பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அச்சுவதரம்2

அச்சுவதரம்2 பெ. ஒருவகைப் பாம்பு. (நாநார்த்த.

130)

அச்சுவதி (அச்சுவினி) பெ. நட்சத்திர வரிசையுள் முதல் நட்சத்திரம், அச்சுவினி. அச்சுவதி ஆதி (நல். 231). ஐப்பசி அச்சுவதிக்கும் பூம்புனலாடி (திருக்காளத்.

பாரத. பதினெட். அப்புலரிக்காலையில்

4. 21, 24).

அச்சுவம்1 பெ. குதிரை. பரி அயமும் அச்சுவம்

..

0.0

குதிரை (கயா. நி. 153). இந்த அச்சுவம் கூர்ச்சரம் (திருவிளை. பு.59, 105). அச்சுவம் என்னும் நாமம்... எனுமது கொண்டு தேறே (திருவால. பு. 28,79).

அச்சுவம்' பெ. அக்கிரா என்னும் மருந்து வேர். அச் சுவம் குதிரையும் அக்கிரா மருந்தும் (பொதி.நி.

2, 23).

...

அச்சுவமேதம் (அசுவமேதம்) பெ. ஒரு வேள்வி. சோதிட் டோமம் இராசசூயம் அச்சுவமேதம் (பிங். 443). அச்சுவமேதம் ஓர் பத்து இனிதினில் ஆற்றுவித்து (கூர்மபு. பூருவ.33,101).

அச்சுவரி பெ. ஒரு பழைய வரி. அச்சுவரி பொன்வரி நாடென்ற வரி ... (புது. கல். 251).

அச்சுவன் பெ. குதிரையின் இயல்பு உடைய ஆண்.

(கல்லாடம் 5 உரை)

அச்சுவாகனம் பெ. அச்சிடும் யந்திரம். (செ. ப. அக. அனு.)

அச்சுவாகனமேற்று-தல் 5வி. நூலை அச்சிடுதல். (அருகிய

வ.)

அச்சுவாதீதம் பெ. செவ்வலரி வகை. (சித். அக.)

அச்சுவார்-த்தல் 11வி. அச்சிடுவதற்குரிய எழுத்துக்களை உலோகம் உருக்கிச் செய்தல். (தொ.வ.)

அச்சுவார்ப்பகம் பெ.. அச்சிடுவதற்குரிய எழுத்துக்களை உருக்கி வார்க்கும் ஆலை. (ஆட்சி. அக.)

அச்சுவார்ப்படக்கலை பெ. அச்சிடுவதற்குரிய எழுத்தச்சுக் களைச் செய்துதரும் தொழில்முறை. அச்சுவார்ப் படக்கலை விஞ்ஞான முறையில் திருத்தியமைக்கப் பட்டது (அச்சுக்கலை ப. 94).

அச்சுவார்ப்படக்காரர் பெ. எழுத்துக்களை உலோகத்தில் செய்து தருவோர். (அச்சுக்கலை ப. 98) 16-ஆம் நூற் றாண்டின் முதலாம் பிற்பாதியிலும் அச்சுவார்ப்

72

அச்சுறுத்து-தல்

படக்காரர், அச்சடிப்பாளர், பதிப்பாளர், ஆசிரியர் ...என்பன போன்ற சொற்களெல்லாம் அதிக வேறுபாடில்லாமல் கையாளப்பட்டு வந்தன (முன்.

ப. 98).

அச்சுவார்ப்படம் பெ. அச்சிடுவதற்குரிய எழுத்துக்களை வார்ப்புச் செய்கை. (தொ. வ.) .

அச்சுவார்ப்பு பெ. அச்சிடுவதற்குரிய எழுத்துக்களை உலோகத்தால் உருக்கிச் செய்கை. (தொ. வ.)

அச்சுவினி (அச்சுவதி) பெ. நட்சத்திர வரிசையுள் முதலாவதன் பெயர். (பிங். 239)

அச்சுவினிகள் (அச்சுனிகள்) பெ. அச்சுவினிதேவர் இருவர். அவி அச்சுவினிகளுக்கு அளித்து (வேதார.

4. 3, 12).

அச்சுவினிதேவர்

(அச்சுனிதேவர், அசுவினிதேவர்) பெ. (தத்திரன் நாதத்தியன் என்ற பெயருடைய) தேவ மருத்துவர் இருவர். அச்சுனிதேவர் இருவர்

(பிங். 180).

அச்சுவினிமதலையர் பெ. (அச்சுவினிதேவர் இருவரின் மக்களான) நகுல சகாதேவர். அச்சுவினி மதலையர் இரட்டையர் நகுலசாதேவர் நாமம் (பிங். 744) .

அச்சுவெல்லம் பெ. கருப்பஞ் சாற்றைக் காய்ச்சி அச்சில் வார்த்தெடுத்த சிறுவெல்லக்கட்டி. (நாட்.வ.)

அச்சுவேளாளர் பெ.பட்டினவர் எனப்படும் கடலோடி களுள் ஒருவகையினர். (அபி. சிந்.)

தோகப்

அச்சுறு-தல் 6 வி. அச்சமடைதல். நடுக்குற்று இவ்வுல கெல்லாம் அச்சுற (கலித். 134, 9). இவண் இருத்தி என அச்சுற்று... அயல் நின்றதும் இசைப்பாய் (கம்பரா. 5, 4, 60 பா.பே.). அச்சுறுகின்றது என் ஆவது ஆகுமால் (கந்தபு. 4, 10, 19).

அச்சுறுகொழுந்தொடர் பெ. யானை விரைந்து செல்லாத படி அதன் கழுத்திலே இடுவதற்கு மரக்கட்டையுடன் இணைத்த சங்கிலி. கச்சையும் வீக்கினன் கறங்கிவரு மணியணிந்து அச்சுறுகொழுந்தொடர் யாப்பழித்து

(சீவக. 1836).

அச்சுறுத்து-தல் 5வி. அஞ்சச்செய்தல். அஞ்சி அச்சுறுத் தலும் (தொல். பொ. 112, 12 இளம்.). உரித்தெடுத் துச் சிவந்ததன் தோல் பொருந்தமூடி உமைய வளை யச்சுறுத்தும் (தேவா. 6,25,11).

குண