பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கரைச்சீமை

அக்கரைச்சீமை பெ. கடலுக்கு அப்பாலுள்ள நாடு.

(பே.வ.)

அக்கரைப்பச்சை பெ. (இக்கரையை விட அக்கரையில் அதிகப் பசுமை இருப்பதாக நினைக்கும்) கவர்ச்சி, இக்கரைமாட்டுக்கு அக்கரைப்பச்சை (பழமொழி).

அக்கரைப்படுத்து-தல் 5வி. ஓடத்திலேற்றி மறுகரையில் சேர்த்தல். அக்கரைப்படுத்திவிடும் அத்தைப்பற்றி னேன் (பெரிய திரு.1,1,8).

அக்கரையர் பெ. (வைணவ.) பரமபதத்தில் இருப்போர். அக்கரையராய்... நித்யசூரிகளில் ஒருவர் வந்து அவ தரித்தார் (உபதேசரத். அவதா.).

அக்கரையான்

(செ . ப . அக.)

பெ. கடலுக்கு அப்புறம் வாழ்பவன்.

அக்கரோட்டு (அக்ரோட்டு) பெ. மரவகை. (செ.ப.

அக.)

அக்கல்1 பெ. 1. அறிவு. (செ.ப.அக. அனு.) 2. செய்தி (முன்.)

அக்கல்' பெ. கப்பலின் முன்பகுதி. (முன்.)

அக்கல்பிச்சல்பாய்கள் பெ. கப்பலில் முன்பகுதியையும் பின்பகுதியையும் நோக்கி நிற்கும் பாய்கள்.

அக. அனு.)

அக்கவடம் பெ. உருத்திராக்கமாலை. அக்க வடம் பூண்டு (மச்சபு. கடவுள்.12).

(செ.

ப.

நீறணிந்து

அக்கவாடம் (அக்கபாடம்) பெ. 1. சூது விளையா டும் இடம். (சங். அக.) 2. மற்போர்க்களம் (முன்.)

அக்களநிம்மடி பெ. மதுரையை ஆண்ட பராந்தக வீர பாண்டியனின் தாய். மலைவலவன் மணிமகள் அக் கள நிம்மடி திருவயிறு கருவுயிர்த்த சிரீபராந்தக மகாராசன் (மெய்க். பாண்டியர் 4, 72-73).

அக்களி-த்தல் 11வி. மனமகிழ்தல். (சங். அக.)

அக்களிப்பு பெ. அக மகிழ்ச்சி. சக்களத்திகள் அக் களிப்போடு கெக்கலிப்பட (சர்வ.கீர்த். 186,5).

அக்கறந்தான் பெ. கடுக்காய் மரம்.

(செ. ப. அக. அனு.)

அக்கறை (அக்கரை) பெ. 1.

அக்கறையாயடியேனை ஆள் (காத்தவரா. ப. 3).

கவனம், கருத்து.

8

அக்காணி

தேர்வுக்கு அக்கறையோடு படிக்கிறான் (நாட்.வ.). 2. பரிவு, கரிசனை. அவனுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதில் உனக்கென்ன அவ்வளவு அக் அவசியம். (செ. ப. அக.)

கறை (LOGIT.).

அக்கறைப்படு-தல்

ப. அக.)

3.

6வி. கவனம் கொள்ளுதல். (செ.

அக்கன்1 பெ. தமக்கை. நாம் குடுத்தனவும் அக்கன் குடுத்தனவும் (தெ.இ.க. 2,1).

நாய். எகினன் அக்கன்... ஞமலி

பெ. நி. 3, 25).

அக்கன் 2 (சூடா.

அக்கன் 3 பெ.

3

கருடன். (கதிரை. அக.)

அக்கன் + பெ. பிறவிக்குருடன்.

அக்கனி பெ.

அக. அனு.)

(முன்.)

செங்கொடிவேலி. (பரி. அக.செ.ப.

அக்கா பெ. 1. தமக்கை. அக்கா தங்கச்சி இல்லா தவருக்கு (மலைய. ப. 51). 2. தாய். (சங். அக.) 3. வீட்டுவேலை செய்யும் பெண்கள் வீட்டுத் தலை வியை அழைக்கும் சொல். (தஞ்.வ.) 4. (இலக்குமி யின் தமக்கை எனப்படும்) மூதேவி. (நாட். வ.) 5. தூக்கம். அக்கா வந்துவிட்டாள் (தஞ். வ.).

...

அக்காக்காய் பெ. சிறுகுழந்தைக்குத் தலைமுடி கோது வார் சீராட்டிச் சொல்லும் சொல். ஆட்கொண்ட மன்னனை வந்து குழல் வாராய் அக்காக்காய்! (பெரியாழ். தி. 2, 5, 1).

அக்காக்கிரம்1 பெ. மாட்டு வண்டியச்சு. (சங். அக.)

அக்காக்கிரம்' பெ. குதிரை வண்டியின் முன் பக்கம்.

(முன்.)

அக்காக்குருவி பெ. ஆற்றங்கரையோரப் பகுதியில் காணப்படுவதும் அக்கா என்பது போன்று ஒலியெழுப்பு வதுமான குருவி.(பே.வ.)

அக்காகலம் பெ. அகில். (பரி. அக./செ. ப. அக. அனு.)

அக்காடிதம் பெ. செயற்கைப் பாடாணங்களுள் ஒன்றா கிய கவுரிப்பாடாணம். (வைத். விரி. அக. ப. 16 )

அக்காணி பெ. கண்ணுக்குப் வயிற்றில் தொழுவைப் கழித்து (பெரியாழ். தி.5,2,3). தூலசரீரம் (முன். வியாக்.).

புலனாகும் பருவுடல். பிரித்து.

...

அக்காணி

அக்காணி என்றது