பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசிமேதம்

அசிமேதம் பெ. நாற்றப் பூடுவகை. (சாம்ப. அக.)

அசிர்-த்தல் 11வி. ஐயப்படுதல். தாய் வழியை நினைத்து அசிர்த்தாரிறே குகப்பெருமாளும் (திரு வாய். 6, 7, 1 ஈடு).

2

அசிர்ப்பு பெ. சோர்வு, அயர்வு. இனி அசிர்ப்புப் பிறக்க இருப்போம் அல்லோம் (திருப்பா. வியாக்.

அவ.).

அசிரத்தை பெ. (அ + சிரத்தை) 1. கவனிப்பின்மை. உடல் நலத்தில் அசிரத்தையாக இருக்காதே (நாட். வ.). 2. ஆர்வமின்மை, ஈடுபாடின்மை. வீட்டுக்குப் போய்தான என்ன பண்ணப் போகிறோம் என்று அசிரத்தையாகப் பேசாதே (நாட்.வ.).

அசிரம்1 பெ. காற்று, உடல், ஒலி முதலிய பொருள் (நாநார்த்த.107)

கள்.

அசிரம்' பெ. தவளை. (முன்.)

அசிரம்' பெ. முற்றம். (முன்.)

அசிரம் + பெ. தீ. (முன். 114)

அசிரன்1 பெ. சூரியன். (முன்.)

அசிரன் 2

பெ.

நெருப்பு (முன்).

அசிரன்' பெ. கவந்தன் என்னும் அரக்கன். (நாநார்த்த.

114)

அசிரி பெ. ஆபாசமானவன். (செ. ப. அக.)

அசிவம் பெ. (அ+சிவம்) (மங்களமற்றது) கேடு தருவது. அசிவமாகிய அட்டகாசஞ் செய அமர் செய் நிசிசரக்குழு வெருவியே (தேவிமான். 9, 12).

.

அசினபத்திரிகை பெ. (சவ்வுத்தோல் இறக்கை யுடைய) வெளவால். (யாழ். அக.அனு.)

அசினம் பெ. (மான் முதலிய)

விலங்குகளின்

தோல். முனி மைந்தன் நன்னூலுடன் பூண் அசி (பாரதம். 3, 8, 17). அன்னம்

னத்தை

...

குடை

...

அசினம் ஈயின் பிரேதபதி இரங்கும் (சிவதரு.

7, 35).

அசீதளம்1 பெ. (அ+சீதளம்) குளிர்ச்சியின்மை. (சங்.

அக.)

86

அசுக்காட்டு-தல்

அசீதளம்

அசீதளம்2 பெ. கர்ப்பூரம். துல்லியம் பூலாங் கிழங்கு (தைலவ. தைல. 6/செ.ப.அக.)

அசீதி பெ. எண்பது. அதற்கு நீளம் அசீதியும் ஐந்து மாம் (சிவதரு. 12,86).

அசீதி' பெ. மங்கலமான ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களின் பிறப்பு. (சைவ. நெறி பொது.

15)

அசீர்1 பெ. தட்டுமுட்டுச் சாமான்கள். (யாழ். அக.அனு.) அசீர்2 பெ. ஆயத்தமாய் இருக்கை. (யாழ். அக.)

அசீர்த்தி பெ. உணவு செரியாமை, அசீரணம். அக்கினி தேவற்கு அசீர்த்தி என்று (ஒழிவி. கிரியைக். 3).

அசீரணசுரம் பெ. (உணவு) செரிக்காமையால் வரும் காய்ச்சல், (செ. ப. அக.)

அசீரணபேதி பெ. செரிக்காமையால் ஏற்படும் வயிற்றுப் போக்கு. (நாட், வ.)

அசீரணம் பெ. (அ+சீரணம்) 1.உணவு செரியாமை. ஓமம் அசீரணத்திற்கு நல்லது (நாட். வ.). 2.அழிவு படாதது. அசீரணமாஞ் சித்துருவால் சீவன் வாழும் (ஞானவா. உபசாந்தி. சிகித். 13).

அசீரணமருந்து பெ. (உணவு)

செரிக்காமைக்கு

மருந்து. இன்று பையனுக்கு கொடுத்திருக்கிறேன் (பே. வ.).

அசீரணமருந்து

அசீரணவாயு பெ. செரிக்காமையால் வயிற்றில் உண்டா

கும் காற்று. (நாட். வ.)

அசீரியம் பெ. பெ. அழியாதது.

அக்கிராகியம் அசீரியம்

அசங்கமாய் இருக்கும்... சிவசொரூபம் (சூத.எக்கிய,

உத்தர. பிரமகீதை 10, 13).

அசீவம் பெ. (அ+சீவம்) (சைனம்) நவ பதார்த்தங் களுள் ஒன்றான சடப்பொருள். சீவம் அசீவம் புண் ணியம் ... (சீவக. 2814 நச்.).

அசு பெ.

உயிர்வளி. (யாழ். அக.அனு.)

அசுக்காட்டு-தல் 5வி. ஏளனம் செய்தல். பசுக்கள் அசுக்காட்டும் ஆர்ச்சவம் (திருப்பா. 28 மூவா.).