பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கரம்11

அக்கரம் 11 பெ. 1. வாயில் வரும் நோய். அக்கரங் கள் தீர்க்கும் (பதார்த்த. 327/செ.ப.அக.) அக் கரமே ஒரு நோயும் எழுத்தும் (அக. நி. அகரமுதல். 79). 2.பேதிவகை. (சிகிச்சா. 747 / செ. ப. அக.)

அக்கரம் 12 பெ. ஒரு மருந்து வேர். (செ. ப.அக.) அக்கரமாலை பெ. எழுத்துக்களின் வரிசை. அக்கர மாலை நடுவுற ஐம்பதும் ஆவன (திருமந்.955).

அக்கரவர்த்தனம் (அக்கரவர்த்தனை, அக்கரவர்த்தி, அக்கரவருத்தனை) பெ. ஒரு பொருள் தரும் சொற் கூறி அச்சொல்லோடு ஒவ்வோர் எழுத்தாக (முதலில் அல்லது கடைசியில்) சேர்க்க வேறு பொருள் பயக்கச் செய்யும் சித்திரக் கவி. (பிர. வி.26 உரை கா-காவி-

காவிரி எனவும் அக்கரவர்த்தனமுமாய் வந்து).

அக்கரவர்த்தனை (அக்கரவர்த்தனம், அக்கரவர்த்தி, அக்கரவருத்தனை) பெ. ஒரு பொருள் தரும் சொற் கூறி அச்சொல்லோடு ஒவ்வோர் எழுத்தாக (முதலில் அல்லது கடைசியில்) சேர்க்க வேறு பொருள் பயக்கச் செய்யும் சித்திரக் கவி. மிக்க பல்பொருள் தர மேல் வைப்பதுவே அக்கரவர்த்தனை (மாறனலங். 278

பா. பே.).

அக்கரவர்த்தி (அக்கரவர்த்தனம், அக்கரவர்த்தனை, அக்கரவருத்தனை) பெ. ஒருபொருள் தரும் சொற் கூறி அச்சொல்லோடு ஒவ்வோர் எழுத்தாக (முதலில் அல்லது கடைசியில்) சேர்க்க வேறு பொருள் பயக்கச் செய்யும் சித்திரக்கவி. அக்கரவர்த்தி எனலாம் என் பார் (தமிழ்விடு. 46).

அக்கரவருத்தனை (அக்கரவர்த்தனம், அக்கரவர்த் தனை, அக்கரவர்த்தி) பெ. ஒருபொருள் தரும் சொற்கூறி அச்சொல்லோடு ஒவ்வோர் எழுத்தாக (முதலில் அல்லது கடைசியில்) சேர்க்க வேறுபொருள் பயக்கச்செய்யும் சித்திரக் கவி. மிக்கபல்பொருள்தர மேல்வைப்பதுவே அக்கரவருத்தனை (மாறனலங்

278).

அக்கரவிந்து பெ. ( சைவசித்.) ஒலி வடிவ எழுத்து, பைசந்தி. (அட்டப்பிரக. இரத்தின. 40)

அக்கரவிலக்கணம் பெ. (அறுபத்து நான்கு கலை களுள் ஒன்றாகிய) எழுத்திலக்கணம். (செ.ப. அக.) அக்கரவு பெ. இரக்கம். (திவ்ய. அக.1)

அக்கரன் பெ. 1.ஒவ்வொரு பொருளிலும் கரந்துறை யும் கடவுள். (சங். அக.) 2. ஒவ்வொரு ஆன்மாவிலும்

அக்கரை 3

பிரதிபலிக்கும் பிரமம். (சங். அக.) 3. திருமால். (கதிரை. அக.)

அக்கரா (அக்கராகாரம்) பெ. ஒரு மருந்துவேர். (செ. ப. அக. அனு.)

அக்கராகாரம் (அக்கரா) பெ. ஒரு மருந்து வேர்.(செ.

ப. அக.)

G

அக்கராப்பொடி பெ. மணமிகுந்த பூச்சுப்பொருள். அக் கராப்பொடி இன் மெய்க்கு இடாக் குறவர் (திருப்பு.833).

அக்கராரம்பம் பெ. எழுத்துப் பயிலத் தொடங்குகை. அக்கராரம்பம் பண்ணுமிடத்து (விதான. மைந்தர்.

16 உரை).

அக்கராலத்தி பெ. வட்டவடிவத் தட்டில் ஐம்பத்தொரு (அக்கரங்களின் அடையாளமாகவுள்ள) விளக்குகள் வைத்துக் கோயிலில் சுவாமிமுன் காட்டும் விளக்கு வகை. (குற்றா. பு. 22,48). அக்கராலத்தி ஒளியாய் விளங்க (தமிழ்விடு. 236).

அக்கரிவாள் பெ. முட்செடிகளைக் களையும் அரிவாள். (பே.வ.)

அக்கருமம் பெ.கொடுமை. இந்த அக்கருமத்தைத் தாங்கமுடியாது (கோவை வ.).

அக்கரை1 பெ. 1. எல்லை. அழுந்து துன்பினுக்கு அக்கரை கண்டனன் (கம்பரா. 4,3,71). 2. நீர்நிலை யின் மறுகரை. அளக்கர் அக்கரை (கந்தரந். 10). அக்கரை சேர்க்கும் மணவாளதாசன் அருங்கவியே (திருவேங். அந்.பாயி.). அக்கரை போனானே நந்தன் ஆனந்தம் கொண்டானே (நந்த. கீர்த். ப.95). இக் கரை தாண்டிடின் அக்கரையே இருப்பது சிதம் பரச்சக்கரையே (திருவருட்பா 5078). அலமரும் அக் கரைப்பசுப்போல் (சிவஞா. காஞ்சி. நகரப். 86).

அக்கரை' (அக்கறை) பெ. 1. பயனுடையது. ஆகின்ற அப்பொருள் அக்கரையாகுமே (திருமந். 2107). அக் கரையான நிதிபோய் (தனிச். சிந். அவிநாசிப்புலவர். 2). 2. கவனம். உம்பர் அக்கரையா யனுப்ப (தனிப்பா. 1,373,12). அக்கரையாய் வள்ளத்தில் ஏறிவரும் மாதர் (திருவனந்தை விலா. 278). 3. நன்மை. அவர வர் அக்கரைக்கு அவரவர் பாடுபடுவார் (பழ. அக.

590).

அக்கரை' பெ. தேய்விலி. அக்கரை அழிவிலாதாய் (தேவிமான். 1,38).