பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசட்டை

அசட்டை றொழுகி மையலாக்குவன் (நல். பாரத. துட்டியந்த. 29). நீ அசட்டை செய்யில் எப்படித் தொலைப்பேன் என் கன்மக்கட்டை (சர்வ. கீர்த். 61, 1). 2. கவன மின்மை. வேலையில் அசட்டையாக இருக்கக் கூடாது (நாட்,வ.).

பெ. 1. புறக்கணிப்பு. அசட்டையற்

அசடம் பெ. சடம் அல்லாதது, அறிவுடைப்பொருள். அசடம் அனாமயம் அசங்கம் அதுலம் (கைவல்ய. சந்தே. 137).

னை

அசடன்1 பெ. 1. கீழ்மகன், கயவன். அசடர் அதன் மர்...கீழோர் (பிங். 872). ஆசாரம் இல்லா அசட ருடன் கூடி (பட்டினத்தார். அருட்பு. இறந்தகால. 5). 2. அறிவற்றவன், மூடன். அசடனை மசடனை ஆசார ஈனனை (திருப்பு.85).அவ்வசடர் உரைத்த சொல் (பெருந்.பு. 21,16). நிலவிய தொழிலன் வஞ்சன் அசடரில் அசடரில் அசடன் (இராம. திருப்.205). நாட்டில் அசடன் என நான் பேர் எடாமல் (சர்வ. கீர்த். 14, 3).

கல்

அசடன் 2 பெ. சடமல்லாதவன், அறிவுடையவன்.

அச

டனாய் ஆனந்தத்தைத் தவிர்த்து (ஞானவா. உபசாந்தி. 31). இவ்வுயிர் தனக்கு... நண்ணுறும் அசடன் என் னும் நற்பதம் (சிவப்பிர. விகா. 120).

அசடி

பெ. அறிவற்றவள். அசடிகள் கசடிகள் முழுப் புரட்டிகள் (திருப்பு.835).

அசடு! பெ.

1.

கீழ்மை. அசடு மாதர்க்கு வாது சொல் கேடிகள் (திருப்பு. 41). அசட்டுக் கிரியை (சுந்தரலங். 7). அசட்டுக் குரங்கு என்று அகந்தையே பண்ணி (இராமநா. 6, 20 சரணங்.). 2. அறியாமை. அசட்டு வசிட்டன் (தக்க. 488). ஆண்டவனே உன்றனுக்கு அசடு வந்தவாறேது (மதுரைவீர, ப. 66). 3. அறியாமை வெளிப்படும்வகை யில் நடந்துகொள்பவன், முட்டாள். அவன் வடிகட் டின அசடு (பே.வ.) .

அக.) 2.

அசடு பெ. 1. இரும்பு முதலிய உலோகங்களினின்று கழலும் தகட்டு வடிவத் துரு. (செ. ப. சிரங்குப் புண் மீது படரும் பொருக்கு. ஆறின புண் ணிலும் அசடு நிற்கும் (பழ. அக. 1345). 3. எண் ணெயின் அடியில் தங்கும் கசடு. (தஞ்.வ.) 4. கண் ணில் சேரும் பீளை. (முன்.) 5. குற்றம். அறிவுளோர் தமக்கு யாதோர் அசடுஅது வருமேயாகில் (விவேக சிந். 54).

76

அசத்தியோநிருவாணம்

அசடுதட்டு-தல் 5வி. 1. அறியாமை முகத்தில் புலப் படுதல். (நாட்.வ.) 2. பொலிவழிதல். அந்த ஊர் அசடுதட்டியிருக்கிறது (செ. ப. அக.).

அசடுவழி -தல் 4 வி. அறியாமை வெளிப்படுதல். குட்டு வெளிப்பட்டதும் அவன் முகத்தில் அசடு வழிந்தது

(நாட். வ.).

அசத்தன் பெ.

ஆற்றல்/வலிமை அற்றவன். பரிகா ரம் செய்தற்கு அசத்தரானால் (சிவதரு. 11, 2 உரை). சாபம் தவறிற் றென்னில் கருத்தா அசத் தனாம் (கொலைமறு. 7 உரை). 2. (சைவசித்.) கேவல நிலையிலுள்ள ஆன்மா. கேவலாவத்தையில் உள்ள ஆன்மாவிற்குக் கேவலன் ... அசத்தன்... என் னும் பெயர்கள் உள்ளன (சிவப்பிர. விகா. 291 உரை).

அசத்தி பெ. வலியின்மை. கிலேசத்தால் அசத்தி யால் துயரம் (சூத. எக்கிய. பூருவ, 17, 15).

அசத்தியகதனம் பெ. பொய்பேசுகை. கதனமும் உண்டு (நீல. 1 உரை).

...

அசத்தியம் பெ.

அசத்(தி)ய

(உண்மையல்லாதது) பொய். அசத் தியம் அறியீர் (கோனேரி. உபதேசகா. 12, 128). அம்பு - யாசனன் அசத்திய வினை அகன்றதும் (செவ்வந்திப்பு. 1,52). அசத்தியப் பாதகஞ் சூழ்க (பாரதி. தேசியம்.

50, 14).

அசத்தியன் 1 பெ. வலிமையற்றவன். என்னைப் போன்ற அசத்தியரையும் (களிற்று. 96 பொழிப்பு.).

அசத்தியன் 2 பெ. பொய்ம்மையுடையவன். நிசத் திறங் கூறின் நெறியொன்றும் இல்லா கண்டாய் அவன் (அரிச். வெண். 60).

அசத்தியனே

அசத்தியாதி பெ. இல்லாத பொருளை இருப்பதாக எண்ணும் அறியாமை. (விசாரசந். 462)

அசத்தியோநிருவாணதீக்கை பெ. உடனடியாக அல்லா மல் பின்னால் முத்தியைக் கொடுக்க வல்லதாகிய நிரு வாணதீக்கை. ஏனை நிருவாண தீக்கை தேகாந்தத் தின் முத்தியைப் பயக்கும் அசத்தியோ நிருவாண (தீக்கை) எனவும் (சி.சி. 8, 4 சிவஞான.).

அசத்தியோநிருவாணம் பெ. அசத்தியோநிருவாண தீக்கை. அசத்தியோ நிருவாணம் எனவும் சத்தியோ நிருவாணமெனவும் இருவகைப்படும் (சைவ,நெறி ஆசாரிய. 62 உரை).