பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தி1

பேச நான் 9, 6).

கேட்கமாட்டேன்

(பெரியாழ். தி. 2,

000

அகத்தி' பெ. உண்ணத்தகும் கீரை தரும் சிறிய மரம். அடுத்தடுத்தகத்தியோடு வன்னி கொன்றை சடைப்பெய்தாய் (தேவா.2, 98, 2). அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே (யென். பழ.தொ. 688). முன்னை வித்து அகத்தி வித்து (போகர் 700

43).

அகத்தி 2 பெ. பாற்கடல். திரைக்குழாம் ஆடு அகத்தி (திருக்கழுக். உலா 22-23).

அகத்தி3 பெ. அகத்திய முனிவன். (சங். அக.)

அகத்திக்கறுப்பு பெ. சில கிராம தேவதைகளுக்குச் சாத்தும் ஆடைவகை. (தஞ். வ.)

அகத்திக்கீரை பெ. உண்ணத் தகும்கீரை. அகத்திக் கீரைக் குழம்பு (பே.வ.). அகத்திக்கீரையாம் பிண் ணாக்காம், அத்தை இத்தினி நெய் குற்று (பழமொழி).

அகத்திடு-தல் 6வி. 1. உள்ளிடுதல். கவவு அகத் திடுமே (தொல். சொல். 357 சேனா.). காதலர் முத்துவடங்கள் விரிந்த கலத்தை அகத்திட்டுக் கிடக்கின்ற ஆரம் மீதே (கலித். 4,9நச்.). 2. இரு கையால் அணைத்தல். கணவரைக் கூடினவருடைய அகத்திடுதலை உடைய கையை நெகிழாதே (கலித். 33,7 நச்.).

அகத்திணை பெ. 1. (அகம் புறம் என்னும் பகுப் புள் அகமாகிய) இன்பவொழுக்கம். அகத்திணை யியலானும் களவியலானும் கற்பியலானும் இன் பப்பகுதி கூறினாராம் (தொல்.பொ. இளம்.தோ ற்றுவாய்). நாணவும் நடுங்கவும் நாடுதல் அகத்திணை இலக் கணம் அன்றென்க (இறை. அக. 7 உரை). 2. அகப் பொருள்பற்றியமைந்த (மறைந்துபோன) ஒரு நூல்.

(களவி. காரிகை 8 )

அகத்திணைப்புறம் பெ. அகப்பொருள் இலக்கணத்தில் கூறப்படும் நடுவண் ஐந்திணையில் சேர்க்சுப்படாத கைக் கிளை, பெருந்திணை ஆகிய இரு பிரிவுகள். நடுவு நின்ற ஐந்திணை யா தலிற்... அவற்றின் புறத்து நிற் றலின் அகப்புறமென்றும் (தொல். பொ. 54 நச்.).

அகத்திணையியல் பெ. இன்பமாகிய ஒழுக்கங் கூறும் இலக் கணம். (தொல். பொ. முதல் இயல்பெயர்)

24

அகத்தியன் 1

அகத்திப்பழுப்பு பெ.அகத்திக்கறுப்பு. (செ.ப.அக.அனு.)

அகத்தியத்திசை

பெ. தெற்குத்திசை. தென் திசை அகத்தியதிசை என இசைப்பாம் (திருநெல். பு. அகத் தியரை. 29).

அகத்தியம் 1 பெ. அகத்திய முனிவரால் செய்யப்பட்ட (மறைந்துபோன ) முத்தமிழ் இலக்கண நூல். செய் தானாற் பெயர்பெற்றன அகத்தியம் தொல்காப் பியம் என இவை (இறை. அக. 1 உரை). முந்துநூல் அகத்தியமும் மாபுராணமும், பூதபுராணமும்

சை நுணுக்கமும் (தொல். எழுத். சிறப்புப். நச் .). இத்தொடர்நிலைச் செய்யுள் தேவர் செய்கின்ற காலத்திற்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமு மாதலானும் (சீவக. கடவுள்.நச்.).

அகத்தியம்' எப். நாடகத்தமிழ் நூல். (சிலப். அடி

யார்க், உரைப்பாயிரம்)

அகத்தியம் 3 பெ. 1. இன்றிய மையாமை, அவசியம். அகத்திய ஞானத் தேனமுதைத் தருவாயே (திருப்பு. 391)...அவர்களுக்குக் கல்வி அவசியம்தான் நான் படிக்க வேண்டிய அகத்தியம் என்ன (பிரதாப.ப. 5). 2. உறுதி. திரும்பிவரும்போது அகத்தியம் வருவதாகச் சொல்லி விடை பெற்றுக்கொண்டு

(முன். 156).

அகத்தியமலை

பெ. பொதிகைமலை.

(சென். இரா.

சொற்பட்டி. 24)

அகத்தியர் குழம்பு

பெ. பெருங்காயம்,

வெண்காரம்,

ஓமம், பெருஞ்சீரகம் முதலிய சரக்குகள் கொண்டு செய்கிற மலமிளக்கும் மருந்து. (சங். அக.)

அகத்தியர்தேவாரத்திரட்டு பெ. (சிவாலய முனிவர் பொருட்டு) அகத்தியர் தொகுத்த 25 தேவாரப் பதி கங்கள் கொண்ட தொகுதி. (நூ.பெ.)

அகத்தியல் பெ. உள்ளத்தியற்கை, உளவியல்பு. அழிந் தது பிறவி என்னும் அகத்தியல் முகத்துக்காட்ட (கம்பரா. 6, 4, 138).

அகத்தியன் 1 (அகத்தியனார்) பெ. தமிழுக்கு இலக் கணம் வகுத்தவரும் பொதிகை மலையில் வாழ்ந்தவரு மாகக் கூறப்படும் முனிவர். அமர முனிவன் அகத்