பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசத்து

அசத்து பெ. 1. அறிவற்ற

2.

சடப்பொருளாகும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய பாசங்கள். சத்தும் அசத்தும் சதசத்தும் தான் கண்டு (திருமந். 1420). உண்மையல்லாத) பொய்ந்நெறி, நேர்மையற்ற வழி. அசத்தினிற் செல்கிலாச் சதுமுகத்தவற்கு (கம்பரா. 6,36, 116). 3. இல்லாதது. அசத்தொடு சத்தசத்து அல்லவா (திருக்காளத். பு. 5, 44). 4. நிலை பேறில்லாதது. உலகம் முழுதும் அசத்தாகத் தான் சத்தாகி உள்ளது (முன். 32, 40). அறைந்த நிதியாதிய அசத்தென (செ. பாகவத. 11, 14, 8). 5.கீழானவன், தீயவன். அசத்துக்கு வாழ்க்கைப் பட்டு ஆயிரம் வருடம் வாழ்வதைவிடச் சத்துக்கு வாழ்க்கைப்பட்டு (பழ. அக. 76).

அசதி

பெ.

1.

...

விளையாட்டுப் பேச்சு, நகை விளைக் கும் பேச்சு. தண் சேர்ப்பன் நக்காங்கு அசதிநனி யாடி (கைந். 55). நாண தொழில் புனைந்தேம் ...மாணாக்கியரேம் ஆயினெம் என அசதியாடிய (பெருங்.3,15, 15-17). 2. எள்ளல், பரிகாசம். கள்வர் இவரோவென நக்கு ஆங்கு ஒறுக்கப்படுவார் இவர் என்று அங்கு அசதியாடி (சீவக. 1871).

634

அசதி2 பெ. 1. தளர்ச்சி,சோர்வு. கைகால் எல்லாம் அசதியாக இருக்கின்றன (நாட். வ.). வயிற்றெரிவு அசதி பறந்துபோகும்

...

மறதி. (பே.வ.)

(போகர் 700,503).

2.

அசதி3 பெ. அவ்வையார் பாடிய கோவையின் பாட் டுடைத் தலைவன். ஆடுங் கடைமணி ஐவேல் அசதி (தனிச். சிந். அவ்வை. 102).

4

அசதி பெ. கற்பில்லாதவள், விலைமகள். குட்டினி ... துட்டையே அசதியாகும் (சூடா.நி. 2,65).

அசதி" பெ. வானிலிருந்து ஒலிக்கும் குரல். இவை கொடேல் என்று உரைத்தது அந்தரத்தே ஓர் அசதி (பாரதவெண். 268).

அசதி பெ. சடுதி. (வின்.)

அசதிக்கிளவி பெ. நகைச்சுவை

தரும் சொற்கள்.

அசதிக்கிளவி நயவர மிழற்றி (பெருங். 2, 17, 191).

அசதிக்கோவை பெ. அசதி என்பவன் பேரில் அவ்வை யார் பாடிய (இன்று கிடைக்காத) ஒரு கோவைப் பிர பந்தம். (கார். கொங்குமண். சத. 45)

அசதிசன்னி பெ. மூளையில் இரத்தம் சேர்வதால் வரும் சன்னிநோய். (பைச.ப. 297)

77

அசபா

அசதித்தொழில் பெ. நகைச்சுவைப் பேச்சு, விகடப் பேச்சு. ஆடியாடி அசதித் தொழில் செய்ய (சூளா.

1567).

அசதியாடு-தல் 5வி. 1. எள்ளி நகையாடுதல், பரிகசித் தல். அசதியாடிய மைதவழ் கண்ணி (பெருங்.3, 15,17).கள்வர் இவரோவென... நக்குஆங்கு ஒறுக்கப் படுவார் இவர் என்று அங்கு அசதியாடி (சீவக.1871). கலகல முழங்கி யாரும் கையெறிந்து அசதியாட (கச்சி. காஞ்சி. இருபத்தெண்.225). யாகப் பேசுதல். அலைகுழல் சோர்தர அசதியாட லால்... கொழுநரும் கள்ளும் ஒத்தவே (கம்பரா.1, 17, 24). வானோர் அசதியாடு இடங்கள் கண் டாய் (சூளா. 764).

2. வேடிக்கை

அசதீபம் பெ. கோயிலில் ஆராதனையில் காட்டும் ஆட்டு வடிவ விளக்கு வகை. (பரத. 4, 41 உரை)

அசதுரும் பெ. கொட்டை. (வாகட அக.)

அசந்தர்ப்பம்1 பெ. 1. வாய்ப்பின்மை. அங்கு வருவ தற்கு அசந்தர்ப்பமாயிருக்கிறது (பே.வ.). 2. வசதி மின்மை. அசந்தர்ப்பத்தால் நன்கொடை கொடுக்க முடியவில்லை (பே.வ.).

அசந்தர்ப்பம்2 பெ. பொருத்தமின்மை. அசந்தர்ப்ப மாகப் பேசாதே (பே.வ.).

அசப்பறழ் பெ. ஆட்டுக்குட்டி. அசப்பறழ் (= புலியை) மருட்டிய விதம்போல்

4. 14, 260).

புலை

(திருக்கோவ.

அசப்பியம் பெ. அவைக்கு ஏற்றதல்லாத சொல், அவை யல் கிளவி. அவர்கள்... அசப்பிய வார்த்தைகளைப் பிரயோகித்து வந்தார்கள் (பிரதாப.ப. 293).

அசப்பு பெ. 1. பராக்கு, வேறொன்றில் கவனம். நண்ணி நின்று ஒருவர் அசப்பிலே என்னை அழைத்தபோது ( திருவருட்பா 3466). 2. ஒருகோண நோக்கு. (பே.வ.)

அசப்பு பெ. விரைவு, சடுதி. (சித். அக./செ. ப. அக.

அனு.)

அசபம் (அசபா, அசபை, அசவை) பெ. அசபா மந் திரம். (கதிரை. அக.)

அசபா (அசபம், அசபை, அசவை) பெ. யோகியர் மூச்சை உள்ளிழுக்கும் போதும் வெளிவிடும்போதும் மனத்திற்குள் செபிக்கும் மந்திரம். நல் மரவுரி