பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கணபாடாணம்

அங்கணபாடாணம் பெ. கனிம பாடாணம், மிருத பாடா ணம். (வைத். விரி. அக. ப. 5)

அங்கணம் 1 பெ. 1. இடம். மானாங்கணமுதல் ஏழ் நிலத்துப் பொன்னின் சினாலயம் (திருநூற். 18). 2. முன்றில். அங்கணம் எனும் பெயர் முன்றில் (வட.நி. 36). 3. வீட்டின் பின்பக்க வெளிமுற்றம். அங்கணத்தில் போய்க்குளி (திருநெல்.வ.). 4. தூய் மையற்ற முற்றம். அங்கணத்துள் உக்க அமிழ்து (குறள். 720). மன்றல் கமழ் அங்கணமிசையே வந்து சிறிதுபோது இருந்த பின்றை (ஞான. உப தேசகா. 40,31). 5. பொல்லாத நிலம். அங்கணம் பொல்லாத நிலமும் ஆம் (ஆசி.நி.161). 6.சாக் கடை, சலதாரை. ஊரங்கண நீர் உரவுநீர்ச் சேர்ந் தக்கால் (நாலடி. 175). அங்கணத்து அழுக்குத் தின்னும் நரி (கம்பரா. 6. 16,68). 7. சேறு. அங்க ணம் படர்வோரென்ன அக மெலிந்துற்றேன் (கந்தபு. 3, 11, 18). அந்தகனை அங்கணம் போலா கத் துவைத்தவனை (கடம்பர். உலா 126). 8. தொழு வம். (ரா. வட். அக.)

அங்கணம் ' பெ. 1. தூம்புவாய்.

வாய்

(பிங். 675). 2. மதகு.

அங்கணந் தூம்பு (வைத். விரி. அக. ப. 5)

அங்கணம் 3 பெ. 1. கட்டடப்பிரிவு. (ராட். அக.) 2. வீட் டில் தூண்களுக்கு இடைப்பட்ட இடம். (பே.வ.) 3. மனைக்குரிய எழுபத்திரண்டு சதுர அடியளவு அல்லது பத்து முழத்தளவு. (சங். அக.)

அங்கணம் + பெ. வெங்காரம், பொரிகாரம். (வைத். விரி.

அக. ப. 5)

1

அங்கணம் 5 பெ. கடுக்காய்மரம். ( வைத், விரி. அக. ப. 4) அங்கணன் ' பெ. 1. (அருட்கண்ணுடைய) சிவன்.. பூதங்கள் பாட நின்றாடும் அங்கணன் தன்னை (தேவா. 7,62,8). அங்கணன் எங்கள் அமரர் பெம் மான் (திருவாச. 43, 10). மகத்துவமும் திங்கள் தொறுங் காட்டுகின்ற தில்லையே அங்கணர் ஊர் (தில். நெல்.27). 2. அழகிய கண்ணை உடையவன் அங்கணனுக்குரியார் உளர் ஆவார் ( கம்பரா.1, 21, 97). 3. கருணை நோக்குடையவன். அங்கணன் அந்தணனாய் அறை கூவி வீடருளும் அங்கருணை வார் கழல் (திருவாச. 8,1),

அங்கணன் 2

பெ.

கனிமபாடாணம்,

(வைத். விரி. அக. ப. 5).

மிருதபாடாணம்.

53

அங்கதம் 3

அங்கணாளன் பெ. 1. கண்ணோட்டமுடையவன். அற னறிந்து ஒழுகும் அங்கணாளனை (கலித். 144, 70). அன்பு நின் கழல்கணே புணர்ப்பதாக அங்கணாள (திருவாச. 5, 71). 2. சிவன். கைக் கொண்ட அங் கணாளன் திருவுருவம் (சிவஞா. காஞ்சி. சிவபுண்.33).

அங்கணி' பெ. பார்வதி. (சங். அக.)

அங்கணி ' பெ. கற்றாழை. (பச்சிலை. அக.)

அங்கணேல்-தல் (அங்கணேற்றல்) 10வி. துயிலுணர்தல். துணைநலத் தேவியை இயல்புடை அங்கணேற்ற பிற் காணாது (பெருங். 4, 7, 91-92).

அங்கத்தவர் பெ. உறுப்பினர். (செ.ப.அக.)

அங்கத்தி (அங்குத்தி, அங்குற்றி) பெ. தாங்கள் தங் கள் என்ற பொருளில் பயன்படுத்தப்படும் ஒரு மரியா தைச் சொல். (செ. ப. அக. அனு.)

அங்கத்தினன் பெ. உறுப்பினன். அவன் குடும்பத்தில் ஓர் அங்கத்தினன் (பே.வ.).

அங்கத்துடை பெ. கார்காத்தார் கோத்திரப்பெயர். (கார் மண். சத. அனு. ப. 7),

அங்கத்துவம் பெ. உறுப்பினர் நிலை. (இலங். வ.)

அங்கதச்செய்யுள் பெ. வசைப்பாடல்.

நசையொடும் புணர்ந்தன்றாயின் யுள் (தொல். பொ. 434 இளம்.).

வசையொடும்

அங்கதச்செய்

.

அங்கதப்பாட்டு பெ. 1. வசைப்பாடல். அங்கதப் பாட் டளவு அவற்றோடு ஒக்கும் (தொல். பொ. 461 இளம்.)

அங்கதம் ! பெ. 1. வசைப்பாடல். அங்கதம் தானே அரில் தபத் தெரியின் ... இருவகைத்தே (தொல். பொ. 429 இளம்.). ஆற்றல் நன்னெடுங் கவிஞன் ஓர் அங்கதம் உரைப்ப (கம்பரா. 6, 14, 248). 2.வசை. அங்கதம் என்பது வசை (தொல். பொ. 436 பேரா.).

அங்கதம்2 பெ. 1. பொய். அங்கதமே ... பொய்யும் (அக. நி. அம்முதல். 204). 2. பழிச்சொல். அங்கதமில் லாத கொற்றத்து அண்ணலும் (கம்பரா. 6, 39,18). அங்கதம் 3 பெ. 1. (பிறை வடிவ) வாகுவலயம், தோளணி. அங்கதங்களும் அம்பும் இலங்கிட (கம்பரா. 6, 28, 28). அங்கதம் மகுடம் கடிப்பிணை என்ற பாரம் (ஞானா. 13, 2). புயவரை மிசை