பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கினிகலை

அக்கினிகலை பெ. மூக்கின் இருதுளை வழியாகவும் வரும் மூச்சு. (வின்.)

அக்கினிகாரியம் பெ. அக்கினியிற் செய்யப்படும் ஓமம் முதலியன. (செ.ப.அக.)

அக்கினிகிரியை பெ. இறந்தவரது உடலுக்குச் செய்யுங் கிரியை, நெருப்பினாற் சுடுதல். (சங். அக.) 100.5

அக்கினிகீடம் பெ. இருபத்து நான்கு வகைப் புழுக்களுள் ஒன்று.(கொப்புளம் எழும்பி எரிச்சலும் பேதியும் இதன் விடத்தினால் உண்டாகும்) (முன்.)

...

அக்கினி குண்டம் பெ. வேள்வித் தீ வளர்க்கும் குழி. (செ. ப.அக.)வடவாமுகாக்கினி என்பது அக்கினி குண் டத் திருத்தலால் பெற்ற பெயர் (தக்க. 475 ப. உரை). அக்கினிகுமாரம் பெ. ஒரு கூட்டு மருந்து. அக்கினி குமாரத்தினால்...ரோகங்களும் போம் (பதார்த்த.

1300).

அக்கினிகுமாரன்1

பெ. (தீக்கடவுள் மகனாம்)

முருகன். (செ.ப.அக.)

அக்கினிகுமாரன் பெ. ஒரு கூட்டு மருந்து. தீட்டுமே அக்கினிகுமாரன் ஆகச்செத்தபேர்

உண்டோ (போகர் 700 291).

உலகில்

அக்கினி குலம் பெ. நெருப்பினைத் தம் குலமுதலாகக் கொண்ட அரச பரம்பரை. (செ.ப.அக.)

அக்கினிகேசம் பெ. சிற்பத்தில் தலைமுடியைத் தீச் சுடர் போல் அடுக்கடுக்காய் மேல் நோக்கி அமைக்கும் தலைக்கோலம், (சிற். செந். ப.82)

அக்கினிகேது பெ. (நெருப்பின் குறியான) புகை.

(சங். அக.)

அக்கினிகோணம்

பெ. (அக்கினி

தேவனுக்குரிய)

தென்கீழ்த்திசை. (முன்.)

அக்கினிகோத்திரம் பெ. நாள்தோறும்

காலையிலும்

மாலையிலும் நெருப்பின் மூலமாகத் தெய்வங்கட்கு அவிப்பலியிட்டுச் செய்யும் வழிபாடு. அவையும்...அக் கினி கோத்திரத்துப் பிறப்பித்து விடப்பட்டன (தக்க. 449 ப. உரை). அத்தெய்வத்திற்கு அக்கினி கோத்திரத்திற்குரிய... தேவதானமாகக் கொடுத்து (பதிற்றுப். பதிகம் 7 குறிப்பு சேரும் அக்கினிகோத் திரச் சாலையில்...அழைத்து (பிரபோத. 10,10).

13

அக்கினிசன்மன்

அக்கினிகோத்திரி பெ. அக்கினிகோத்திரம் செய்பவன்.

(செ.ப.அக.)

அக்கினிச் சட்டி பெ. 1. சிறுதெய்வக் கோயில் விழா வில் அடியவர் கையில் எடுக்கும் நெருப்புச்சட்டி. (நாட் .வ.) 2. ஈமச் சடங்கிற்கு உறவினர் எடுத்துச் செல்லும் நெருப்புச்சட்டி. (முன்.)

அக்கினிச் சலம் (அக்கினிச் சிலம்') பெ. கார்த்திகைக் கிழங்கு. (பச்சிலை. அக.)

அக்கினிச்சிலம்' (அக்கினிச் சலம்) பெ. கார்த்திகைக் கிழங்கு. (மலை அக.)

அக்கினிச்சிலம்' (அக்கினிச் சிவம்) பெ. குப்பை மேனிச் செடி. (முன்.)

அக்கினிச்சிவம் (அக்கினிச்சிலம் 2) பெ. குப்பைமேனி. (மலை அக. செ.ப.அக.)

அக்கினிச்சுவத்தர் பெ. தேவபிதிரருள் ஒரு சாரார். அக்கினிச் சுவத்தர் எனும் தேவர் பிதிர்களும் மேனையை... ஈன்றார் (கூர்மபு. பூருவ. 13,13).

...

அக்கினிச்சுவாசம் பெ. (தீயின் வெம்மையை ஒத்த) அனல் மூச்சு. அக்கினி...மூக்கிரண்டில் உண்டாகும் அக்கினிச்சுவாசங்களாலே (தக்க. 476 ப. உரை).

அக்கினிச்சுவாலை1 பெ. நெருப்பின் கொழுந்து. உருக்க வற்றான அக்கினிச் சுவாலை (முன். 474 ப.உரை). அக்கினிச்சுவாலை' பெ. திருமால் சக்கரத்தின் தலை, அடி, இரு பக்கங்கள் ஆகிய நான்கு இடங்களிலும் சுவாலை போன்று அமைக்கப்படும் சிற்ப உறுப்பு. (சிற். செந்.ப. 129)

அக்கினிச்சேர்வை பெ. மருந்தில் தோய்த்துப் புண் ணிற்கு இடும் துணி, காரச்சீலை. (இலங். வ./செ.ப. அக.)

அக்கினிசகன் பெ. நெருப்பின் நண்பனாம் காற்று. (யாழ். அக. அனு.)

அக்கினிசகாயன்

பெ. (நெருப்பின் துணையாகும்)

காற்று. (முன்.)

அக்கினிசன் (அக்கினிசன்மன்)

பெ.

(நெருப்பில்

தோன்றியவன்) முருகன். (சங்.அக.)

அக்கினிசன்மன் (அக்கினிசன் ) பெ. (அக்கினியின் மைந்தன்) முருகன். (யாழ். அக.அனு.)