பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகமார்க்கநடம்

முன்பு அகமாற்க (அகமார்க்க) நட்டுவமாய் நின் றான் (தெ.இ.க.23,306).

பெ. மெய்த்தொழிலாற்

அகமார்க்கநடம் கூத்து. (சங். அக.)

செய்யுங்

அகமார்க்கம்1 பெ. 1. யோகநெறி. முச்சதுர முதலா தாரங்கள் அகமார்க்கம் அறிந்து (சி. சி. 8, 21). 2. திருத்தொண்டு. வாதனையை அகமார்க்கத் தால் அவர்கள் மாற்றினார் (களிற்று. 50).

...

அகமார்க்கம் 2 பெ. 1. முக்குணம் பற்றி வரும் மெய்க் கூத்து. மெய்க்கூத்தாவது, தேசி வடுகு சிங்களம்

...

இவை அகச்சுவை பற்றி யெடுத்தலின் அக மார்க்கமென நிகழ்த்தப்படும் (சிலப். 3, 12 அடி யார்க்.). 2. வாய் திறவாமற் கீழ்க் குரலெடுத்து அரிய முயற்சியுடன் பாடுகை. அருமையிற் பாடல் அக மார்க்கமாகும் (பிங். 1440).

அகமாலிகம் பெ. கருங்குமிழ் மரம். (சித். அக./செ.ப. அக. அனு.)

அகமான்மா பெ. நானேயான்மா என்று பிரமத்தின் வேறாகக் தன்னைக் காண்போன். அறிவுடையோன் அகமான்மாவொடு வரு சம்பந்தம் (வேதா. சூ

159).

அகமிசைக்கிவர்-தல் 4 69. கோட்டை மதில்மேல் ஏறி நின்று போர்புரிதல். அகமிசைக்கு இவர்ந்தோன் பக்கமும் (தொல். பொ. 68 நச்.).

அகமிந்திரம் (அகமிந்திரலோகம்) பெ. (சைனம்) தேவலோகத்துள் ஒன்று. அருகனதுருவம் இல்லார் அகமிந்திரத்துள் தோன்றார் (மேருமந்.பு. 75).

அகமிந்திரலோகம் (அகமிந்திரம்) பெ. (சைனம்) தேவலோகத்துள் ஒன்று. (திருக்கலம். 6 உரை)

அகமுகம் பெ. யோகநெறியில் பயிலும் உள்நோக்கு. அகமுகமாய் ஒரு சுழிமுனை சேர்பவர்

முரு. பிள். செங். 6).

(போரூர்

அகமுகமா-தல் 5 வி. உள்நோக்குதல். அகமுகமாந் தொடர்பால் (ஞானவா. உபசாந்தி. சுரகு. 12).

அகமுடையாள் பெ. (வீட்டிற்கு உரியவள்) மனைவி. தன்னகமுடையாளைக் கையாலே தள்ள அவள் மரிக்க (தெ.இ.க.22, 91).

34

1

H

அகர்மணி

அகமுடையான்1 பெ. 1. (வீட்டின் தலைமைக்குரிய வன்) கணவன். (பே.வ.) 2. நிலமுடையவன்.

(வின்.)

அகமுடையான் 2 பெ. அகம்படியர் குலத்தைச் சார்ந்த வன். (செ. ப. அக. அனு.)

அகமுழவு பெ. உயர் முழவு வகைகளுள் ஒன்று. அக முழவாவன, உத்தமமான மந்தளம், சல்லிகை, இடக்கை, கரடிகை, பேரிகை, படகம், குடமுழா என இவை (சிலப். 3,27 அடியார்க்.).

அகமொடுக்கு

பெ

1. (செடி படர்வதற்குரிய) கொள் கொம்பு. (திவ்ய. அக. ப. 3) 2. முட்டுக்கோல். (முன்.)

அகர்' பெ. 1. மணமிகுந்த அகிற்கட்டை அகருவும் நறும் சாந்தமும் (கம்பரா. 5,13,29). இருள் நிறம் புரையும் அகரும் ஆரமும் (ஞானா. 45, 4). 2. அகில் மரம். குரவம் கோங்கு நாகமும் அகரும் ஓங்கி (செ. பாகவத. 4, 3, 15).

அகர் 2 பெ. பகல். அகர்-பகல்... பிற சொல்லோடு சேர்ந்தன்றித் தனித்து வாராது

(சங். அக.),

கணக்கிடப்பட்ட நாள்

அகர்க்கணனம் பெ. (சோதிடம்) கலியுகம் தொடங் கிக் குறிப்பிட்ட காலம் வரை தொகை.(செ. ப. அக.)

அகர்த்தவியம் பெ. (அ+கர்த்தவியம்) செய்யத்தகா தது. கர்த்தவிய அகர்த்தவிய விடயமாயினவால் (சூத. எக்கி. பூருவ.10,20).

அகர்த்தா பெ. (அ+கர்த்தா) 1. கர்த்தா அல்லா தவன். பிரமவித்தானவன் கர்மத்தில் அகர்த்தா என்னும் புத்தியால் (விசாரசா./செ.ப.அக.). 2. ஆன்மா ஆன்மாக்களின் பரியாயப் பெயர்களா வன அகர்த்தா, அணு ... (திருவால. கட். ப. 3).

அகர்த்திருவாதம் பெ. படைப்போன் இல்லை என்னும் வாதம். (சி.சி. பர. சௌத். 1 உரை)

+

.

அகர்நாதன் பெ. (அகர் + நாதன்) கதிரவன். (சங். அக.)

அகர்ப்பதி பெ. (அகர் + பதி) கதிரவன். (முன்.) அகர்மணி பெ. பெ. கதிரவன் (முன்.)