைப் பாடி அலுத்துவந்த குக்கலை ஆண்டருள் (தனிப்பா. முதல். பலவித். 7).

...

அக்கடா இ. சொ. வியப்பைத் தெரிவிக்கும் இடைச் சொல். எனக்கு அருளே புரியவும் வல்லரே எல்லே அக்கடா ஆகில் அவர் இடம் களந்தை ஆதித்தேச்சுரமே (கருவூர். திருவிசை. 2, 7).

...

அக்கடாவெனல் பெ. வேலை முடிந்தபின் ஓய்வாக இருப்பதைத் தெரிவிக்கும் குறிப்புச் சொல். வேலையை முடித்துவிட்டு அக்கடாவென்று உட்கார்ந்தாள்

(பே.வ.).

அக்கடி பெ.

1. பயண

அலைவு. (ராட். அக.)

(சங். அக.)

கொடுமை. (இலங்.வ.)

கடுங்காற்றால் மரக்கலம் அலைகை.

3.

23

2.

அக்கணம் 1 (அச்சணம்) வி. அ. அந்த வினாடி, அப்

.

பொழுது. மாலும் அக்கணம் வாளியைத் தொட் டதும் (கம்பரா. 1, 7, 48). அக்கணத்து ஏகி இருந்த வாறு தன் அன்னையோடு இனிது

...

உரைத்து (பாரதம். 12,16). குறமகளுடன் முருகனை அக் கணம் மணமருள் பெருமாளே (திருப்பு. விநாய. 1). அக்கணமே தம்பியரும் (இராமநா. 1,21).

கோலங்கொண்டார்

அக்கணம் 2 பெ. வெங்காரம் என்னும் மருந்துச் சரக்கு.

(வின்.)

அக்கணா ( அக்கத்தான், அக்கந்தம், அக்கம்', அக் காத்தான், அக்காந்தி) பெ. தான்றி மரம். (முன்.)

அக்கத்தான் (அக்கணா, அக்கந்தம், அக்கம்', அக் காத்தான், அக்காந்தி) பெ. தான்றி மரம். (செ. ப.

அக. அனு.)

அக்கதந்து பெ. உருத்திராக்க மாலை. அக்கதந்து ... சலமுறும் கமண்டலம் (தேவிமான். 8,8).

அக்கதம் பெ. 1.உடையாதது, பங்கப்படாதது. (சங். அக.) 2. ஆசி வழங்கும்போது தூவும் மஞ்சள் கலந்த முனை முறியா அரிசி, அட்சதை. சேர்த்தனர் சிந்தும் துணரும் அக்கதமும் (கந்தபு. 2,39,25).