பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கவித்தை

அங்கவித்தை பெ. உடல் இலக்கணம் அறிவிக்கும் நூல். அங்கவித்தை காமநூல் என்னும் இவற் றைக் கற்றவரும் (கௌடலீயம் ப. 66).

...

அங்கவியல் பெ. திருக்குறளில் அரசியலுக்குரிய ஆறு அங்கங்களைப் பேசும் பகுதி. (குறள். பொருட்பால் இரண் டாவது இயல் தலைப்பு - பரிமே.)

அங்கவீனன் பெ. உடல் ஊனமுற்றவன். (நாட்.வ.)

அங்கவேள்

97 ).

பெ. உடம்புடன்

வாழ்ந்த

மன்மதன்.

(நூற்று. அந்.

அங்கவேள் குன்ற அழல் சரபத்தை

அங்களி பெ. கற்றாழை. (சங். அக.)

அங்கன் பெ. புதல்வன். அங்கற்கு இடரின்றி இர ணியனது ஆகத்தை பிளந்த வம்மா (இயற்.

மூன்றாம் திருவந். 65).

...

அங்கனம்' (அங்ஙன், அங்ஙனம்) வி.அ. அவ்வாறு. வேதம் எங்கனம் அங்கனம் அவை சொன்ன விதி யால் (கம்பரா. 6,3,52 பா.பே.)

அங்கனம்' பெ. கடுக்காய். (மலை அக.)

அங்கனார் பெ.

உடலானவர் ஆய திருமால். திருவ

ரங்கனார் இருவர் அங்கனார் (திருவரங். கலம். 20).

அங்கனி பெ. கற்றாழை. (மூ. அக.)

அங்கனை பெ. (அழகிய) பெண். வன்னி கிணறங் கனை கற்பால் அழைத்ததுவும்(மதுரைச். உலா 481). அவள் வீராங்கனை (நாட். வ.).

...

அங்கா 1-த்தல் 11வி/12வி. 1. (இலக்) ஒலிகள் பிறக்க வாய்திறத்தல். அஆ ஆயிரண்டு அங்காந்து இய லும் (தொல். எழுத். 85 இளம்.). 2. வாய் திறத்தல். அங்காந்து இயன்ற பேழ்வாய்ச் சிங்காசனமும் (பெருங். 1,57,59). பெரும்பேய் உலகம் விழுங்க அங்காந்து நின்றாற் போல (சீவக. 1660). கூழ் கண்டு அங்காந்து அங்காந்து பிட்சாந்தேகி எனும் பனவப் பேய் (கலிங். 566). ஊத்தைவாய் அங்காத்தல் வல்லுரு அஞ்சன்மின் என்பவே (நீதிநெறி. 23). அங்காந்த செம்பவளத்தெம்பிரான் (திருவரங்.கலம்.70). 3. பெருவேட்கையுறுதல். உந்தி அங்காந்து கோட்டின் உறுமலர் பறிக்கு மாதர் (கச்சி. காஞ்சி. திருக்கண். 68). 4. புறப்படவிடுதல். நரகம் விழுங்கிக்கொண்டு அங்காவாது (குறள். 255 அங்கா வாமை - புறப்பட விடாமை. மணக் ).

...

58

அங்காடிப்பாட்டம்

அங்கா' பெ. வாய்திறப்பு. அங்கா முயற்சி (நன். 87).

அங்காகமம் பெ. அங்காகமம், பகுசுருதியாகமம், பூர் வாகமம் என்ற சைனாகமங்கள் மூன்றில் ஒன்று. அங்காகமத்தை உண்டாக்கினவன் (சிலப். 10, 187

அடியார்க்.).

அங்காகர்சணநாசினி பெ. இசிவு அகற்றி. (குண. 1

ப. 1)

அங்காங்கிபாவம் பெ. அவயவ அவயவிகளது சம்பந்தம். அருவினில் உருவந் தோன்றி அங்காங்கிபாவமாகி (சி. சி. 1,27).

அங்காங்கிலக்கணை பெ. உறுப்பின் பெயர் உறுப்புடை யதனை உணர்த்தி நிற்கும் இலக்கணை. (சி. சி . 4.

28 சிவாக்.)

அங்காங்கு வி.அ. வெவ்வேறிடத்தில். அங்காங்கு வைபோகமாயிருக்கிறான், இங்கே பார்த்தால் அரைக் காசு முதலும் இல்லை (பழ. அக. 66). அங்காடி பெ. 1. கடை. அகல் அங்காடி அசை நிழல் குவித்த பச்சிறாக் கவர்ந்த காக்கை (நற். 258, 7-8). அரசு விழை திருவின் அங்காடி வீதியும் (சிலப். 14,179). காவேரிச் சிறப்பங்காடியில் விலை மலிவு (செய்தி.வ.). 2. கடைத்தெரு. நாள் அங் காடி நாறும் நறுநுதல் (அகநா. 93,10). அட்டிற் புகையும் அகல் அங்காடி மோதகப் புகையும் (சிலப். 13,122). நகரங்காடிதொறும் பகர்வனன்' அறையும் (பெருங். 3,18, 44). அங்காடி நாய் போல் அலைந்தனையே நெஞ்சே (பட்டினத்தார். நெஞ்.1).

...

அங்காடிக்காரி பெ. கூடையில் சுமந்து காய்கறி விற்ப வள். அங்காடிக்காரியைச் சங்கீதம் பாடச் சொன் னால் வெங்காயம் கறிவேப்பிலை என்பாள் (பழ.

அக. 68).

அங்காடிக்கூலி

பெ. ஒரு வரிவகை. (செ.ப.அக.)

அங்காடி கூறு - தல் 5வி. பொருட்களை விற்பதற்காகக் கூவுதல். (ராட். அக.)

அங்காடிப்பண்டம் பெ. கடையில் விற்கப்படும் பொருள். அங்காடிப்பண்டங்கிடீர் எனக்கு அரிதாயிற்று (திருமங்கை. திருநெடுந்.16 வியாக்.)

அங்காடிப்பாட்டம் பெ. கடைகளுக்கு உரிய வரி.

ப. அக.)

(செ.

1