பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகருமகம்

அகருமகம் பெ. (இலக்.) செயப்படுபொருள் குன்றிய வினை. அவற்றுள் கருமத்தை நீங்காத தாது, கரு மத்தை நீங்கின தாது எனத் தாது இருவகையாம் ...சகருமகம் அகருமகம் எனவழங்குவர் (வீரசோ.

61 2600).

அகருமணம் பெ.

அகிற் புகையின் நறுமணம். அகரு மணம் மிர்கமதமொடு கமழவும் (தக்க. 42). அகல்(லு)-தல் 3வி. 1.பிரிதல். பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும் நீத்து அகன்று உறையார் (தொல். பொ. 185 இளம்.). மணந்தார் அகலாத காலை (குறள். 1226). அகன்ற எழுநாள் ஏழாண்டமைந்த தன்மையன் (பெருங்.3,22,109). அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா (திருவாய். 6, 10, 10)... பொருந்துதலாவது மிக அகலாமை (தொல். பொ. 648 இளம்.). அகன்றுபோன வர் நம்மை அயர்த்துவிட்ட காலம் (நந்திக்கலம். 56). 2. (விட்டு) நீங்குதல், விலகுதல். அவண் முனை யின் அகன்று மாறி (பொருந. 298). மணிநிற மை யிருள் அகல (பதிற்றுப். 31, 11). அகலாது அணு காது தீக்காய்வார் போல்க (குறள். 691). அகலில் அகலும் அணுகில் அணுகும்...எம்மான் (திருவாய். 1, 7, 10). அவ் அணங்கை அகலாத அலகைகளை இனிப் பகர்வாம் (கலிங். 135). வனத்தைவிட்டு அகல ஓடிப்போ (கம்பரா. 3,5,123). அன்னம்... பெடையொடும் குடம்பை விட்டு அகல (சீறாப்பு. 1,2,15). பார்த்தனொடு வீரம் அகன்றதென உரைப் பர் (பாரதி. தனிப்பா. 20). செகந்நாதா வினை அக லாதா (சர்வ.கீர்த். 58, 1). காட்சி கண்ணை விட்டு அகலவில்லை (நட்.வ). 3. (முற்றும் நீங்குதல்) ஒழிதல். வினை இரண்டும் வெந்து அகல (திருவாச. 47, 1). அளவரிய அதிராசரை அகல நீக்கி (பாண்டி. செப். வேள்விக். தமிழ்ப். 10). கபிலன்மேல் வைத்த காதல் ஒன்றும் ஆங்கு அகன்றிலாள் (செ. பாகவத 3,9, 66). தொல்லை அகன்று சுடர்க தமிழ்நாடே (பாரதி. தேசியம்.23). 4. (ஒன்றன் பொருட்டுச்) செல் லுதல். அருந்தொழிற்கு அகலாது வந்தனரால் நம் காதலர் (ஐங்.499). வேல் உழவ நீயே கொண்டு அகல்க (கம்பரா. 1, 10, 96). சூரியனைத் தூண்ட அகன்றீரோ (சர்வ.கீர்த். 47, 1). 1. கடந்து மேற் செல்லுதல். நாடுகாண் நனந்தலை மென்மெல அகன்மின் (மலைபடு.270). அன்றே நீத்தாள், அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை (தேவா. 6, 25,7). அந்தமும் ஆதியும் அகன்றோன் (திருவாச. 3,51). 2. தப்பிப்போதல். வல்லையின்

அகலாவண்ணம்

...

...

...

காண்க

குரங்கைக் கொணர்திர் (கம்பரா. 5, 7,2). 3. ( பின்னிடக்) கழிதல். இன்னும்

36

அகல்3

ஓர் காவதம் போதுமேல் அகலும் இப்பாலை (திருவரங். கலம். 56). ஆறேழ் திங்கள் அகன்றபின் வருதியேல் (பாரதி. தனிப்பா.13,53). 4.திரும்பிப் போதல். புனல் கொண்டு அகல்வான் வரும் ஆறு அறியேன் (கம்பரா. 2, 4, 74). 5. (ஓரிடத்திலிருந்து) ஒதுங்குதல். பெயர்தல். ஆணை ஆணை அகலுமின் நீர் என (சீவக. 634).

...

.

,

...

அகல்(லு)* - தல் 3வி. 1. பரந்துபடுதல், விரிதல். நூல் எனப்படுவது உள்நின்று அகன்ற உரையோடு புணர்ந்து விளக்கல் (தொல். பொ. 468 இளம்.). ஞாயிறுபட்ட அகன்று வரு கூட்டத்து செஞ் சுடர் நிகழ்வின் (பதிற்றுப். 72, 12). விரிந்து அகன்ற கேள்வி (பரிபா. 3, 48). அகன்ற ஞானத்தின் (பெருங். 3,12, 73). ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (திருவாச. 1,35). வரம்பு அகல் ஆசிகள் மொழி யும் மாதவன் (கம்பரா. 3, 3, 35). அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது (விவிலி. மத்தேயு 7, 13). 2.விரிந்திருத்தல், பெரிதாயிருத்தல். அகல் இரு விசும்பின் மீனினும் பலரே (குறுந். 44). கெடிறு சொரிந்த அகன் பெருவட்டி (ஐங். 47). அகலிரு விசும்பின் ஆஅல் போல (மலைபடு. 100). அகல்நிலாக் காண்பு இனிதே (இனி.நாற்.9). அகல் இருவானத் துகள் துடைத்து ஆட (பெருங். 1,38,16). அகன் துறையின் அருகே (தேவா. 7, 40, 3). அகல் வான் எழுந்த திங்கள் (சூளா. 3). பறவையின் அகல்வாய் கிழித்து (திருவரங். கலம். 13, 3). வாய் அகன்ற பாத்திரம் (நாட். வ.). 3. மிகுதல். அழிவினுள் அகன்று நின்றேன் (சீவக. 476 வருத்தத்தே மிக்கு நின்றேன் நச்.). 4. பெருநிலை யடைதல், மேம்படுதல். அழுக்கற்று அகன்றாரும் இல்லை (குறள். 170 அழுக்காற்றைச் செய்து பெரியராயி னாரும் இல்லை - பரிமே.). 5.கிழிதல். யானைக்கோடு உழுது அகன்ற மார்பம் (சீவக. 782).

னார்

அகல் 3 பெ.1.(ஆழமில்லாது வாயகன்ற) சட்டி, சிறு பாத்திரம், வாணலி. கார் அகல் கூவியர் (பெரும் பாண். 377). பொன்அகல் கொண்ட பூவும் புகை யும் (பெருங். 1,34,185).பரூஉத்தடி பலரும் ஏந்தி ... அதுக்கியிட்டுக்கார் அகல் பொரிப்பர் (சீவக. 2771). சூட்டு அகல் மேல் எழு பொரியின் துள்ளி (கம்பரா. 4, 13, 24). 2. பிச்சைப்பாத்திரம். அகல் கையேந்தி பிச்சை என நிற்பாள் (சீவக. 2624). 3. விளக்குத்தகழி சுடர்கொள் அகலின் (அகநா. 235,8). அகல் நிறைய நெய் (நெடுநல். 102). திரிக்கொளீஇக் கைவயின் கொண்ட நெய்யக (பெருங். 1,47,173-174). திருவிளக்குத் திரியிட்டங்கு அகல்பரப்பி (பெரியபு. 45, 15). பேரகல் நாற்பதுக்கும்