பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்ரகாரம்

அக்ரகாரம் பெ. ஒருமருந்துவேர். அக்ரகாரம் சண் பகப்பூ... (போகர் 700, 120).

அக்ரபூசனை (அக்கிரபூசனை,

அக்கிரபூசை) பெ.

முதல் மரியாதை. ஆர் கொலோ அக்ரபூசனைக்குரி யார் அரசரில் அந்தணீர் உரைமின்! (பாரதம். 2,1,

112).

அக்ரோட்டு (அக்கரோட்டு) பெ. மருந்திற்கும் எண் ணெய் எடுப்பதற்கும் பயனாகும் மரம். (குண. 1 ப. 6)

அக்ரோணி (அக்குரோணி, அக்கோகிணி, அக்கோணி, அக்கௌகிணி) பெ. பெரும்படைத் தொகுதி. எழு பது அக்ரோணி புடமுள செங்களம் (திருவ. சித்து.

43).

அகக்கடவுள் பெ 1. அந்தராத்மாவான கடவுள். (சங். அக.) 2. ஆன்மா. (செ. ப. அக. அனு.)

அகக்கண் பெ. 1. உட்கண். உட்செவிதிறக்கும் அகக் கண் ஒளிதரும் (பாரதி. தோத்திரம் 1,4,10). 2. ஞானம். அக(த்து)க்கண் கொண்டறிவதே ஆனந்தம் (திருமந்.

2944).

அகக்கணு பெ. மரங்களிலுண்டாம் உட்கணு. (வின்.)

அகக்கரணம் பெ. (உட்கருவியாகிய) மனம். சமம் அகக்கரண தண்டம் (கைவல். 1, 2).

அகக்கருவி பெ. உட்கருவி. இங்ஙனம் தோன்றிய கருவி அகக் கருவி புறக் கருவி என இருவகைப்படும்

(சைவ. கட். ப. 6).

குக்

அகக்காழ் (அகங்காழ்) பெ. 1. (மரத்தின் ) உள் வயி ரம். அகக்காழனவே மரமெனப் படுமே (தொல். பொ. 631 இளம்.).2. உள்வயிரமுடைய ஆண் மரம். அகக் காழ்... ஆண்மரமாகும் (பிங். 2836).

அகக்கூத்து பெ. சாத்துவிகம், இராசதம், தாமதம் ஆகிய மூன்று உட்குணங்களும் வெளிப்பட ஆடும் நடனம். (சிலப். 3,12 அடியார்க்.)

அகக்கோளர் பெ. (இறைவன் திருவடியை உள் ளத்தே கொண்டு) அணுக்கத் தொண்டு புரியும் அடி யார். கூற்றை அழலும் முளரி அகக்கோளர் (திரு

வாரூருலா 92).

அகக்கோளாளர் பெ. (அரசிக்கு அணுக்கத் தொண்டு புரியும் பெண்கள்) அகம்படிப் பெண்கள்.

பெ.சொ.அ. 1-2 அ

கைக்

19

9

அகங்காரம்

கோல் இளையரும் காஞ்சுகி முதியரும் அகக்கோளா ளரொடு... (பெருங். 1,47,167-168).

THE

அககந்தம் 1 பெ. வாசனைப்புல். (செ.ப.அசு. அனு.)

அககந்தம் 2. பெ. செண்பகப் பூ. (முன்.)

அககந்தம் 3 பெ. கந்தகம். (முன்.)

அகங்கரம்

(அகங்காரம்) பெ. செருக்கு, தருக்கு.

மனத்துயரும் ஆபத்தும் வளர்தொழிலும் அகங் கரத்தால் வரும் (ஞானவா. வைராக். 72).

அகங்கரி -த்தல் 11 வி. செருக்குக்கொள்ளுதல். பலரும் உடன் அகங்கரித்து மேரு சாரப் பார

வரிசிலை யின் நிலை பார்த்து மீண்டார் (பாரதம். 1,5,50).

அகங்கரிப்பு பெ. செருக்கு. அகங்கரிப்பு வரில் எவர்க்கும் அறங்கெடுக்கும் (பிரபோத. 7,25).

அகங்களி-த்தல் 11வி. மனமகிழ்தல். அப்பார் சடை யார் அடித் தொண்டர் அகங்களிப்ப (சிவஞா.

காஞ்சி. தழுவ. 25).

அகங்களிப்பு பெ. மகிழ்ச்சி. (வின்.)

அகங்காரக்கிரந்தி பெ. தத்துவங்களையும் தத்துவங் களாலான உடலையும் தான் என்று எண்ணும் உயிர் களின் பற்றுள்ளம். (நானாசீ.10 பத்தி 1)

அகங்காரசைதன்னியவாதி பெ. மூச்சினையே ஆன்மா என்னும் கொள்கை உடையவன். அகங்கார சைதன்னியவாதி

...

...

பிராணாதிவாயுக்களை

900

ஆன்மா என்னும் ஞானத்தால் அத்தத்துவத்தை அடைகிறதே முத்தி என்பார்கள் (சி. சி. 2, 73

மறைஞான).

அகங்காரத்திரயம்

பெ.

(சைவசித்.) மூவகைப்பட்ட

அகங்காரங்கள். (சங். அக.)

அகங்காரதத்துவம் பெ. முப்பத்தாறு தத்துவங்களில் ஒன்று. (சி.சி. 21 ஞான)

அகங்காரம் (அகங்கரம்)பெ. 1. தன்னைச் சிறப்பாகக் கரு தும்முனைப்பு ஆணவக்காட்டைக்களைந்து... அகங் காரம் என்னும் கல்லைப் பிளந்து (தாயுமா. 8, 6). அகங்காரம் என்னும் பேய் ஓட்டாயோ (சர்வ. கீர்த். 57,2). 2. பிறரை அல்லது பிறர் அறிவுரையை மதிக்காத செருக்கு, தருக்கு. அருமார்பு இலக்காக