பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்காத்தான்

அக்காத்தான்

(அக்கணா, அக்கத்தான், அக்கந்தம், அக்கம்', அக்காந்தி) பெ. தான்றி மரம். (குண. 1

ப. 366)

அக்காத்தி (அஃதி, அஃதை; அகதி அகுதி) பெ. திக்கற்றவன். அவன் அக்காத்தியாய்த் திரிகிறான் (செ . ப . அக.).

அக்காத்தை பெ. அக்காள். (முன்.)

அக்காதேவி பெ. மூதேவி. (சங். அக.)

அக்காந்தி (அக்கணா, அக்கத்தான், அக்கந்தம், அக் கம் 4, அக்காத்தான்) பெ. தான்றி மரம்.

செ. ப. அக . அனு.)

அக்காரக்கனி

பெ.

(பரி. அக.

(கரும்பின் கனி எனத்தக்க) தீஞ்சுவையுடைய கனி. வேத விமலர் விழுங்கும் என் அக்காரக்கனியே (திருவாய். 2, 9, 8).

அக்காரடலை (அக்காரடியல், அக்கார வடிசில்) பெ. சருக்கரைப் பொங்கல். ஆம் பால் அக்காரடலை அண்பல் நீர் ஊறு அமிர்தம் அமிர்தம் ... ஊட்டயர்வார் (சீவக. 928). அக்காரடலைத் திருவமுது ஆடும் மாணிக்கு நித்தம் நெல்லு நாழி (தெ.இ.க. 23-24).

அக்காரடியல் (அக்காரடலை, அக்காரவடிசில்) பெ. சருக்கரைப் பொங்கல். அக்காரடியல் அமுது செய் வதற்கு (முன். 19,60.)

அக்காரம் 1 பெ. 1. கரும்பின் சாற்றிலிருந்து செய்யும் (வெள்ளை அல்லது பழுப்புச்) சருக்கரை. அணி நீலக் கண்ணார்க்கு... பொருளுடையார் அக்காரம் அன்னார் (நாலடி. 374). ஆலைக்கரும்பும் அமு தும் அக்காரமும் சோலைத் தண்ணீரும் உடைத்து எங்கள் நாட்டிடை (திருமந்.2959). அக்காரம் பாலிற் கலந்து (பெரியாழ். தி. 2, 4, 5.). 2. கரும்பு. நறும் பாளிதம் வண்தயிர் நெய் அக்காரம் (ஆனந்த. வண்டு. 163).

அக்காரம் 2 பெ. திருநீறு. அரசுடன் ஆல் அத்தி ஆகும் அக்காரம் (திருமந். 1667).

அக்காரம்' பெ. மாமரம். (வைத். விரி. அக. ப . 4)

அக்காரம் + பெ. ஆடை. (ஆசி.நி.179)

அக்காரவட்டு பெ. சருக்கரைப் பொங்கற்கட்டி. காய் கறி ஒன்று புளிங்கறி ஒன்று அக்காரவட்டு இரண்டு (தெ.இ.க.13,913).

அக்கி+

அக்காரவடிசில் (அக்காரடலை, அக்காரடியல்) பெ. சருக்கரைப் பொங்கல். நூறுதடா நிறைந்த அக்கார வடி சில் சொன்னேன் (நாச்சி. தி. 9, 6). அக்கார வடிசில் தளிகை பதினைஞ்சுக்கு (தெ. இ. க. 24,523).

அக்காரை பெ.

(உக்காரை என்னும்) சிற்றுண்டி. (சீவக. 928 அக்காரையாக அடப்பட்டது-நச்)

அக்கால் வி.அ. அப்போது. வாடை., எக்கால் வருவ தென்றி, அக்கால் வருவர் எங்காதலோரே? (குறும். 277). அக்கால் அவனுழை ஆங்கே ஒழிந்தன (கலித். 146,21). அக்கால், அலவனை... தின்ற பழ வினை (நாலடி. 123).

அக்காலை வி.அ. அச்சமயம். ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை (திருவாச. 4, 25). அக்காலை இலக்குவன் புக்கான் (கம்பரா. 6, 17, 86).

...

அக்காள் பெ. தமக்கை. அக்காள் தங்கையும் இல்லை (நாஞ். மரு. மான். 1, 22). அக்காள் இருக் கிற வரையில் மச்சான் உறவு (பழ. அக. 45).

அக்காளன் பெ. வனப்புல். (பச்சிலை. அக.)

அக்காளி பெ. தெய்வத்திற்குப் படைக்கும் உணவு. (தெ.இ.க. 4, 83).

9

அக்காளிப்பிரசாதம் பெ. கோயில் பிரசாதம். அக் காளி(ப்) பிரசாதத்திலே நாள் வழி ஒரு பிரசாத (முன். 4,296).

மும்

அக்காளிமண்டை பெ. அக்காளிப்பிரசாதம் கலம். (முன். 4,284)

அக்கானி பெ. பதநீர். (நாஞ்.வ.)

வைக்கும்

அக்கி1 பெ. கண். விழியே அக்கி ... கண்ணாம்

(சூடா. நி. 2,96).

...

அக்கி' பெ. 1. தீ. அக்கிவாய் மடுத்த ஏடு (திரு விளை. பு. 63,38). அக்கு அக்கி கட்கத்து அத்தர் (திருப்பு. 1044). 2. தீக்கடவுள். அக்கியுங் கரம் இழந்து (சிவ தரு. 8,61). 3. வெப்பம். (வின்.) 4. (வெப்பக்காலத்தில் பெரும்பான்மையும் குழந்தை கள் உடலில் புண்போன்று வரும்) நீர்க்கசிவுடைய எரிச்சல் தரும் தோல்நோய் (பைச.ப.303)

அக்கி' பெ. ஒரு பூச்சி. (வின்.)

அக்கி பெ. கற்றாழை. (சித். அக./செ. ப. அக.அனு.)