பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகங்காரவாதி

...

எய் என்ன எய்யா அகங்காரமும் (பாரதம். 8,2, 229). பூங்காரகங்காணப் போதுவார் தாள் தலை மேல் தாங்கார் அகங்காரத்தால் (நூற்றெட். அந். 90). 3. அந்தக்கரணம் நான்கனுள் ஒன்று. இவ் வான்மா மனோ அந்தககரணங்களாயுள்ள புத்தி அகங்காரச் சித்தங்களில் ஒன்றன்று (சி.போ. 4,1). 4. (சாங்கி.) ஒரு தத்துவம். தத்துவம் இரு பத்தைந்தனையுந் தெரிதலாவது அதன் கட் டோன்றிய மானும் அதன்கட் டோன்றிய அகங் காரமும் (குறள். 27 பரிமே.). 5. அந்தக்கரணமே ஆன்மா என்னும் அபிமானம். (சங். அக.) 6. கோபம். (செ.ப. அக.)

அகங்காரவாதி

பெ. (தத்துவம்) மனோமயகோசமே ஆன்மா என்னும் கொள்கை உடையவன். (சி. சி . 4, 1

ஞானப்.)

அகங்காரான்மஞானம் பெ. அகங்காரத்துவமே ஆன்மா எனக்கொள்ளும் ஞானம். அகங்காரான்ம ஞானோ பாயம் உபதேசிக்கும் வைசேடிகனுக்கு (சி. சி. 8, 12 ஞானப்.).

அகங்காரி பெ. 1. செருக்குள்ளவன். என்போற் பகர்வார் இலை யென்றெண் ணகங்காரி (முல்லைவா. அந். 62). அவன் அகங்காரி (நாட். வ.). 2.கோப முள்ளவன். (செ.ப.அக.)

அகங்காழ் (அகக்காழ்) பெ. (மரத்தின்) உள் வயி ரம். (வின்.)

அகங்கிரகத்தியானம் பெ. தியானிக்கப்படும் சொரூபத் தைத் தனக்கு அபேதமாகச் சிந்தித்தல். (விசார. 207 )

அகங்கிரகோபாசனை பெ. தெய்வத்தைத் தான் என்று பாவித்துச் செய்யும் உபாசனை. தெய்வங்களை அகங் கிரகோபாசனை பண்ணுகிறான் (சி. சி. அளவை.

13 சிவாக்.).

அகங்கிருதன் பெ. கர்வமுடையவன். (சங். அக.)

.

அகங்கிருதி பெ. தன்னைச் சிறப்பாகக் கருதும் முனைப்பு, அகங்காரம். அகங்கிருதி நிரகங்கிருதி யுறாமல் (வேதா.சூ. 145).

அகங்கை (அங்கை) பெ. உள்ளங்கை. அகங்கை உள்ளங்கை (பிங். 1022). அகங்கை புறங்கை ஆனாற்போல் (சீவக. 312). அந்தரத்துள்ளே அகங்கை புறங்கையாம் (பெருந்.300).

2

20

அகச்சைவம்

அகச்சத்தானுவித்த சமாதி

பெ. ஆறு சமாதிகளில் ஒன்று. அசங்க சச்சிதானந்த சுயம்பிரகாச சுவரூ பமே நான் எனச் சிந்திப்பதே அகச்சத்தானுவித்த சமாதியாம். (வேதா. சூ. 151 உரை).

அகச்சத்தானுவேதம் பெ. அகச்சத்தானுவித்தசமாதி. (வேதா. சூ.151 உரை)

அகச்சந்தானம் பெ. சீகண்டதேவர்பால் உபதேசம்பெற்ற கயிலைவாழ் ஆசாரியர்களாகிய நந்திதேவர், சனற் குமாரர், சத்தியஞானதரிசனிகள், பரஞ்சோதி முனிவர் என்னும் நால்வர். திருக்கயிலையினின்றும் மண் ணுலகிற்கு வந்தவரை அகச்சந்தானம் என்றும் (முத்திநிச். நூலாராய்ச்சி ப. 27).

அகச்சமயம்

பெ.

சைவசித்தாந்தக்கொள்கைகளோடு

பெரிது ஒத்தும் சிறிது வேறுபட்டும் உள்ள பாடாண வாத சைவம், பேதவாத சைவம், சிவ சமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவர அவிகாரவாத சைவம், சிவாத்துவித சைவம் ஆகிய அறுவகைச் சம யம். புறச்சமய நெறி நின்றும் அகச்சமயம் புக்கும்

(சி. சி. சுப. 161).

அகச்சாதி பெ. ஆசான் என்னும் பண்ணியல் நால் வகையுள் ஒன்று. ஆசானுக்கு அகச்சாதி காந்தர் ரம், புறச்சாதி சிகண்டி (சிவப். 13, 112 அடியார்க்.). டி

அகச்சுட்டு பெ. சுட்டுப் பெயர்களில் முதனிலையுறுப் பாய் அமைந்து நிற்கும் சுட்டெழுத்து. (நன். 66 இரா மானுச.)

அகச்சுவை பெ. அகமார்க்கத்துக்குரிய இராசதம், தாம தம், சாத்துவிகம் என்னும் முக்குணச் சுவை. (சிலப். 3, 12 அடியார்க்.)

அகச்சூலி அக.அனு.)

பெ. ஆசுபத்திராமரம். (சித். அக./செ.ப.

அகச்செய்தி பெ. வீட்டுக்குள் நடக்கும் மந்தணம். பௌராணிகன்... வஞ்சகமகளிர் என்னும் இவர்க ளும்... அகச் செய்திகளை அறியக்கடவர் (கௌடல் யம் ப.69).

அகச்சைவம் பெ. சைவசித்தாந்தக் கொள்கைகளோடு பெரிதும் ஒற்றுமை அல்லாத சமயங்கள், அகப்புறச்சம யம். ஆதிசைவர் முதற் சைவர் ஐவருங் கோதிலா அகச்சைவ குழாங்களும் (திருவிளை. பு. 12, 25).