பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

அகம்படி'

புரியும் தொண்டு. உடையாள் திருவகம் படியில் யோகினிகளே (தக்க. 95). கயிலை காக்கும் அகம் படித் தொழின்மை (சிவஞா. காஞ்சி. பாயி. 8). 5. அரண்மனை அந்தப்புரம். (தெ.இ. கோ. சாசன. ப. 1389).6. அடியார். வான் இளவரசு என்கிறபடியே அகம்படி வைத்த அரசாயிருக்கும் (திருவாய். 5,8,2 ஈடு).

.

அகம்படி' பெ. குடும்பம், குடும்பத்தைச் சேர்ந்தது. (தெ.

இ. கோ. சாசன. ப. 1389)

அகம்படித்தனமுதலிகள் பெ. அரசப் பணியாளர். ... சோழ கோனார் அகம்படித்தன முதலிகளில் ஆண்டாளி மகன் (தெ.இ.க.12,118).

அகம்படித்தொண்டு பெ. அணுக்கத்தொண்டு. கோயி லுள்ளா அகம்படித் தொண்டு செய்வார் (பெரியபு.

1,4).

அகம்படிப்பெண்டுகள் பெ. பணிப்பெண்கள். திருக்கோ யிற்றிருவகம்படிப் பெண்டுகளில் பெண்டுகளில் யோகநிட்டை

பண்ணின.. (தக்க. 95 ப.உரை).

அகம்படி முதலிகள் பெ. 1. கோயிற் பணியாளர். சேமப் பிள்ளையார் அகம்படி முதலிகளில்... (புது. கல். 371). 2. அரண்மனை அந்தப்புரத்தைச் சார்ந்த அதி காரிகள். (தெ. இ. கோ. சாசன. ப. 1389)

அகம்படிமை பெ. அகம்படித் தொண்டு. மைத் திறலினர் (கோயிற்பு. பாயி. 13).

அகம்படி

அகம்படியர் பெ. 1. அந்தரங்க ஊழியர். அவ்வவர்க் குரிய அகம்படியரானவர்கள்...நெய்யாடல் போற் றிக்கொண்டு திரியுமாப்போலே (திருப்பா. 4 மூவா.). பயிரவி அகம்படியரே (தக்க. 431).

...

2.

அரச

னுக்கு ஊழியம் செய்யும் தானைத்தலைவர். அகம் படியர் கிளர்ந்தால் அரசனாலும் அடக்கப் போ காதிறே (திருப்பா. 4 மூவா.). 3. தஞ்சாவூர்,மதுரை மாவட்டங்களில் வாழும் ஒரு சாதியினர், அகமுடை யார். சிவனடியவரில் வந்து வாழ் அகம்படியர் தம் குடிவளம் பெறவே (குருபரம். பு. திருமங்கை.2).

அகம்படியார் பெ.அகம்படியர். அரசூரில் இருக்கும் அகம்படியாரில். (தெ. இ. க 12, 140).

அகம்படியானவர் பெ. அரண்மனை அந்தப்புரத்தை சார்ந்த அதிகாரிகள். நம்மை உள்ளபடி

அறி

வாரும்... நம் பெண்டுகளுடைய அகம்படியானவர்

களும் (தெ.இ.க.24,257).

அகம்மியம்'

அகம்படிவீரர் பெ. மன்னன் மெய்க்காப்பாளர். அகம்படி வீரர்கள் ஐயிரு வெள்ளம் (கம்பரா. 5, 11, 27).

அகம்பம் பெ. கற்பரிபாடாணம். (செ.ப. அக. அனு.)

அகம்பன் பெ. (அ + கம்பன்) 1. நடுக்கமில்லாதவன். அபயன் அபங்கன் அகம்பன் அசஞ்சலன் (ஞானா. 55).2. ஓர் அரக்கன். அகம்பன் என்று அமைந்த கல்விச் செவ்வியான் (கம்பரா. 3, 6, 69).

அகம்பனம் பெ. மூச்சடைப்பு. (மருத். க. சொ.ப.20)

அகம்பாடு பெ. உண்மைப் பொருள். ... அவிச்சைகெட அவிச்சையின் அகம்பாடு உணர்ந்து (கம்பரா.

1, 21, 39).

அகம்பாவம் பெ. 1. நான் என்னும் எண்ணம், செருக்கு. மிகுந்த அகம்பாவம் நிறைந்து (ஞானவா. வைராக். 13).2. கருவம், தருக்கு. அவனுக்கு அகம்பாவம் கொஞ்சமல்ல (நாட்.வ.).

அகம்பாவி பெ. கருவமுடையவன். அவன் அகம்பாவி என்ற பெயரெடுக்கிறானே ! (முன்.).

அகம்பிரதமர் பெ. தான் என்ற எண்ணத்தை முதலா கவுடையவர். பின் அகம்பிரதமர்க்கும் (சி. சி. 1,48).

அகம்பிரமம் பெ. 1. தானே பிரமம் என்னும் கொள்கை. அகம்பிரமமாம் என்று கூறும் அத்துவிதனே (தத்து. பிர. 207 உரை). அகம் பிரம நிச்சயமே அகண்ட ஞானம் (ரிபுகீதை 21,29). 2. மனக்கலக்கம். ஆசை போய் ஒழிந்தபின் ... அகம்பிரமம்தான் அற்று நீங்கி விடும் (சிவரக. 1, 46, 10). 3. கர்வம். (வின்.)

அகம்பிரமவாதி பெ. தானும் பிரமமும் வேறல்ல என்று

வாதிப்போன்.

அகம்பிரமவாதியான மாயாவாதி

பாற்கரியன் நிரீச்சுரசாங்கியன் ஆகப்

பேர் மூவ

ருக்கும் (சிவப்பிர.கா.7).

அகம்பு பெ. உள்ளிடம். (செ.ப. அக.)

அகம்மியம்' பெ. (அ + கம்மியம்) 1. அறியமுடியா தது. பிரத்தியட்சாதிப் பிரமாண சதுட்டயங்களி லும் அகம்மியமாதலாலே (சி. சி. அளவை. 1 சிவாக்.). அணுகமுடியாதது. (செ.ப. அக.)

2.

அகம்மியம்' பெ. ஒரு பேரெண். (கதிரை. அக.)