பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசங்காதகண்டன்கோல்

அசங்காதகண்டன்கோல் பெ. பண்டைக் காலத்தில்)

நிலம் அளப்பதற்குப் பயன்படுத்திய ஓர் அளவுகோல். கோலால். குழி எண்ணூறும்

அசங்காதகண்டன் (தெ.இ.க. 17, 725):

அசங்கிதம் (அசங்கியம், அசிங்கம்) பெ. தூய்மை யற்றது. காக்கை எச்சமாதிகளில் யாவருக்கும் அசங்கித புத்தி எப்படித் தோற்றுமோ (வேதாந்த சாரம் ப. 6). அருவருப்புச் சோறும் அசங்கிதக் கறி யும் (பழ. அக. 520).

அசங்கியம் (அசங்கியாதம், அசங்கியேயம், அசங் 1 கியை) பெ. எண்ணிறந்தது. (செ. ப. அக.)

அசங்கியம்2 (அசங்கிதம், அசிங்கம்) பெ. தூய்மை யற்றது. (செ. ப. அக.)

அசங்கியாதம் (அசங்கியம், அசங்கியேயும்,

அசங்

கியை) பெ. எண்ணிறந்தது, கணக்கற்றது. அசங்கி யாதமாகிய கடலும் தீவும் (மேருமந். பு. 6 உரை).

அசங்கியேயம் (அசங்கியம், அசங்கியாதம், அசங்கியை) பெ. எண்ணிறந்தது. அசங்கியேயகிரந்தம் (சங். அக.) அசங்கியை (அசங்கியம், அசங்கியாதம், அசங்கி யேயம்) பெ. எண்ணிறந்தது. (முன்.)

உஅசங்கம்

அசங்கு-தல் 5வி. 1. நடுங்குதல், தளர்தல். தேவர்கள் வேர்த்து அசங்கிட, அண்டம் வெடித்திட ஆர்த்த சங்கம் (கம்பரா. 6,14,99). களங்கனியை நிகர் தண்டதரற்கு இனி (செந். நிரோ.10). அசங்காத பலம் உள்ள (இராமநா. 4, 1, 5). 2. அசைதல். அந்தக்காற்றுக்கு... ஓர் இலை அசங்காதே நிற்க (தக்க. 144 ப. உரை). ஆடாமல் அசங்காமல் வா கண்ணா (வேங்கட. சுப். கீர்த்.).

'அசங்கை' பெ. அச்சமின்மை. அறிவரிய சிந்தையானை அசங்கையனை அமரர்கள்தம் சங்கையெல்லாங் கீண்டானை (தேவா. 6, 67, 9).

அசங்கை 2 பெ.பற்றின்மை. ஒளிரும் நல் அசங்கை யொடு (தேவிமான். 4, 14).

அசங்கை 3 பெ. ஐயமின்மை. (சங். அக.)

அசங்கை + பெ. மதிப்பின்மை. (செ.ப.அக.)

7

5

அசட்டுவிழி

அசங்கையன் பெ. எவ்வித அச்சமும்

அச்சமும் இல்லாதவன். சங்கையெல்லாம்

அசங்கையனை அமரர்கள் தம் கீண்டானை (தேவா. 6, 67, 9).

அசசரம்1 பெ. நெருஞ்சில் செடி. (வின்.) ச

அசசரம்' பெ. முருங்கை மரம். (முன்.)

அசஞ்சத்தி பெ. பற்றின்மை. ஒன்றிலும் பற்றற்றி ருப்பதே அசஞ்சத்தி (ஞானவா. உற். 47 உரை).

அசஞ்சலம் பெ. சலிப்பின்மை. (செ. ப. அக.)

அசஞ்சலன் பெ. சலிப்பில்லாதவன். அபயன் அபங் கன் அகம்பன் அசஞ்சலன் (ஞானா. 55,15). நட் பாளர் பிரியும் அசஞ்சலன் (அருண. சித்துவகு. 93).

அசட்டன் பெ. கொடியவன். கள்வராய் உழல் அசட்டர்கள் ஐவரை அறுவராக்கிய வசிட்டன் (கம்பரா. 1, 5, 76).

அசட்டாட்டம் பெ. புறக்கணிப்பு. (ராட். அக.)

கப

அசட்டாளம் பெ. 1.ஆபாசம். (செ. ப. அக.) 2. ஒழுங்கீனம். (முன்.)

அசட்டி பெ, ஓமம்.. (வைத். விரி, அக. ப. 4)

அசட்டுச்சிரிப்பு

பெ. (இக்கட்டான நிலை யில் சிக்கிக் கொண்டாலோ, தான் செய்த சிறு தவறு வெளியானாலோ ஏற்படும் நிலைமையைச்) சமாளிக்கும் சிரிப்பு. உன் முகத்தில் அசட்டுச் சிரிப் பைப் பார்த்தால் (பே.வ.).

...

அசட்டுத்தனம் பெ. அறியாமை, தவறு, இகழ்ச்சிக் குறிப்பு போன்றவை சேர்ந்த தன்மை. அவனுடைய அசட்டுத்தனத்தை எல்லார் நடுவிலும் காட்டிக் கொண்டான் (பே.வ.).

அசட்டுப்பிசட்டெனல் பெ. சந்தர்ப்பத்திற்குப் பொருத் தமில்லாது பேசுகை. அசட்டுப்பிசட்டென்று எதை யாவது சொல்லி வைக்காதே (பே.வ.).

அசட்டுப்பேச்சு பெ. அறியாமை, தவறு, இகழ்ச்சிக் குறிப்புப் போன்றவை சேர்ந்த பேச்சு. பயனற்ற இந்த அசட்டுப் பேச்சை இன்று முதல் விட்டுவிடு (பே.வ.).

அசட்டுவிழி பெ. செய்த தவற்றினை மறைக்க இயலாது வெளியாக்கும் பார்வை.

(பே.வ.)

428