பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகற்ப கும்பகம்

துறவு.

அருளொடு புணர்ந்த அகற்சியானும்

விடுதலான் அகற்சி- 3 பிரிவு. அய

(அருளுடைமை பொழிந்த எல்லாம் தொல். பொ. 75, 22 இளம்.). லோராயினும் அகற்சி மேற்றே (தொல். பொ. 41 இளம்.). பிரிவெனினும் அகற்சியெனினும் ஒக்கும் (இறை. அக.34 உரை). அன்ன பெருங் கயிலையின் அகற்சியும் நிவப்பும் (கோ னேரி. உபதேசகா. 1, 14). கடி அகற்சிக் கிடங்கு (குசே. 222).

4.

அகலம்.

மா

அகற்ப கும்பகம் பெ. மந்திரத் தியானம் செய்யாது மூச் சடக்குகை. (சங்.

அக.)

அகற்பசெபம் பெ. மந்திரமின்றிச் செம்யும் தியானம். (முன்.)

அகற்பப் பிராணாயாமம் பெ. செபமும் தியானமும் இன்றிச் செய்யும் மூச்சுப்பயிற்சி. செபமும் தியான மும் இன்றிப் பிராணாயாமம் சொன்ன மாத்திரை களினாலே செய்வது அகற்பப் பிராணாயாமம் (சிவதரு. 10, 66 உரை).

அகற்பம்' பெ. மந்திரமின்றிச் செய்யும் செபம். அகற் பம் இவை அன்றிச் செயல் (அட்டாங். குறள் 35).

அகற்பம்' பெ. (மந்திரமின்றிச் செய்யும்) திருநீறு. அங்குரைத்த அகற்பம் நீக்கி (பெரியபு. 63,1).2. இயற்கையில் உண்டான திருநீறு. இடியுண்ட இடத் தில் உண்டான விபூதியும் மலையுச்சியினும் பூமியி னும் விளைந்த விபூதியும் அகற்பம் எனப்படும். (சைவ. நெறி பொது. 186 உரை).

அகற்பன் பெ. ஒப்பில்லாதவன். கற்பவர்கள் நற்புல னில் நிற்புறும் அகற்பா ( சேதுபு.சருவதீ. 27).

அகற்றம் பெ. பரப்பு. எயிலது அகற்றமும் (பெருங்.

3, 14, 25).

அகற்றல் பெ. எட்டுக் கருமங்களுள் ஒன்றான

(ஒரு

வனை இருக்கும் இடத்தினின்று மறையச் செய்யும்) மந்திரவித்தை. வயம் வர வருட்டல் வருவித்திடல் அகற்றல் (திருக்காளத். பு. 33,23).

அகற்று - தல்

...

காண

5வி. 1. (ஓரிடத்தினின்று அகன்று போகச் செய்தல்) நீக்குதல். தெவ்வுப் புலம் அகற்றி (சிறுபாண். 246). உட்குவரு உருவம் விடாஅர் ஆணையின் அகற்றி (பெருங். 3, 5, 106-7). ஐந்தொடு ஆகிய முப்பகை மருங்கற அகற்றி (கம்பரா. 2, 1, 63). 2. துரத்துதல், ஓட்டுதல். அரு

4

-3

அகன்

வினை நின்று அகற்றுகையால் (பாரதவெண்.314 உரைநடை). தீது அகற்றவந்தருளும் திருஞானசம் பந்தர் (பெரியபு. 28, 1253). அளகந் திருத்தி மதிநு தல் நீவி அளி அகற்றி (அம்பி. கோ.32). 3.போக் குதல், ஒழித்தல். பாயிருள் அகற்றும் ... ஞாயிறு (பதிற்றுப். 22, 33). நன்று அருளித் தீது அகற்றும் நம்பிரான் (தேவா. 6, 30,7). இருஞ்சினவேந்தன் பெருஞ்சினம் அகற்றி (பெருங்.1, 47, 192), பெறுதி நற்கதியை என்று பெருநவை அகற்றினானே (சீவக. 946). வீடணன் கன்னி சொன்னது உண்டு, துணுக்கம் அகற்றுவான் (கம்பரா. 5, 5,22). மிகுங்கடுங்கலியை வேரொடும் அகற்றுங் கோல் (ஏரெழு. 55). பற்பல துன்பமும் அகற்றி (சீறாப்பு. 1,5,48). ஈரமும் பதரும் இல்லாது அகற்றிச் சாக் கில் அளந்து (நாஞ். மரு. மான். 7, 174). 4. (பொழுது) போக்குதல், கழித்தல். இந்திரன் பதி யிடைப் பகற்பொழுது அகற்றி (கம்பரா. 6,3,9).

5. (எஞ்சியதை ஆன் அகற்றிய

விலக்குதல்)

...

ஒதுக்குதல். கார்

தண்ணடை (நற். 391, 4). 6.

(இலக்.) (ஓர் எழுத்தை அல்லது சொல்லை நீக்கு தல்) கெடுத்தல். ஒன்பானொடு. தகர நிறீஇப் பஃது அகற்றி (நன். 194-பஃதைக் கெடுத்து சங்கரநமச்.).

அகற்று' - தல் 5வி. 1. (ஒரு நிலையிலிருந்து மாற்று தல்) திறத்தல். முழுநிலைக் கதவம் அகற்றி முன் னின்று தொழுத கையர் புகுதுகென்று (பெருங். 3, 13,71-72). 2. (வாள் முதலியனவற்றை உறையி னின்று) கழித்தல், உருவுதல். நெடுவேல் செறி தடறு அகற்றுபு (குசே.55).

அகற்று - தல்

5வி. 1. இடமகலச் செய்தல். வளி புடைத்த கலம் போலக் களிறு சென்று களன் அகற்றவும் களன் அகற்றிய வியலாங்கண் (புறநா. 26, 4-4). 2. பெருகச் செய்தல். அரிய தந்து குடி அகற்றி (மதுரைக். 766). 3. அரசை விரிவுபடுத்து தல். மாலைக் குடை மன்னர் மன்னர் வையம் அகற்று வான் (சீவக. 2796). 4. அகலவைத்தல். கால்களை அகற்றி வைத்து நடந்து செல்லும் (பே. வ.) நாற்றை அகற்றி நடு (பே.வ.)

யானை

அகறல் பெ. 1. அகலம். அகறல் ... அகலுள்... அகலம் (சூடா.நி.8,12). 2. கடந்துபோகை. சென்று சேண் அகறல் (நற். 137,10). அகறல்வல்லா தீமோ (ஐங். 149). அடர்மலர்க் காற்குங் கட்கும் அகறலால் மாலை. 35). 3.நீங்குகை. அகறலினாற் தன்னுடலந் தனி (வேதா.சூ.

(இரகு. பிறருடல் போல்

459).

அகன் (அகம்) பெ. 1. (அன்பின் ஐந்திணை