பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகோரசிவாசாரியர்

அடர் அகோரசிவன் துணைப்பதச் சீர் (திருவெண். பு. பாயி. 4).

அகோரசிவாசாரியர் பெ. சைவபத்ததி ஒன்றை இயற்றிய சிவாசாரியர். (அபி. சிந்.)

அகோரம்1 பெ. 1. சிவனுடைய ஐம்முகங்களுள் தெற்கு நோக்கிய முகம். ஈசானம்... அகோரம்... சங்கரன் ஐம்முகம் (பிங்.99) 2. (அகோர வடிவத்தைக் குறித்த) ஆற்றல்மிக்க ஒரு சைவ மந்திரம். பின் மனையிற் புறப்படுக, பிழைத்தானே யாகில் பேசி டுக அகோரத்தை இருநூறெண்பெறவே (சிவதரு.

11, 4).

அகோரம்' பெ. ஞானம். (சி.சி. 1, 59)

அகோரம்' பெ. 1. கொடுஞ்செயல். அன்னதோர் காலை அகோர வெங்காலன் (திருநெல்.பு.சுவேத. 88). 2. கடுமை. அவனுக்கு அகோரமாய்ப் பசித்தது (பே.வ.). அகோர தபசி விபரீத சோரன் (பழ.

அக.33).

அகோரம் + பெ. அச்சம் விளைக்கத்தக்கது. (சங். அக.)

அகோரன் பெ. சிவன். அவம் அறுத்து எமைப்புரக் கும் ஈசானன் அகோரன் (சூத.எக்கி. பூருவ.33,2).

அகோராத்திரம் பெ. இரவும் பகலும். அகோராத் திரம் படித்துக் கல்வியைப் பூர்த்தி செய்ய (பிரதாப. ப. 71). வேதனை மிகவும் கொண்டு மெலிவுற்றேன் அகோராத்திரம் (சர்வ.கீர்த்.23,2).

அகோரி பெ. மோதிரக்கண்ணி என்னும் செடி. (செ.

ப. அக.)

அகோரை பெ. இரண்டரை நாழிகை கொண்ட கால அளவு. (வின்.)

அகோவனம் பெ. தரிசு. இத்தேவர் பழந் தேவ தானத்தில் அகோவனமாகக்கிடந்த திடலை

(தெ.இ.க. 7 ப. 309).

அகௌரவம் பெ. மரியாதைக் குறைவு. இதைச் செய் வதால் அகௌரவம் ஒன்றும் இல்லை. (நாட்.வ.).

அங்கக்களரி பெ. கோயிலில் தருமம் புரிவோருக்குச் செய்யும் சிறப்பு. (செ.ப.அக.)

பெ. சொ.அ.1-4 அ

5

51

அங்கங்கே

அங்கக்காரன்1 பெ. மெய்க்காவலன். தன்னை ஆசிர யித்தார்க்கு அங்கக்காரனாய் நின்றிறே அவர் களைச் சேர்ப்பது (நாச்சி. தி. 2, 9 பெரிய.).

அங்கக்காரன் 2 பெ. 1. பல வேடங்கொண்டு நடிக்கும் வேடதாரி. அங்கக்காரன் துதிப்பும் (ஒழிவி.துறவு. 19 உரை). 2. அழகுபடுத்திக்கொள்வோன். (செ.ப.

அக.)

அங்கக்கிரகம் பெ. குரக்குவலி, கெண்டைப்பிடிப்பு. (சங்.

அக.)

அங்ககணிதம் பெ. எண்கணக்கு. (செ.ப. அக.)

அங்ககம் பெ. 1.உறுப்பு. (சங். அக.) 2. உடல்.

(முன்.)

அங்ககரநியாசம் பெ. அங்க மந்திரம் ஆறினையும் சிவமந்திரம் ஐந்தினையும் கூறி முறையே அங்கங் களையும் கரங்களையும் தொடுகை. அங்ககரநியாசம்

ஓம் சிவாய ஈசானாய நம எனப் பதினொரு

மந்திரத்துக்கும் பஞ்சாட்சரம் சேர்ந்து நியசித்தல் (தத்து. பிர. 143 உரை).

அங்ககாரம். பெ. நாட்டிய வகை இருபதுள் ஒன்று. அங்ககாரமே யிரேசித மென்னக் கொண்ட நாலைந்து பேதமும் கற்று (திருவிளை. பு. 24,9).

அங்ககீனம் பெ. உறுப்புக் குறைபாடு. அங்ககீனம் உள்ளோர்க்கு அரசு உதவுகிறது (பே.வ.).

அங்ககீனமந்திரம் பெ. இருதயம் முதலிய அங்கங் களைக் குறியாது சொல்லும் மந்திரம். (சங். அக.)

அங்ககீனன் பெ. உறுப்புக் குறைந்தவன். (முன்.)

அங்கங்கு வி. அ. அந்தந்த இடத்தில். அங்கங்கு இழிகுற்ற அமர்த்தலைவர் (கம்பரா 6, 26, 42). நந்தி கைப்பிரம்பால் அங்கங்கு அணியாய் அமைந் தருள (சங்கர. உலா 90). அங்கங்கு குறுணி அளந்து கொட்டி இருக்கிறது (பழ. அக.61).

அங்கங்கே வி.அ. 1. அந்தந்த இடத்தில். உயிர்க் குயிராய் அங்கங்கே நின்றான் கோயில் (தேவா. 1, 132,4). அங்கங்கே கலைகள் தேரும் அறிவன் போல் (திருவிளை. பு.52,19). பொருள்கள் அங் கங்கே சிதறிக் கிடக்கின்றன. (பே.வ.). 2. ஒரோ ரிடத்தில். அங்கங்கே வன்முறைச் செயல்கள் நிகழ்ந்தன (பே.வ.).