பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சம்

அச்சம் பெ. சரியொப்பு. அவன் அச்சம் தந்தை போலிருக்கிறான் (பே.வ.).

அச்சம் பெ.

பெ. கரடி. (சங். அக.)

அச்சம்1 பெ. அன்னை. (பொதி.நி.2, 19 பா.பே.)

அச்சமம் பெ. முயிற்றுப்புல். (மலை அக.)

அச்சமாடல் பெ. கேட்பவர்க்கு அச்சமுண்டாகப் பேசுகை. அழுக்காறு அவா வஞ்சம் அச்சமாடலும் ஆசிரியர் ஆகுதலே (நன். 31).

அச்சமாமுகம் பெ. புல்லுருவி. (வாகட அக.)

அச்சயன் பெ.

அக.)

...

இலர்

(அழிவற்றவன்) இறைவன். (சங்.

அச்சரக்காய்ச்சல் பெ. ஒருவகைச் சுரம். (செ.ப.அக.)

பெ. தெய்வமகள். (முன்.)

அச்சரசு பெ.

அச்சரப்பாக்கத்தவர்

(அபி. சிந்.)

(தேரை. வெண். 24)

பெ.

வணிகரில்

ஒரு பிரிவினர்.

வாயிலுண்டாகும் நோய்.

அச்சரம்' (அட்சரம்) பெ.

அச்சரம்' (அக்கரம், அட்சரம்) பெ. எழுத்து. அவன்

நாலச்சரம் கற்றவன் (பே.வ.).

அச்சரிபுச்சரி பெ. 1. தினவெடுக்கை.

அனு.)

(செ. ப. அக.

2.தொந்தரவு. காலையிலிருந்து ஒரே அச்

சரிபுச்சரியாக இருக்கிறது (பே.வ.)

அச்சலச்சலாய் வி. அ. விட்டுவிட்டு. மழை அச்சலச்ச

லாய்ப் பெய்கிறது (பே.வ.).

அச்சலத்தி பெ. களைப்பு. (செ. ப. அக. அனு.)

அச்சலிப்பு பெ. பயம். அரி கரியைக் கண்டவிடத்து அச்சலிப்பாய் ஓட (நக்கீர. ஈங். 4).

அச்சவாரம் (அச்சகாரம், அச்சாரம்) பெ. முன்பணம். (செ.ப. அக. அனு.)

அச்சவுபதை பெ. அமைச்சனின் மனவியல்பை ஆராயும் நான்கு உபதைகளுள் இவ்வரசனால் நமக்குத்தீங்கு விளையும், எனவே இவனை நீக்குவது குறித்துக் கருத்து என்ன என்று கேட்பதாகிய ஒரு தேர்வு முறை. (குறள். 501 பரிமே.)

அச்சழிவு பெ. (மிகு வழக்கால்)

(மாதை. பணவிடு. 142)

டெ.ெஅ-5 அ

காசின் தேய்வு.

67

அச்சாரம்

அச்சறுக்கை பெ. 1. பயமுறுத்துகை. (வின்.) 2. எச் சரிப்பு. (முன்.)

அச்சறை பெ. அச்செழுத்துக்கள் வைப்பதற்குரிய அஞ் சறைப்பெட்டி போன்ற அறைகளுடைய பெட்டி. அச் சறையானது மரத்தாலோ எஃகுத் தகட்டினாலோ செய்யப்பட்டிருக்கும் (அச்சுக்கலை ப. 168).

அச்சன்1 பெ. தந்தை. என் அத்தன் அச்சன் அரங் கனுக்கு (பெருமாள்தி.2,9). அச்சன் என்னையும் ஆண்டுகொண்டருளிய அற்புதம் (திருவாச. 41, 9). குடநாட்டார் தந்தையை அச்சன் என்றும் (தொல். சொல். 400 நச்.).

2

அச்சன்" பெ. திருவாசக நூலின் அச்சப்பத்து என்னும் பதிகம். உயிருண்ணி அச்சன் திருப்பாண்டி பிடித்த பத்தோடு ஏசறவும் பத்தே (பெருந். 2040).

அச்சனம்1 பெ. நெசவுக்கருவி வகை. நூல் புடவை யாய்த் திரிதற்கு அச்சன முதலாயின சாதனம் (B. 421 OUT LOGOT.).

அச்சனம்2 (அச்சனு) பெ. வெள்ளுள்ளி. (செ.ப. அக.

அனு.)

அச்சனு (அச்சனம்') பெ. வெள்ளுள்ளி (வாகட அக.) அச்சாணி1 பெ. 1.வண்டிச் சக்கரம் கழலாது அச்சிற் செருகப்படும் கடையாணி. தேர்க்கு அச்சாணி (குறள். 667). அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது (பழ அக. 94). 2. மரை, திருகாணி. (எந்திர.க.

சொ. ப. 18)

அச்சாணி' பெ. நிலவேம்பு என்னும் செடி. (சித். அக /செ.ப.அக. அனு.)

அச்சாணி 3 பெ. வேலிப்பருத்திச் செடி. (வாகட அக.) அச்சாணி முள்ளு பெ. முட்செடி. (சாம்ப. அக.)

அச்சாணிமூலி பெ. வேலிப்பருத்தி என்னும் கொடி. (வைத். விரி. அக.ப. 12)

அச்சாப்பொங்கா பெ. பெண்கள் விளக்கைச் சுற்றி நின்று பாடியாடும் ஆட்டம். (செ. ப. அக.)

அச்சாரம் (அச்சகாரம், அச்சவாரம்) பெ. விலையோ கூலியோ பேசிக் கொடுக்கும் முன்பணம். எத்தனை பாவம் வேண்டுமானாலும் எனக்குக் கொடுக்க லாம் அச்சாரமே (சர்வ. கீர்த்.5,3). ஒப்பந்தம் பேசி அச்சாரமும் கொடுத்தோம் (பே.வ.).

...