பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பாடு

எல்லோராலும் அறியப்படுதலானும் என்பது. இவை அகப்பாட்டெல்லை (தொல். எழுத். பாயி. இளம்.).

அகப்பாடு பெ. 1. நெருங்கியிருக்கை. அகப்பாட்டு அண்மையன் அல்லதை (பெருங்.3,18,20). 2.புதி தாகக் கண்டுபிடித்த விடயம். (செ.ப. அக. அனு.)

அகப்பு1 பெ. 1. ஆழம். என்ன எண்ணி அகப்பு 54 குலமாதரார் (கமலாலயச்.

றுங்

2. தாழ்வு. ( கதிரை. அக.)

அகப்பு' பெ.

மரப்பிளப்பிற்

ஆப்பு. (நாட்.வ.)

அடிக்குறிப்பு).

செருகும் மரத்துண்டு,

அகப்பு' பெ. எழுச்சி. (சம்.அக./செ.ப.அக. அனு.)

அகப்புலி பெ. திரவியம். (கரு. அக./செ. ப. அக. அனு.)

அகப்புறக்கைக்கிளை பெ. காமவேட்கை தோன்றும் பக் குவம் இல்லாத இளம்பெண்ணிடம் ஒருவன் அவள் குறிப்பறியாது கூறுவதாக அமைகிற அகப்பொருள் ஒழுக்கம். காமஞ்சாலா இளமையோள் வயிற் குறிப்பறிவுறாது...கூறுவது அகப் புறக்கைக்கிளை (நம்பியகப்.241 ப. உரை).

அகப்புறச்சமயம் பெ. சைவத்தின் பிரிவுகளாய், சைவ சித்தாந்தக் கொள்கையிலிருந்து வேறுபட்ட கொள்கை யும் ஆசாரமுமுடைய மாவிரதம், பாசுபதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாதசைவம் ஆகிய ஆறு சம யங்கள். (சி. போ. அவைய.)

அகப்புறத்தலைவன் பெ. ஐவகை ஒழுக்கங்களுக்குப் புறம்பாகிய கைக்கிளை, பெருந்திணை ஒழுக்கங்களில் பேசப்படும் தலைவன். (கலித். 108 துறைவிளக்கம்)

அகப்புறத்திணை பெ. அகனைந்திணைக்குப் புறம்பான கைக்கிளை, பெருந்திணை ஆகியன. (யாப். வி. 96

உரை)

அகப்புறப்பாட்டு பெ. கைக்கிளை பெருந்திணைகளுக் குரிய செய்யுள். அகப்பாட்டிற் சொன்ன இலக் கணங்களைக் கடவாது அகப்புறப்பாட்டும் (நம்பி

யகப். 250 ப. உரை).

அகப்புறப்பெருந்திணை பெ. (அகன்றுழிக் கலங்கல் முதலாகத் தலைவியும் தானும் வனமடைந்து நோற் றல் ஈறாகக் கூறப்படும்) அகத்திணைக்குப் புற மாகிய பெருந்திணை. (நம்பியகப். 243)

29

அகப்பைக்கணை

அகப்புறப்பொருள் பெ. அகப்புறத்திணை. (கதிரை. அக.) அகப்புறம் 1 பெ. 1. அன்பின் ஐந்திணைக்குப் புறம் பாகும் கைக்கிளையும், பெருந்திணையும். கைக்கிளை யும் பெருந்திணையும் அவற்றின் புறத்து நிற்ற லின் அகப்புறமென்று பெயர்பெறுதலும் (தொல். பொ. 54 நச்.). தலைவன் பெயரைக் குறிப்பாகச் சுட்டியுரைக்கும் அகப்பாட்டு பாட்டுடைத் தலைவனே கிளவித் தலைவனாகக் கூறிய அகப்புறமாயிற்று (கலித். 67, 1-5 நச்.).

2.

அகப்புறம்' பெ. 1. வீட்டின் பின்புறத்துள்ள இடம். 'வால மனையகத்துச் சார்ந்தான் தலைமகன்' என் பதுபட வந்தனஎனின் அவை அகமல்ல அகப் புறத்தே அடங்கும் (இறை. அக. 21 உரை). 2. ஒரு சார் தொடர்பு கொண்டிருந்தும் புறம்பானது. (செ.ப.

அக.)

அகப்புறமுழவு பெ.

நடுத்தர ஓசையுடைய தண்ணுமை போன்ற முழவு வகை. இவை அகமுழவு அகப்புற முழவு என எழுவகைப்படும் (சிலப். 3, 27 அடி

யார்க்.).

அகப்பூ பெ. இதயகமலம். பெருவெண் திங்கள் மால் அகப்பூ மலைந்து (சீவக. 1662 அகப்பூ - இதயகமலம். நச்.)

அகப்பூசை பெ. உள்ளத்தால் இயற்றும் பூசை. (செ. ப. அக. அனு.)

அகப்பேய் பெ. (உள்ளத்தின் பேயாகிய) தீய எண் ணங்கள். தொல்லை தரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும். (பாரதி. தோத்திரம். 27).

அகப்பேய்ச்சித்தர் பெ. தம் மனத்தினைப் 'பேய்' என விளித்துப் பாடிய ஒரு சித்தர். வட்டமரை இடைக் காடர் அகப்பேய்ச் சித்தர் (பதினெண் சித். கோவை முகவுரை பாடல் 3).

அகப்பை பெ. 1. (நீண்ட குச்சியின் நுனியில் கொட் டாங்கச்சி செருகப்பட்டுக்) கரண்டியாகப் பயன்படும் கருவி. அளப்பரிய குளப்புக்கால் அகப்பைகளாக் கொள்ளீரோ (கலிங். 548). ஓர் அகப்பை அன்னம் இலையிலிட வெள்ளி எழும் (பெருந். 1619). ஆற்றி அரையரை அகப்பையாய் (நாஞ். மான். 8, 77). 2. உணவளவு. அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லாம் அடங்கும்

ஆற்றி அ

மரு.

அக. 16).

அகப்பைக்கணை

(பழ.

பெ. அகப்பையிலுள்ள காம்பு.(பே.வ.)