பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகல்+

சிற்றகல் இருபதுக்கும் நெல்லு ஐங்குறுணியும் (தெ.இ.க.8, 66).

அகல்' பெ. 1. பெருமரம். (all Gir.) 2. வெள்வேல்.

(சங். அக.)

அகல்' பெ. அளவைப்பெயருள் ஒன்று. அகல், உழக்கு எனவும் (தொல். எழுத். 171 இளம்.).

அகல்' பெ. 1.ஊர். அகலுள் மங்கல அணி எழுந் தது (சிலப். 1, 47). 2. ஊரின் உட்புறம், நாடு. (பொதி.நி. 2, 6) 3. இடப்பரப்பு. (வின்.) 4. அல்குல். வடிவு அகல் உபத்தமு மாகுமென்ப (பிங். 1003).

அகல்மதி பெ. முழுநிலா. அகல்மதிக்கு உவமையா யின தபோதனர் வதனம் (கம்பரா. 6,2,93).

அகல்லியமாமிசம்

...

பெ. சமைக்கப்படாத இறைச்சி. (சி.சி.

பர. சௌத். 29 வேலப்.)

அகல்வட்டம் பெ. ஞாயிற்றையும் திங்களையும் சுற்றிக் காணப்படும் ஒளிவட்டம், பரிவேடம். அகல்வட்டம் பகல் மழை (பழ. அக. 26).

அகல்வி-த்தல் 11வி. 1. (விட்டு நீங்குமாறு செய்தல்) நீக்குவித்தல். அருவினைச் சுற்றம் அகல்வி கண் டாய் (தேவா. 4, 110, 4). அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே (திருவாச. 1, 40).2. (அப் பாற் போகும்படி செய்தல்) ஒதுக்குதல். ஐயன்... மழை என்ன பகழி எல்லாம் எழுவால் அகல்

...

வித்தான் (கம்பரா. 5, 8, 45).

அகல்வு பெ. 1. அகலம். ஒரு நிரல் செல்லும் உள்ளகல்வு உடைத்தாய் (பெருங். 1, 49, 59). 2.தொலைவு. சார்வும் அகல்வும் தலைப்பெய் தலோடு உள்ளமின்மை (நீல.412). (நீல. 412). 3. (அடர்த்தி யின்மை) விலகியிருக்கை. பைத்த. நிலத்தினகன்ற பயிர் அகல்வின் நீங்கப் பதித்து (தணிகைப்பு. திருநாட். 93). 4. நீங்குகை. அறவற்கு எவனோ நாம் அகல்வு அன்னாய் (ஐங். 212). சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே (நற். 388,10).

அகல்வோர் பெ. (விலகிச் செல்லும்) தீண்டாதார்.

(வின்.)

அகலக்கட்டை பெ. குறைந்த அகலமுடையது. (பே.

வ.)

அகலக்கவி பெ. 1. வித்தாரகவியாகிய பாடல். துயில் எடைநிலை, கூத்தர் ஆற்றுப்படை... ஓம்படை

37

அகலம்1

என்பன பற்றி அகலக்கவி அமையுமாற்றை (இலக். வி. 767 உரை). 2. வித்தார கவி பாடுவோன். (வெண்

பாப், செய். 5 உரை).

அகலக்கால்வை-த்தல்

11வி. (செலவு முதலியன) அளவு கடந்து செய்தல். வியாபாரத்தில் அகலக் கால் வைத்து முதலையும் இழந்துவிடாதே (நாட்.

வ.).

அகலத்தேடு-தல் 5வி. நீங்குதற்குச் சமயம் பார்த்தல். அவன்றான் அகலத்தேடிலும் (செ.ப.அக.).

அகலப்பா பெ. வித்தாரகவி. ஈங்கு அகலப்பாக்கள் இரண்டாகும் (வெண்பாப். செய். 5).

1182).

அகலம்! பெ. 1.பரப்பு,விரிவு. வியல் என் கிளவி அகலப் பொருட்டே (தொல். சொல். 358 இளம்.). வியன் ஞாலத்து அகலமும் (புறநா. 20, 2).ஆரறி வார் எங்கள் அண்ணல் பெருமையை ஆரறிவார் இந்த அகலமும் நீளமும் (திருமந். 95). மண்ண கலம் கீண்டு அங்கோர் மாதுகந்த மார்வற்கு (இயற். மூன்றாம். 54), மூவகை உலகினுள் நடுவண்... தீவி னது அகலமும் (சூளா. 388). ஆழமும் அகலந் தானும் அளப்ப அரிது (கம்பரா. 6, 6, 83). அந்த ரத்து அகலம் எல்லாம்... பதாகை தூர்ப்ப (பெரியபு. 8, 29). மார்பகலம் கண்டு மகிழ்வரே (பெருந். 2. பெருக்கம், பெருமை. உடைமையது உயர்ச்சியும் அன்பினது அகலமும் (தொல். பொ. 44 இளம்.). போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும் (புறநா. 2, 7). நின் தோற்றமும் அகல மும் (பரிபா. 4,30). ...மின்னிற்றே கற்பு அகலம் காண்புற்ற கார் (நக்கீர. கார். 5). 3. (மூன்று பரிமாணமுடைய பொருளில்) குறுக்ககலம். உயர்வு அகலம்... அரண் (குறள். 743...அகழலாகா அடியகலமும் ...நின்று வினை செய்யலாம் தலையகலமும். பரிமே.). நீள அகலமுடையாய் (தேவா. 6,55, 10). 4. (இரு பரிமாணமுடைய பொருளில்) நீளத்தின் இருபக்கப் பரப்பு. வெளியகலம் (தக்க. 37 வெளியாகாசவகலம் ப. உரை). இந்தத் துணியின் அகலம் என்ன (பே.வ.). 5. (இடைப்பட்ட இடம்) தூரம். யோசனை அகலத்து ஒலிக்கும் புள்ளின் ஐ விலின் அகலம் நின்று கிடை நீளத்தே நின்று. நச்.). 6. முடி கெழீஇய திருஞெமர் அகலம் (பதிற்றுப். 16, 17). சாந்து புலர் அகலம் (குறுந். 150). சுடர்ப் பூண் விளங்கும் அகலம் (ஐங்.353). கொழு

...

(பெருங்.1,38, 74). (சீவக. 1704 ஐந்து விற் (விரிந்த) மார்பு. எழு

நர் அகலத்து ஒடுங்கி (சிலப். 4, 45). செய்யார் கரிய