பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகச்சோலை

அகச்சோலை பெ. வீட்டை அடுத்துள்ள பூங்கா, உய் யானவனம். கற்பகவிருட்சம் இவளது அகச் சோலையில் (தக்க. 66 ப. உரை).

அகசம்1 பெ. எலுமிச்சை. (சங். அக.)

அகசம்' பெ. அகத்தி. (வைத், விரி. அக.)

அகசியக்கூத்து பெ. பகடிக்கூத்து. (சங். அக.)

அகசியகாரன் பெ. விதூடகன். (செ. ப. அக.)

அகசியம் பெ. 1. கைகால் ஆட்டியும் முகஞ்சுளித் தும் செய்யும்) பகடிக்கூத்து. ஒரு பாலின் அகசி 2. (நல். பாரத. இராச. 17).

யங்கள்

ப. அக.)

அகசு பெ.

ஏளனம். (செ.

இரவும் பகலும் கொண்டநாள். (சங். அக.)

2. பகல். (செ. ப. அக.)

அகசுமாத்து பெ. தற்செயல், எதிர்பாராவகை.

அகசு

மாத்தா ஆவணியில் கண்ணே நீ அரண்மனைக்குப் போகையிலே (மலைய.ப.229). இது அகசுமாத் தான சந்திப்பு (பே.வ.).

து

அகஞ்சுகி பெ. தான் மட்டும் சுகம் அனுபவிப்பவன்.

(செ. ப. அக. அனு.)

அகஞ்சுரிப்படுத்து-தல் 5வி. 1. மனத்தைத் தேற்றுதல். எனக்கோடுகிற தசையை உங்களுக்குச் சொல்லி அகஞ்சுரிப்படுத்தித் தரிக்கைக்கு (திருவாய். 8,2,2 ஈடு). 2. குறையச் செய்தல். (திருவாய். 4,7,9. ஈடு )

அகஞ்செவி பெ. காதின் உட்புறம். அகஞ்செவி நிரம் பும்படி ஆரவாரித்தன... (முல்லைப். 89 நச்.).

அகட்டு-தல் 5வி. (நடக்கும்போது கால்களை) அகல வைத்தல். அண்ணாந்து காலை அகட்டி நடந்து (பஞ்ச. திருமுக. 876).

அகட்டுவாய்வகற்றி பெ. (அகடு+வாய்வு + அகற்றி) (சித்தமருத்.) வயிற்றில் வெப்பத்தையும் வலியையும் மட்டுப்படுத்தி வாயுவையும் வலியையும் நீக்கும் மருந் துச் சரக்கு. (குண. 1 ப. 1)

அகடம்' பெ. அநீதி. (சங்.அக.)

அகடம்' பெ. தந்திரம். (வின்.)

2

21

அகடு1

அகடவிகடம் 1 பெ. பரிகாசம். அவன் அகடவிகட. மாய்ப் பேசுகிறான் (பே.வ.). மனமே மற்கடம் பண்ணும் அகடவிகடம் (சர்வ. கீர்த். 40,2).

அகடவிகடம்' பெ. தந்திரம். அவன் அகடவிகடமெல் லாம் பண்ணியும் காரியம் நடக்கவில்லை (பே.வ.). அகடனம்1 பெ. (அ+கடனம்) செய்யமுடியாதது.

(சங். அக.)

அகடனம்? பெ. குறும்பு. (செ. ப . அக . அனு.)

அகடனாகடனசாமர்த்தியம்

(அகடிதகடனா (அகடிதகடனா சாமர்த் தியம்) பெ. செய்ய இயலாததைச் செய்விக்கும் வன்மை. அகடனாகடன் சாமர்த்தியப்பிரதாபா (சர்வ. கீர்த். 76, 4).

அகடிதகடனா பெ. செய்தற்கரியதைச் செய்கை. (சங்.

அக.)

அகடிதகடனாசாமர்த்தியம்

(அகடனாகடனசாமர்த்தி

யம்) பெ. செய்ய இயலாததைச் செய்விக்கும் வன்மை. (வேதா. சூ. 56 உரை/செ. ப. அக.) ஆலந்தளி ரிலே கண்வளர்ந்தருளின அகடிதகடனாசாமர்த்தி யத்தை உடையவன் (பெரியதி. 1, 8,6 உரை).

.

அகடிதம் பெ. செயற்கு அரியது. அகடிதங்களைக் கடிப்பிக்க வல்லன் (பெரியதி. 2, 2, 1 தமிழாக்.).

அகடியம்

பெ.

அநீதி. (வின்.)

அகடு' பெ. 1.(ஒரு பொருளின் அல்லது இடத்தின்) உட்பகுதி. அகடுநனை வேங்கை வீ (புறநா. 390,21). வண்டு... செழுந்தோட்டு அகட்டின் அடை கிடக்கும் (கூர்மபு. பூருவ. 15,57). விரி பூவனத்தின் அகடு வாழும் முப்பழமும் உதிரும் 159). 2.உள்வாங்கி முதிர்சோலை

94. 41).

3.

(சோலை. குற.

பகுதி. அகடு ஆரப்புல்லி (கலித். வயிறு. பால் வீ தோல்முலை அகடு நிலம் சேர்த்தி.. முடங்கிய... செந்நாய் (நற். 103,5-6). வெள் அகட்டு யாமை (ஐங். 81). அகடு ஆரார் (குறள்.936). அகடுற முகடு ஏறிப் பீலிமாமயில் நடம் செயும் (பெரியதி. 1,2,1). பசுங்கிளியை நோவ அகட்டு ஒடுக்கி (சீவக. 1039). அரவு அகடுரிஞ்சி அலற... கடைந்தன (திருவரங்.கலம். 13,11). குண்டோதரன் அகட்டிடை வடவை (திருவிளை. பு. 7, 10). மாதர் சூல் அகட்டுள் தோன்றா மனுநெறி ஆதமே (சீறாப்பு, 1, 4, 11).