பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகதி3

அகதி

(அஃதி, அஃதை, அக்காத்தி, அகுதி) பெ, 1. கதியிலி. அகதிக்குத் தெய்வமே துணை (பழ. அக. 6). 2. (இக்.) தன்னாட்டு அரசியல் நிலை காரண மாக உடைமைகள் இழந்து திக்கற்று வேறு நாடு சென்று தங்குபவன். (பே. வ.)

அகதி பெ

தில்லை மரம். (கதிரை. அக.) அகதிகன் பெ. ஆதரவற்றவன், உதவியற்றவன். (சங்.

அக.)

அகதிசேத்திரத்தார் பெ. சுவர்க்கவாசிகளான தேவர்க ளினும் மேலானவர். சுவர்க்கவாசிகளிலும் பெரிய வரான அகதிசேத்திரத்தார் (தக்க.352 ப.உரை).

அகதியன் பெ. புகலிடம் இல்லாதவன். நிலந்தனக்கு இல்லா அகதியன் (சேரமான். பொன். 51).

அகதேசி பெ. பிறந்த ஊரிலேயே பிச்சையெடுப்பவன். அகதேசியைக் கெடுக்கவந்த பரதேசி (பழமொழி).

அகந்தை பெ. 1. (தான் என்னும் எண்ணத்திற்குத் தோற்றுவாயாகும்) அகங்காரம். மூலமாம் பகுதி தன்னின் முளைத்திடும் புந்தி...ஏலுறும் அகந்தை ஒன்றின் எய்தும் ஐம்புலனும் (கந்தபு. 2, 11,2). அரிவாய் அடியோடும் அகந்தையையே (கந்தரனு. 37). அகந்தை நீங்கி...முத்தன் என இருத்தல் துரி யம் (சிவப்பிர.விகா. 325). யான் எனும் அகந்தை தான் எள்ளளவும் மாறவில்லை (தாயுமா. 8,9). அகந்தை மூடும் என் சிந்தை (சர்வ.கீர்த். 17, 2). 2. செருக்கு. அற்றைநாள் முதல் அகந்தையும் பொறாமையும் அகற்றி... (சேதுபு. மங்கல. 87). அகந் தை எத்தனை மனக் கள்ளம் எத்தனை (தாயுமா. 8,1). 3. ஆணவம். ஞானவாளால் அகந்தையாம் வனத்தை வீட்டி (செ. பாகவத. 12, 3, 14). நம் அகந் தையை நாம் கொன்றுவிட்டால் (பாரதி. தோத்தி ரம். 77).

அகநகர் பெ. 1. கோட்டைக்குள் அடங்கிய உள்நகர். புறச்சிறையிருக்கை பொருந்தாதாகலின் அரைசர் பின்னோர் அகநகர் மருங்கினின் (சிலப். 15, 108- 109). தொகை கொள் மாடத்து அகநகர் வரைப் பின் (பெருங்.1, 43, 24). அன்ன தன்மை அகநகர் நோக்கினான் (கம்பரா. 2, 10, 36). 2 அரண்மனை. அந்தரக் கடைகள் நீங்கி அகநகர்... புக்கான் (சூளா. 362).3. அந்தப்புரம். அரசும் உரிமையும் அகநகர்ச் சுற்றமும் (மணிமே. 25, 122).

அகநகை 1-த்தல் 11வி. இகழ்ச்சி தோன்றச் சிரித்தல். கொலைப்படு மகனலன் என்று கூறும் அருந்திறன்

26

அகநிலை

மாக்களை அகநகைத்து உரைத்து (சிலப். 16, 163-

164).

அகநகை' பெ. இகழ்ச்சிச் சிரிப்பு. அகநகை இகழ்ச்சி நகை (சிலப். 16, 164 அடியார்க்.).

அகநாடகம் பெ. நாட்டிய வகை.

பாட்டும் என்றது

அகநாடகங்களுக்கும் புறநாடகங்களுக்கும் உரிய உருக்களும் என்க (சிலப். 3, 14 அடியார்க்.).

அகநாடகவுரு பெ. அகநாடகத்துக்குரிய பாடல்கள். (சிலப். 3, 14 அடியார்க்.)

அகநாடு பெ. உள்நாடு. ஆடுகளங் கடுக்கும் அக நாட்டையே (புறநா.28,14).

அகநாழிகை பெ. கருப்பக்கிருகம்.

கோக்கருநந்தடக்

கன் அகநாழிகைச்

சென்னடைக்கு அட்டின பூமி

(பாண்டி. செப். 7, 7).

அகநாழிகையார் பெ கோயிலில் பூசை செய்வோருள் ஒரு பிரிவினர், இத்தளி அகநாழிகையார் வழி அடுத்த சாவா மூவாப் பேராடு (தெ.இ.க. 14,59).

அகநானூறு பெ. சங்க இலக்கிய அகப்பொருள் தழுவிய நானூறு தொகை நூல். முத்தொள்ளாயிரம்

புறநானூறு (பெருந். 1384).

எட்டுத்தொகையுள்

பாடல்கள் கொண்ட

அகநானூறு

அகநிர்ணயம் பெ. ஆசௌச (தீட்டு) விதிகளைக் கூறும் ஒரு வடமொழி நூல். (சங். அக.)

அகநிருவிகற்பசமாதி பெ. (வேதாந்தம்) ஆறு சமாதி களுள் ஒன்று. புகன்ற திருசியம் சத்தமெனும் இரண்டும் அகன்றே இங்கு அசைவு இல் தீபம் எனப் பந்தமற இருத்தல் இலங்கும் அகநிருவிகற் பசமாதி (வேதா.சூ.151).

அகநிலாமணிவட்டம் பெ. வீட்டினுள் நிலவொளிபடுதற் சூரிய திறந்த முற்றம். (ராட். அக.)

அகநிலை பெ. 1. நகர். அரைசு மேம்படீஇய அக நிலை மருங்கில் (சிலப். 5, 161). 2. உள்ளிடம். (வின்.)

அகநிலை 2 பெ. மனநிலை. போனவன் அகநிலை புலமையின் உணர்வான் (கம்பரா. 3, 2, 33).

அகநிலை* பெ. (இக்) ஒரு பொருளை அதன் உள்ளடக்க வழியாக ஆராயும் நிலை. அகநிலை ஆய்வு (புதிய வ).