பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்காடி பாரி-த்தல்

அங்காடி பாரி-த்தல் 11வி. மனத்தாற் கோட்டை கட்டு தல். (சம்.அக. (செ .ப . அக.)

அங்காடி விலை பெ. கடையில்

விற்கும் வழக்கமான விலை. அங்காடி விலையை அதிர அடிக்காதே (பழ. அக. 67).

அங்காதித்தன் பெ. பிறக்கும்போது உடலில் நிற்பதாகக் கணிக்கப்படும் ஆதித்தன், (விதான. எச்ச.45)

அங்காதிபாதம் பெ. 1. (முதன்மை உறுப்பாகிய தலை முதல் அடிவரையான ) முழு உடம்பு. (சங். அக.) 2. 2.உடலுறுப்புக்களைப் பற்றிக் கூறும் (உடற் கூற்று) வைத்திய நூல். (சங். அக.)

அங்காப்பு பெ. 1. வாய்திறப்பு.

...

அஆ அங்காப் புடைய (நன். 76). அங்காப்பு அடங்க.. தேன் கடலோடிருந்துண்ண அகிலம் படைத்து (முத்துக். பிள். காப்பு. 5). 2. நீர் வேட்கை. அங்காப்பு ஒழிய வருணனுக்கு (அழகர்கலம். 68).

அங்காமி1 பெ. மீதி. (கதிரை. அக.)

அங்காமி2 பெ.அ. தற்காலிகமான, நிலையாக இல்லாத.

(செ. ப. அக.)

அங்காமிப்பட்டா

(செ. ப. அக.)

பெ. (தற்காலிகப்) பட்டாவகை.

அங்காயி பெ. அங்காளம்மை. (பே.வ.)

அங்காரகதோடபரிகாரம் பெ. சாதகத்தில் தோட ராசி களில் அங்காரகன் மேடவிருச்சிக மகரங்களில் இருப் பினும் சூரியன் குரு சனி ஆகியோருடன் கூடியோ அவரால் நோக்கப் பெற்றோ இருக்கும் நிலை. (சோதிட வ.)

அங்காரகதோடம் பெ. சாதகத்தில் இலக்கினத்திற்கோ சந்திரனுக்கோ சுக்கிரனுக்கோ 2, 4, 7, 8 ஆம் இடங் களில் செவ்வாய் இருப்பதாகிய குறை, செவ்வாய்த் தோடம். (சோதிட.வ.)

அங்காரகம் 1 பெ 1. நெருப்பு.

அங்காரகம்

கரி. (வின்.)

...

நெருப்பும் எனவே நிகழ்த்துவர் புலவர் (வட.நி.

86). 2. தணல்கரி. (சங். அக.)

3.கரி.

அங்காரகம்' பெ. பிருங்கராசம் என்னும் படர்கொடி.

(சங். அக.)

59

அங்காரிகை3

அங்காரகம் 3 பெ. உடம்பில் பூசிக்கொள்ளும் வாசனைப் வெண்பொடி அங்காரகமது என

பொருள்.

அணிந்து (செவ்வந்திப்பு.5,5).

அங்காரகவல்லி பெ. சிறுதேக்கு. (செ.ப.அக.அனு.) அங்காரகன் பெ. செந்நீர்முத்து, வெள்ளி அங்காரன் போல வெண்ணீர்மை செந்நீர்மை உடையவாய் உருண்டனவுமான முத்த வருக்கம். சந்திரகுருவே அங்காரகன் என வந்தநீர்மைய வட்டத்தொகுதி (சிலப். 14, 195 அடியார்க்.) 2. நெருப்பு. அங்கார கன். நெருப்பின் பெயரே (திவா. 44). அக்கினிதேவன். அங்காரகன் எனும் பெயர் உதா சனனும் (வட். நி. 116). 4. செவ்வாய்க் கிரகம். அங்காரகன் செவ்வாய் நாமம் (திவா. 57).

...

...

.

செந்தீவண்ணன் அங்காரகன்

...

செவ்வாய் (சோதிட சிகா. 11).

...

3.

பேருளான்

அங்காரசய்யாப்பிரமணம் பெ. மூதாதையர்க்கு நீத்தார் கடன் செய்யாதவன் அடையும் நரகம். திதியதனில் நிகழ்த்திடானேல் அங்காரசய்யாப்பிராமண மா நிரயத்தில் வைக்கும் (சேதுபு. துராசார. 37).

...

அங்காரம் பெ. 1.நெருப்பு. அங்காரம் தழல் இருந்தை (நாநார்த்த. 85). 2. கரி. (முன்.) 3. மாத்துவர் நெற்றியில் அணியுங் கறுப்புக்கோடு. ஆங்க தனிடை அங்காரமுந் தீட்டி (பிரபோத. 11, 17).

அங்காரவல்லன் (அங்காரவல்லி) பெ. 1. சிறுதேக்கு. (செ.ப. அக. அனு.) 2. பெருங்குறிஞ்சா.

(LLDGOT.)

அங்காரவல்லி (அங்காரவல்லன்) பெ. 1. சிறு தேக்கு. (பச்சிலை. அக.) 2. பெருங்குறிஞ்சா. (முன்.)

அங்காரவாரம் பெ. செவ்வாய்க்கிழமை. அங்கார வாரம் தனக்கு இடர்வரும் (அறப்பளீ. சத. 50). அங்காரன் பெ. 1.செவ்வாய். அங்கார(ன்) வாரம். ((LOGIT.) 2. நெருப்பு.(சேந். செந். 22)

அங்காரி1 பெ. வெண்காரம். (சங். அக.)

அங்காரி' பெ. சிறு நெருப்புச்சட்டி. (முன்.)

அங்காரிகை! பெ. நன்னாரி. அங்காரிகை மூலி ஆச்சியத்தோடுண்ண (இராசவைத். 53/செ.ப. அக.). அங்காரிகை' பெ. கரும்பு. (மலை அக.) அங்காரிகை' பெ. முருக்கம் பூங்கொத்து. (செ.ப.

அக. அனு.)