பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

அகப்படுத்து-தல்

(போரூர்ச்சந்.பஞ்சதி. 5). 2. 2. (நாட்டை|அரசரைக்) கீழ்ப்படுத்துதல், கைக்கொள்ளுதல். ஒரு பகல் முர சொடு வெண்குடை அகப்படுத்து (அகநா.36, 20- 21). பிழையா விளையுள் நாடு அகப்படுத்து (பதிற்றுப். 32,14). சினங்கெழு வேந்தரை... தாக்கி

ஒருங்கு அகப்படேஎனாயின் (புறநா. 72, 7-9).3. (பண்பினை) மனத்துட்கொள்ளுதல். தலைமகள் பண் பினைத் தலைவன் அறிந்து அத்தெளிவைத் தன் னகப் படுத்துத் தேர்தல் (தொல். பொ.98 இளம்.). 4. வசப்படுத்துதல். பெயர்ந்தாள் என் அறிவு அகப்படுத்தே (கலித். 57, 24). நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு (திருவாச. 9, 12).

அகப்படுத்து-தல் 5வி. 1. கீழ்ப்படுத்துதல். தேர்

...

கடாவி அகப்படுத்து என்று தானும் ஆண்மையால் மிக்கு அரக்கன்... (தேவா. 4,34,3). 2. வசப்படுத் துதல். ஆழ்வாரை அகப்படுத்துகையால் வந்த... (அமலனாதி. 2 அழ.). அழைத்து அகப்படுத்தி ஒட் டறப் பொருட் பறிப்பவர் (திருப்பு.66) பரிசேயர் போய் அவரைப் பேச்சில் அகப்படுத்த ஆலோ சனை செய்தனர் (விவிலி. மத்தேயு 22,15).

அகப்

அகப்படை பெ. 1. நம்பிக்கைக்குரிய பணியாளர். படையென்று மிடுக்கரா யிருப்பாரைக் கூட்டிக் கொண்டு (திருவாய். 10,1 பிர . ஈடு).

2.உள்நாட்டுப்

பாதுகாப்புக்கான படை. (கையேடு ப. 284)

அகப்பணி பெ. அந்தரங்கக் கைங்கரியம். அங்கு அகப் பணி செய்வர் விண்ணோர் (திருவாய். 10,2,6).

அகப்பத்தியம் பெ. 1. மருந்துண்ணும் காலத்து மேற் கொள்ளவேண்டிய உணவுமுறை. (நாட்.வ.) 2. மருந் துண்ணும் காலத்துப் பெண்ணுறவு கொள்ளாதிருக்கை. (சித். பரி. அக.ப. 153)

அகப்பரம் பெ. திண்ணை. (வின்.)

அகப்பரிசாரமகளிர் பெ. அரண்மனையின் உட்பகுதியில் பணிபுரியும் பெண்கள். அரசன் கோயில் அகப்பரி சார மகளிர் (சிலப். 5, 68-75 (சிலப். 5, 68-75 அடியார்க்.).

அகப்பரிவாரம் பெ. 1. அரசனது அரண்மனையில்

பணிபுரியும் மகளிர் சுற்றம்.

(சீவக. 292 அகப்பரிவாரம்

ஐஞ்ஞூற்றுவர் நச்.). 2. அரண்மனைப் பணியாளர். (சென். கல். அறிக். 146, 1925)

அகப்பற்று 1 பெ. உடம்பினை 'யான்' என்று அதன் மேல் வைக்கும் விருப்பு. இவ்வுடம்புகளும் 'யான்'

...

3

அகப்பாட்டெல்லை

எனப்படும். இதனான் அகப்பற்று விடுதல் கூறப் பட்டது (குறள். 345 பரிமே.).

அகப்பற்று ' பெ. 1. கிராமப் பங்காளிகள் அவ்வப்போது பிரித்து அனுபவிக்கும் கிராம நிலம். (செ.ப. அக. அனு.) 2. ஆதிமுதல் குளப்பாசனமுள்ள நிலம். (திரு நெல்.வ.)

அகப்பா1 பெ. 1. அரண், மதில். பெருங்கோட்டு அகப்பா எறிந்த ... குட்டுவ (பதிற்றுப். 22, 26-27). குட்டுவன் அகப்பா அழிய நூறி (நற்.14, 4). அகப்பா எறிந்த அருந்திறல் (சிலப். 28, 144). 2. மதிலுள் உயர்மேடை. அகப்பா

...

நிலமே (பிங்.631). 3. அகழி. அகப்பா

(பிங். 627).

.

மதிலுயர்

...

அகப்பா2 பெ. அகப்பாட்டு. அகப்பாட்டு. (யாப்.வி.77 உரை)

அகழி

அகப்பா அகவல் பெ. அகப்பொருள் தழுவிப் பத்துறுப் புடையனவாய் வஞ்சித்தளை விரவாது முடியும் ஆசிரி யப்பா வகை. அகப்பா அகவல் ஐயீருறுப்பின் ஆசிரி யம்மே (யாப்.வி.77 உரை).

அகப்பாட்டு பெ. 1. அகப்பொருள் அமைந்த செய்யுள். அகப்பாட்டின் ஒரு பாட்டுக் கேட்டவிடத்து இவ் வைந்து திணையுள்ளும் இன்னதொன்று பற்றி (இறை. அக. 56 உரை). உவமைப் பொருளும் இறைச் சிப் பொருளும்... எய்தும் அகப்பாட்டினுள் (நம்பி யகப். 236).2. அகப்பொருள் நூலாகிய அகநானூறு. கானல் மாலைக் கழிப்பூக் கூம்ப என்னும் அகப்பாட்டும் (கலித். 118 நச்.).

அகப்பாட்டுவண்ணம் பெ. (யாப்.) இறுதி அடி முடித் துக் காட்டும் ஈற்றசை ஏகாரம் பெறாது, இடை அடி போன்று வரும் சந்தம். இறுதியடி முடியாத் தன்மையின் முடிந்ததாகலின் அகப்பாட்டு வண்ண மாயிற்று (தொல். பொ. 536 பேரா.).

...

அகப்பாட்டுறுப்பு பெ. அகப்பாட்டிற்குரிய திணை, கை கோள், கூற்று, கேட்போர், இடம், காலம், பயன், முன்னம், மெய்ப்பாடு, எச்சம், பொருள்வகை, துறை ஆகிய பன்னிரு கூறுகள். திணையே ஆறிரண்டு அகப்பாட்டுறுப்பே (நம்பியகப்.

என்று 211).

...

துறை

அகப்பாட்டெல்லை பெ. ஒரு நூல் வழங்கும் நாட்டின் எல்லை. இம்மலையும் ஆறும் கூறியது ..

உள்

...