பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியன் 2

தியன் தனாது கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை (மணிமே. பதி. 11-12). அகத்தியன் இயற்றிய அகத் திய முதல் நூல் (கூத்த. 2). இடைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் (இறை. அக. 1 உரை). சாந்திக்கூத்தே...என்று ஆய்ந்துற வகுத் தனன் அகத்தியன் (சீவக. 672 நச்.). சிந்தை எண்ணி அகத்தியற் சேர்கென (கம்பரா.3,3,26). ஆயுங்கு ணத்து அவலோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டே யும் புவனிக்கியம்பிய தண்தமிழ் (வீரசோ. பாயி. 2). ஆரிய மைந்தன் அகத்தியன்... நிறைமேவும் இலக் கணம் செய்து கொடுத்தான் (பாரதி, தமிழ்த். 1).

அகத்தியன்' பெ. ஒரு நட்சத்திரத்தின் பெயர். அகத் தியன் என்னும் மீன் உயர்ந்த தன்னிடத்தைக் கடந்து மிதுனத்தைப் பொருந்த (பரிபா. 11, 11 உ.வே. சா. குறிப்புரை).

அகத்தியனார் (அகத்தியன்') பெ. அகத்திய முனிவர். இடைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும் (இறை. அக.

1 உரை).

அகத்தியா பெ. 1. எட்டாத ஆழம். (வின்.) 2. கடல். (கதிரை. அக.)

அகத்தியிலை பெ. அகத்திக்கீரை. பித்தமது சாந்தி யாம் ... அகத்தியிலை தின்னும் அவர்க்கு (பதார்த்த.

543).

அகத்திருத்துவம் பெ. (அ+கத்திருத்துவம்) செயலின்றி நிற்குங் கடவுள் தன்மை. கத்திருத்துவமோடு அகத் திருத்துவம் பின் அந்நிதா கருத்திருத்துவம் (வேதா. சூ. 47).

அகத்தினகம் பெ. கோபுரத்தினுள் அமைக்கப்படும் படிச்சுருள் (ஆசி.நி.163)

அகத்தினள் பெ. மனைவி. அகத்தினள் நோய்தனில் வருந்த (சங். அக.).

அகத்தீசர் பெ. அகத்திய முனிவர். அகத்தீசர் சட்டை நா தர்... காப்புத்தானே (கருவூரார். திர. 2),

அகத்தீசரறுகு பெ. அறுகம்புல். (பச்சிலை. அக.)

அகத்தீசுரப்புல் பெ. அறுகம்புல். (சித். அக./ செ. ப. அக. அனு.)

அகத்தீடு பெ. 1. கையுள் அடங்க அணைக்கை. (செ ப.அக.) 2. (அகத்தில் இடப்பட்டது) எண்ணம். அகத்தீடு முற்றும் பிரணவமாகப் பிறங்கி (ஆனந்த

வண்டு. 352).

2

5

அகதி'

அகத்துணை பெ. நெஞ்சத்துணை, உறுதுணை. அகத் துணையாம் பரதன் செல்வத்தை ஒழிக்கவோ

(இராமநா. 2, 8, தரு 2).

அகத்துரைப்போன் பெ. 1. கடவுள். (ராட். அக.) 2. மனச்சாட்சி. (முன்.)

அகத்துவங்கொள்(ளு) - தல் 2வி. (கோயில், மனை முதலியன கட்டுவதற்குக்) கடைக்கால் தோண்டுதல். தேவர் தங்கட் கோய்வுறு கோயில் அகத்துவங் கொள்க (விதான. நல்வினை. 12/செ. ப. அக). அகத்துவசம் பெ. கோட்டை மதிற்கொடி. மதிதனை ஆங்கிடும் அகத்துவசம் தொகுமே (கருவைப்பு.

நக. 20).

அகத்துழிஞை பெ. (பொருளிலக்.) நொச்சிப்பூ அணிந் தோர் மதிலின் உள்ளிருந்து போர்புரிய அவரை உழி ஞைப்பூ அணிந்தோர் முற்றுகையிட்டு வெல்வது பற் றிக் கூறும் புறத்துறை. முது உழிஞையே முந்து அகத்துழிஞை (புற.வெண். உழிஞை.நூற்.9.).

அகத்துழிஞையோன் பெ. முற்றுகையிடப்பட்ட மதிலின் உள்ளிருப்போன். முன்புபோல நட்புக் கொண்ட அகத்துழிஞையோர் ஆளும்படி உயர்ந்த உதவி யைச் செய்த... (மதுரைக். 741 நச்.).

அகத்துறுப்பு பெ. 1. உள்ளுறுப்பு (செ.ப.அக. அனு.) 2. மனப்பண்பு, அன்பு. அகத்துறுப்பு அன்பில வர்க்கு (குறள். 79). உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பு (குறள். 79 மணக்.).

அகத்துறை பெ. இலக்கியப் பொருளில் அகம் பற்றிய வகை. அகத்துறைகள் தாங்கி ஐந்திணை நெறி அளாவி (கம்பரா. 3, 5, 1).

அகத்தொண்டர் பெ.(வீட்டுப்) பணியாளர். ஒருவர் மனையிற் பணிசெய்யும் அகத் தொண்டர்க்குள தாகிய உரிமை (சி. போ. பா. 8, 1 1 ப. 173).

அகதகாரன் பெ. மருத்துவன். (செ. ப. அக. அனு.)

அகததந்தரம் பெ. ஆயுர்வேதச் செய்யுட் பிரிவு எட்ட னுள் ஒன்று. (வாகட அக. முகவுரை)

அகதம் பெ. 1. உடல்நலம். (சங். அக.) 2. மருந்து. (கதிரை. அக.)

அகதி பெ. வேலமரம். (வின்.)

அகதி பெ. (சைனம்) மோட்சகதி. அடைந்தனை அகதியைக் கதியின்றி (மேருமந்.பு. 173).