பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கபங்கம்1

அங்கபங்கம்

பெ. 1.உடல் உறுப்பின் சேதம். (சாதக சிந். 1292) 2. உடல் உறுப்புக்களின் சோர்வு. (சங்.

அக.)

அங்கபங்கம்' பெ. 1. மதிப்பு, கௌரவம். (செ. ப. அக. அனு,) 2. ஆடம்பரம். (வட்.வ.)

அங்கபங்கமழி -த்தல் 11வி. வருத்துதல். (செ. ப. அக.

அனு.)

அங்கபடி பெ. குதிரை அங்கவடி. (வின்.)

அங்கபாலி பெ. ஒரு பூண்டு. (சாம்ப. அக.)

அங்கபுதன் பெ. பிறக்கும்போது

உடலில்நிற்பதாகக்

கணிக்கப்படும் புதன் என்னும் கிரகம். அங்க புதன் பலன் (விதான. எச்ச. 48).

அங்கபூர்வம் (அங்கபூவம்) பெ. சைன அங்காகமம், பூர்வ ஆகமம். அங்கபூர்வம் ஆதியாய ஆதிநூல் (யாப்.

வி. 25 உரை).

.

அங்கபூவம் (அங்கபூர்வம்) பெ. சைன அங்காகமம், பூர்வாகமம். அங்கபூவாதி (யசோதர. 55). அங்கபூவ மாதி நூலோதி (மேருமந். பு. 124).

அங்கம் ! பெ. 1. உடலுறுப்பு. வழீஇ இருந்த அங்கங் கள் (ஐயடிகள். சேத். 11). வெங்கண் அங்க வலயங் களும் இலங்க (கம்பரா. 3, 1, 15). அங்கம் போய் வெட்டியதும் பொய்யமணர் விட்ட பணி மாய்த் ததுவும் (மதுரைச். உலா 264). 2. உடம்பு. உடம்பு. அங்கத்து இருந்த கனிவாய் மலை மங்கை (காரை. திருஇரட். 5). அங்கத்தை மண்ணுக்காக்கி (தேவா. 4,75,8). அங்கமும் மனமது என்னக் குளிர்ந்தது (கம்பரா. 6, 4, 122). அங்க அங்கி பாவம் ஆகி (சி. சி. சுப. 46

நிரம்ப.). பொருதரங்க வேலையே நிருதர் அங்க மாலையே (திருவரங்.கலம். 37). அங்கமே பரவசங் கொள (சர்வ. கீர்த். 1, 2). துர்ச்சனருக்கு அங்கமுழு தும் விடமேயாம் (நீதிவெண். 18). 3. எலும்பு. அங்க மாலையுஞ் சூடும் ஐயாறரே (தேவா. 5, 27, 7). பண்டு அங்கம் மண்டு அலங்கார மின் ஆக்கினன் (பழமலையந். 24). 4. சீவன். அங்க நிலையிற்று இலிங்க நிலையிற்று என்று அருளும் வீரசைவ சிங்கம் (பிரபு. லீலை 1, 7).

அங்கம் 2 பெ 1. பாகுபாடு. (சங். அக.) 2. அரசுக்குரிய படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் உறுப்புக்கள். (குறள்.381) 3. அரசர்க்குரிய மலை,

5

сл

5

அங்கம்'

ஆறு, நாடு, ஊர், மாலை, குதிரை, யானை, முரசு, கொடி, செங்கோல் என்னும் பத்து உறுப்புக்கள். அங் அவை மலை ஆறு செங்கோல்

...

(பொருட்.நி.841).

4.

கம் பத்து அரசர்க்குரிய தசாங்கமே யானை, தேர், பரி, காலாள் என்னும் நால்வகைப் படைப்பிரிவு. (அபி. சிந்.) 5. பஞ்சாங்கம் என்னும் திதி. வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து உறுப்புக்கள். அங்கம் ஐந்தாம் அவை திதி...கரணம் வை பஞ்சாங்கம் (அரும்.நி.356). 6. அங்கதாளம் முதலாகிய ஆறனுள் ஒன்று. அங்கம் உபாங்கம்... அனுதாளமென்ன அறைகுவர் (பரத. 3, 4). 7. தாளப் பிரமாணமாகிய பிறை, மதி, கோல், வில், பாம்பு, புள்ளடி என்றவற்றை அடையாளமாகக் கொண்ட உறுப்பு. பிறை மதி கோல் வில் பாம்பு பேசு புட்கால் அங்கம் (முன்.3, 35). 8. நாடக விலக்குறுப்புக்கள் பதினான்கனுள் முதலாவதாகிய பொருளின் நான்கு வகைகளுள் அறம் ஒன்றே கருப்பொருளாகக் கொண்டு வரும் நாடகம். (சிலப். 3, 13 அடியார்க்.) 9. நாடக விலக் குறுப்புக்கள் பதினான்கனுள் ஒன்றாகிய சாதியின் வகைகளுள் ஒன்பதாவது. (சிலப். 3, 13 அடியார்க்.உ வே.சா. அடிக்குறிப்பு) 10. நாடக நூலினுறுப்பு. இது ஓரங்க நாடகம் (பே. வ.). 11. சிட்சை, வியாகரணம், சந்தம், நிருத்தம்,சோதிடம், கற்பம் என்னும் ஆறு வேதாங்கங்கள். ஆறங்கம் நால் வேதம் ஆனாய் போற்றி (தேவா. 6,55,1).

அங்கம் ' பெ. 1. தலைமைப் பொருளுக்குத் துணையாக தலைமைப் பொருள்,

அமைவது.

2. (செ.ப. அக.)

தலைமையானது. (சங். அக.)

அங்கம் + பெ. 1. அங்காகமம் என்னும் சைன ஆகமம். அங்கம் பயந்தோன் அருகன் அருள் முனி (சிலப். 10, 187). அங்கம் பயந்த அறிவன் (யாப். வி. 95 உரை). அங்கமவை யாறிரண்டும் உரைத்தாய் நீயே (சீவசம். 28). 2. தத்துவம். அருள் தரும் அங்கங்கள் (திருமந். 436). 3, ஆயுள் வேதம். அங்கங் கூறியவாறு ஓர்ந்து (தைலவ. பாயி. 28/ செ.ப.அக.).

அங்கம்5 பெ. குருவுக்குச் செய்யும் தொண்டு. உயர்குரு பரன் குற்றேவலே அங்கம் (வேதா.சூ. 9).

அங்கம்" பெ. பிறவிப் பாடாண வகை. (வைத். விரி. அக.

ப. 4)

அங்கம் பெ. கொன்றை. (வைத். விரி. அக. ப. 4)

அங்கம் பெ.

வரிவகை. (திருவாங். கல். 3, 266) அங்கம் ' பெ. 1. ஐம்பத்தாறு தேயங்களுள் ஒன்றன் பெயர். ஆரணத் துறையுளாய் அங்கநாடு இதுவும்