பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கிமாந்தம்

அங்கிமாந்தம் பெ. ருழந்தைகளுக்கு வயிறு மந்தமாக வருத்தும் நோய். தங்கிய அங்கிமாந்த நோயினர் (கடம்ப. பு.569).

அங்கியங்கடவுள் பெ. நெருப்புக் கடவுள். அங்கியங் கடவுள் அறிகரியாக (தொல். பொ. 142 நச்.).

அங்கியற்பொருள்

பெ. ஐந்து நிலக் கருப்பொருள். அங்கியற்பொருளாவது, அந்நிலத்தில் அங்கமாம் பொருள் (வீரசோ. 94 உரை.).

அங்கியாதானம் பெ. யாகத்திற்காக அக்கினியைச் சேர்க் குங் கிரியை. அங்கியாதானம் ஆதிய வேள்வியின் கருமம் (திருக்காளத், பு. 2933).

அங்கியெதிர்கொடைப்பொருள் பெ. திருமணநேரத்தில் தீ முன்னிலையில் பெண்ணுக்குத் தந்தை முதலா னோர் கொடுக்கும் பொருள். (சங். அக.)

கர்ல

அங்கியோகம் பெ. மூலக் கனலைச் சுழுமுனை மார்க்க மாக மேல் நோக்கி எழுப்புவதாகிய யோகம். னைக் காய்ந்து அங்கியோகமாய் (திருமந். 345). விரைசெய் பூங்குழலாய் அங்கியோகம் என்று இசைத்தார் (பெரியவரு. ப. 42).

அங்கிரகம் பெ. உடல்வலி. (கதிரை. அக.)

அங்கிரசு 1 (அங்கிரன், அங்கிரா) பெ. நான்முகனிடம் பிறந்த ஏழு முனிவருள் ஒருவர். புனித அங்கிரசு மாந்தாதா (மச்சபு. உத்திர. 48, 57).

அங்கிரசு' பெ. தீ. (சங். அக.)

அங்கிரம் பெ. ஓர் உபபுராணம். (செ. ப. அக.)

அங்கிரமாதிபாடாணம் பெ. பிறவிப்பாடாணவகை. (முன்.)

அங்கிரன் (அங்கிரசு, அங்கிரா)

பெ. ஒரு முனிவர்.

இயங்கும் அங்கிரனை நோக்கலும் (நல். பாரத.

குமார. 3).

அங்கிரா (அங்கிரசு, அங்கிரன்) பெ. ஒரு முனிவர். அங்கிரா... இருடி (பிங். 314). வழுவில் சிறப்பின் அங்கிரா (கூர்மபு. பூருவ. 7,17).

அங்கிரி! பெ. 1. அடி, பாதம். அங்கிரி தாளும் ஆகும் (பிங்.997). அருளுண்மை யறிவினின்று அவர் அங்கிரி ஆவியுள்ளே அழுத்தும் வகை அறியேன் (முல்லையந். 66). மார்க்கண்டேயன் கமலக் குளிர்

62

2

அங்கு 2

அங்கிரியைப் பணிந்து (தேவிமான். தேவி தியா. 2) 2. மூன்றுகால் இருடி. (சங். அக.) 3. செய்யுளின் அடி. (முன்.)

அங்கிரி2 பெ. மாட்டு நோய் வகை. (பெரியமாட். 102)

அங்கிரி' பெ. 1: மரம். மரம். அகமே அங்கிரி விருக்கம் அப்பெயரே (பிங்.2791). 2. மரவேர்.

மரவேர் (நாநார்த்த. 84).

அங்கிரிவல்லி பெ. செடிவகை. (சாம்ப. அக.)

அங்கிரி

அங்கிவானவன் பெ. தீக்கடவுள். மாலைஎரி அங்கி வானவன் தான் தோன்றி (சிலப். 21, 49).

அங்கிவிழிவந்தவன் பெ. வயிரவன். அங்கிவிழிவந்த வன்...வயிரவன் நாமமே (ஆசி.நி. 9).

அங்கிளி பெ. கற்றாழை (சங். அக.)

அங்கினி

பெ. கற்றாழை வகை. (முன்.)

அங்கீகரணம் பெ. உடன்பாடு. (முன்.)

அங்கீகரி-த்தல் (அங்கிகரி) 11வி. ஏற்றுக்கொள்ளுதல். சித்தம் வைத்து அவையும் அங்கீகரித்திடும் மகா தேவதேவா (அறப்பளீ. சத. 100).

அங்கீகாரம் (அங்கிகாரம்) பெ. 1. உடன்பாடு, ஏற்பு. தொல்காப்பியம் அல்லாத நூல்களும் அங்கீகாரம் என்க (திருக்கோ. 129 நுண்பொ.). 2. உபசரிப்பு. கடி தெழுந்து அங்கீகார மனைத்துஞ் செய்தான் (ஞானவா. உபசாந்தி. சிகித். 81).

அங்கீகிருதம் பெ. ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(சங். அக.)

அங்கு1 பெ. 1 அவ்விடம். மால் அங்கு உடைய மலி வனம் மறுகி (குறிஞ்சிப். 97). ஆருயிர் எஞ்சுமன் அங்கு நீ சென்றீ (கலித். 145,46). அங்கு உளகிளை காவற்கு... உளன்...உம்பி (கம்பரா. 2, 7, 45). ஆதியு மாம் அங்கு (சி. போ. வெ.2) 2. அப்போது. அங்கு அவன் உலத்தலோடும்... பனசன்வந்து (கம்பரா. 6, 20,36 பா.பே.). 3. அவ்வாறு. அங்கு அன்புடைய வர்க்கு இன்பமோரீர் (தேவா. 7, 5, 5).

,

அங்கு2 இ. சொ. அசை. மானிடர் மற்றங்கு அவர் வாளால் நின்மருகிக்கும் நாசி இழக்கும் நிலை நேர்ந் தார் (கம்பரா.3, 8, 4). நனி இருந்திடும் வேந்தர்தம் செல்வமும் நலம் கொள் அங்கு அவர்பூணும் (திரு வாணிவாது.66).